என்ன ஆனது உம்மன் சாண்டிக்கு? மரணத்திற்கு முன் நடந்தது என்ன? பரபரப்பு பின்னணி!
சென்னை: கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தனது 79 வயதில் பெங்களூர் மருத்துவமனையில் காலமானார்.
2 முறை கேரளா முதல்வராக பதவி வகித்த உம்மன் சாண்டி காலமானார். பெங்களூரில் சிகிச்சை பெற்ற நிலையில் உம்மன் சாண்டி காலமானார். கேரளாவில் காங்கிரஸ் கட்சி வளர்வதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் உம்மன் சாண்டி. கேரள முதல்வராக 2004-06 மற்றும் 2011-16 ஆகிய இரண்டு முறை உம்மன் சாண்டி பதவி வகித்தார்.

உம்மன் சாண்டி தனது 27 வயதில் 1970 மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தனது அரசியல் பணியை தொடங்கினார். பின்னர் அவர் தொடர்ந்து 11 தேர்தல்களில் வெற்றி பெற்றார்.
அங்கே காங்கிரஸ் கட்சியின் முகமாகவும் இருந்தார். 2 முறை முதல்வராக இருந்தவர் ஆட்சியின் கடைக்கட்டத்தில் சூர்ய மின் சக்தி கொள்முதல் ஊழல் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதால் கடுமையான அவப்பெயருக்கு உள்ளானார்.
இதில் பாலியல் ரீதியாகவும் சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இந்த தொடர் குற்றச்சாட்டுகள் காரணமாக கர்நாடகாவின் காங்கிரஸ் கட்சியின் மேற்பார்வையாளராக உம்மன் சாண்டி அனுப்பப்பட்டார். கேரள அரசியலில் இருந்து இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டவர் அதன்பின் அப்படியே பெங்களூரில் செட்டில் ஆனார்.
பெங்களூரில் கடந்த சில நாட்களாக அமைதியாக அரசியல் ரீதியாக எந்த விஷயங்களிலும் தலையிடாமல் உம்மன் சாண்டி இருந்தார். லோக்சபா தேர்தலின் போது ஆக்டிவாக இருந்தவர் கர்நாடக சட்டசபை தேர்தலின் போது பெரிதாக ஆக்டிவ் இன்றி காணப்பட்டார்.
பெரிதாக அவர் எந்த கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் அவருக்கு வயோதிகம் காரணமாக உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன. முக்கியமாக அவருக்கு இதய பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆக்டிவ் அரசியலில் இருந்து விலகி வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அவருக்கு கடந்த வாரம் உடல்நிலை மோசமான காரணத்தால் பெங்களூரில் உள்ள அவரின் வீட்டில் இருந்து மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று காலை அவரின் உடல்நிலை மோசமானதால் அவர் அவசர சிகிச்சை பிரிவிற்கு பிற்பகல் மாற்றப்பட்டார்.
இதையடுத்து இரவு முழுக்க அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு இதய பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மூச்சு விடுவதில் கடும் சிரமம் நிலவியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உம்மன் சாண்டி காலமானார். அவரின் மகன் சார்பாக உம்மன் சாண்டியின் பேஸ்புக் பக்கத்தில் அவரின் மரணம் பற்றி தெரிவிக்கப்பட்டது.
அப்பா காலமாகிவிட்டார் என்று மட்டும் ஒரே வரியில் போஸ்ட் செய்யப்பட்டது. அவரின் உடல் கேரளாவிற்கு கொண்டு வரப்பட்டு அங்கே இறுதிச்சடங்குகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயநாடு வழியாக அவரின் உடல் இன்று மாலை கேரளாவிற்கு கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. பெங்களூரில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இன்று உம்மன் சாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.
காங்கிரஸ் கட்சியினர் இடையே அவரின் மறைவு பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications