பொன்முடி தரப்பு முன்வைத்த "அந்த" முக்கிய வாதம்.. உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு காரணமே இதுதானாம்
சென்னை: பொன்முடி வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ள நிலையில், இதற்கு பொன்முடி தரப்பு முன்வைத்த ஒரு முக்கிய வாதமே முக்கிய காரணம் என்று திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ தெரிவித்துள்ளார்.
திமுக அமைச்சராக இருந்த பொன்முடி கடந்த 2006-11 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விடுவித்த போதிலும், சென்னை ஐகோர்ட் இருவரையும் குற்றவாளியாக அறிவித்து 3 ஆண்டுகள் தண்டனை அளித்தது. இதையடுத்து உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி தனது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார்.
பொன்முடி வழக்கு: இதற்கிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இது பொன்முடிக்கு மிகப் பெரிய நிம்மதியைக் கொடுத்துள்ளது.
திருக்கோவிலூரில் இடைத்தேர்தல் நடக்குமா நடக்காதா? பொன்முடி தீர்ப்பிற்கு பிறகு என்ஆர் இளங்கோ பரபர
இதற்கிடையே பொன்முடி வழக்கு தொடர்பாக திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ சில முக்கிய விளக்கங்களைக் கொடுத்துள்ளார். குறிப்பாக இந்த வழக்கில் பொன்முடிக்கு எதிரான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட என்ன காரணம் என்பதையும் அவர் விளக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வாதங்களை முன்வைத்தோம்.
என்.ஆர் இளங்கோ: குறிப்பாக விடுதலை எதிர்த்த மேல்முறையீட்டுத் தீர்ப்புகளைப் பொறுத்தவரை எப்போதும் இரண்டு கருத்துகள் இருந்தால்.. அப்போது விடுதலையைத் தான் உறுதி செய்ய வேண்டும். வேறு ஒரு பார்வை இருக்கிறது என்பதற்காக மட்டுமே சந்தேகத்தின் அடிப்படையில் விடுதலையை மாற்றி தண்டனை தர முடியாது என்ற வாதத்தை முன்வைத்தோம்.
உச்ச நீதிமன்றம் இதை முதல் நோக்கு வழக்காக எடுத்துக் கொண்டது. அதாவது விடுதலை தீர்ப்புகளை மாற்றி எழுதும் போது வேறு ஒரு பார்வை இருக்கலாம் என்ற காரணத்தினால் மட்டும் விடுதலையை மாற்றி தண்டனை தர முடியாது. மேலும், இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் கருத்துகள் பொன்முடிக்கு ஆதரவாக இருப்பதையும் சுட்டிக்காட்டினோம்.
குற்றவாளி இல்லை: ஒரு வேளை சில ஆண்டுகள் கழித்து மேல்முறையீட்டு மனுவில் பொன்முடிக்கு ஆதரவான தீர்ப்பு கிடைத்தால் இந்த தகுதிநீக்கத்தால் அவர் பெற்ற இழப்புகளை யாராலும் சரி செய்ய முடியாது என்ற கருத்தைச் சொன்னோம். இதை ஏற்று உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. அவர் குற்றவாளி இல்லை என்பதை முடிவு செய்ய மேல்முறையீட்டு மனு இருக்கிறது. அதில் முடிவெடுக்க 2 ஆண்டுகள் ஆகலாம். இருப்பினும், பொன்முடி தீர்ப்பில் இரு கருத்துகளுக்கு உட்பட்டது என்பதை உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொண்டது" என்றார்.
அதாவது குற்றவாளி என்று 100 சதவிகிதம் நிரூபிக்கப்படாமல் வெறும் சந்தேகம் மட்டும் இருந்தால்.. அதை வைத்து மட்டும் சம்மந்தப்பட்ட நபர் குற்றவாளி என்று சொல்ல முடியாது என்பதே என்ஆர் இளங்கோ சொல்ல வருகிறார்.
-
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications