சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருணாநிதி சிலை திறப்பு விழா.. முதலில் நோ சொல்லிவிட்டு பிறகு டபுள் ஓகே சொன்ன ராகுல்.. பரபர பின்னணி!

Google Oneindia Tamil News

Recommended Video

    அறிவாலயத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா!

    சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழாவில் முதலில் பங்கேற்க இயலாது என சொல்லிவிட்டு பிறகு பங்கேற்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை திறக்கப்படும் என திமுக அறிவித்தது. இதையடுத்து அந்த விழா இன்று நடைபெற்றது. இந்த சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், தேசிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாகவே கருதப்பட்டது.

    சந்தேகம்

    சந்தேகம்

    இந்த நிலையில் ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வீரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் முதலில் கலந்து கொள்ளமாட்டேன் என கூறயிருந்தார். இதனால் அவரது வருகை என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

    முரண்பாடு

    முரண்பாடு

    இந்நிலையில் ராகுலுக்கும் ஸ்டாலினுக்கும் பிரச்சினை இருப்பதால்தான் ராகுல் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என செய்திகள் உலவத் தொடங்கின. இதையடுத்து சோனியாவுடன் தானும் கலந்து கொள்வதாக ராகுல் அறிவித்தார்.

    திமுக விழாவில்

    திமுக விழாவில்

    இதற்கு காரணம் என்ன என்பது குறித்து தகவலறிந்த வட்டாரங்களிடம் கேட்ட போது 5 மாநில தேர்தல் வெற்றியால் ராகுல் மகிழ்ச்சியாக இருக்கிறார். இதனால் கூட்டணியின் முக்கிய கட்சியான திமுகவின் விழாவில் கலந்து கொள்வது என முடிவு செய்தார்.

    உத்வேகம்

    உத்வேகம்

    அது மட்டுமல்லாது திமுக விழாவில் ராகுல் பெரிதும் ஆர்வம் காட்டி வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே 5 மாநில தேர்தல் வெற்றி ராகுல் காந்திக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளதாகவே கருதப்படுகிறது.

    English summary
    Here is the reason behind Rahul's participation in Karunanidhi statue opening ceremony.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X