Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் லிஸ்ட் இதுதான்! கரூர் & குமரியில் ட்விஸ்ட்? அறிவிப்பில் தாமதம் ஏன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்வதில் இழுபறி நிலவுகிறது. இதற்கான காரணம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்துப் பார்க்கலாம்.

லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேலைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேசியளவில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

What is the reason behind delay in Congress candidate list for tamilnadu

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வழக்கமாக இரண்டாம் கட்டத்தில் தான் லோக்சபா தேர்தல் நடக்கும். ஆனால், இந்த முறை முதல்கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.

காங்கிரஸ்: இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மற்ற கட்சிகளை விட திமுக தான் முதலில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இறுதி செய்தது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குப் புதுச்சேரி உட்பட மொத்தம் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட போதிலும் காங்கிரஸ் மட்டும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

வேட்பாளர்களை இறுதி செய்வதில் இழுபறி நிலவுவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே காங்கிரஸின் உத்தேச வேட்பாளர் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதில் கன்னியாகுமரியில் விஜய் வசந்த், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் பெயர்கள் உள்ளன. மேலும், கரூரில் ஜோதிமணி, திருவள்ளூரில், சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் செல்வகுமார், மயிலாடுதுறையில் பிரவீன் சக்ரவர்த்தி, கடலூரில் நா சே ராமச்சந்திரன், நெல்லையில் ராபர்ட் புரூஸ் போட்டியிடுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

உத்தேச பட்டியல்: முதலில் வந்த உத்தேச பட்டியலில் கடலூரில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி போட்டியிடுவார் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது வெளியாகியுள்ள உத்தேச பட்டியலில் அவருக்குப் பதிலாக நா சே ராமச்சந்திரன் பெயர் இடம்பெற்றுள்ளது. அதேபோல முன்பு வெளியான லிஸ்டில் கன்னியாகுமரியில் பீட்டர் அல்போன்ஸ் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், அவருக்குப் பதிலாக விஜய் வசந்த் பெயர் இடம்பெற்றுள்ளது.

வேட்பாளர்களை இறுதி செய்வதில் டெல்லி தலைமைக்கும் காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததே இந்த தாமதத்திற்குக் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர் தேர்வுக்காகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கடந்த சில நாட்களாகவே டெல்லியில் தான் இருக்கிறார். நேற்று மட்டும் வேட்பாளர் தேர்வு தொடர்பாக 3 கட்ட ஆலோசனை நடந்த நிலையில், இரவு 1 மணி வரை ஆலோசனை நீட்டித்துள்ளது.

கருத்து வேறுபாடு: ஏற்கனவே சிட்டிங் எம்பியாக இருந்தாலும் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி இருக்கிறார். அதேநேரம் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தி இருக்கிறது. சில தொகுதிகளில் டெல்லி தலைமை கூறும் வேட்பாளர்களை ஏற்கத் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மறுத்துள்ளனர்.

குறிப்பாகக் கரூர் தொகுதியில் ஜோதிமணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் தொகுதியில் ஜெயக்குமார், சசிகாந்த் செந்தில், ரஞ்சன் குமார் என்று மும்முனை போட்டி நிலவும் நிலையில், அங்கே சசிகாந்த் செந்திலுக்கு வாய்ப்பு தர டெல்லி தலைமை விரும்புகிறது. அதற்கு ஜெயக்குமார் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேபோல குமரியில் கிறிஸ்தவர் ஒருவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

இன்று அறிவிப்பு: இப்படி வேட்பாளர்கள் தேர்வில் டெல்லி காங்கிரஸ் தலைமைக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமைக்கும் உடன்பாடு ஏற்படாமல் போனதே வேட்பாளர்களை அறிவிப்பில் தாமதம் ஏற்படக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. புதன்கிழமையே காங்கிரஸ் லிஸ்ட் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் இருப்பதால் இன்றே வேட்பாளர் அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+