சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை உலுக்கிய.. ராஜேஸ்வரி கொலைக்கு.. "இதுதான்" காரணமாம்.. போலீசார் ஷாக்
சென்னை: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி என்ற பெண் கொலை செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என்று ரயில்வே போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
மெரினா அருகே பழ வியாபாரம் செய்துவரும் ராஜேஸ்வரி என்ற பெண்தான் இரண்டு நாட்களுக்கு முன் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வெட்டப்பட்டார். கடற்கரை- தாம்பரம் ரயிலில் பயணம் செய்து வந்த இவர் பணி முடித்துவிட்டு சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி உள்ளார். அதே ரயிலில் ராஜேஸ்வரியுடன் ஒருவர் பயணம் செய்துள்ளார். அவரை நெருக்கமாக கண்காணித்து உள்ளார்.

இந்த நிலையில் ராஜேஸ்வரி இறங்கும் நேரம் பார்த்து நொடியில் அவரை சரமாரியாக கத்தியால் வெட்டி உள்ளார். அதோடு இல்லாமல் ரயில் எடுக்கும் வரை அவரை கத்தியால் வெட்டிய அந்த இளைஞர் அதே ரயிலில் அங்கிருந்து தப்பித்து ஓடி இருக்கிறார்.
ரத்த வெள்ளத்தில் படுகாயங்களோடு ராஜேஸ்வரி மிதந்து உள்ளார். இதையடுத்தே ரயில்வே போலீசார் உடனே அவரை மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆஜர்படுத்தினர். அன்று இரவு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு இரவு முழுக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
காயங்கள் அதிகமாக இருந்ததால் அவருக்கு ரத்த போக்கும் அதிகமாக இருந்தது. அதேபோல் அவரின் உடல் உறுப்புகள் பல வெட்டப்பட்டு இருந்ததால் அவசர ஆபரேஷனும் செய்யப்பட்டது. ஆனால் ரத்து போக்கு, உறுப்புகள் சேதம் காரணமாக அவர் மரணம் அடைந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகும் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பின் காதல் அல்லது பண விவகாரம் காரணமாக இருக்கலாமா என்று விசாரணை நடத்தப்பட்டு வந்தது .
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து தப்பிச் சென்ற குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி மும்முரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர். கத்தியால் குத்திவிட்டு தப்பிய மர்ம நபர் யார்? ராஜேஸ்வரிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? என்று விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த கொலைக்கு குடும்ப, திருமண உறவு மோதலே காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது. சொத்து ரீதியாகவும் நில ரீதியாகவும் நிலவி வந்த மோதலே இந்த கொலைக்கு காரணம் ஆகும். நீண்ட காலமாக நிலவி வந்த குடும்ப பிரச்சனை கொலையில் வந்து விட்டதாக கூறப்படுகிறது.
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளி உட்பட ஐந்து பேர் கோவளத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கண்காணிப்பு: பாதுகாப்பு: இந்த நிலையில்தான் சென்னையில் உள்ள ரயில்வே நிலையங்கள் அனைத்திலும் திடீரென போலீஸ் பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி ரயில்வே போலீசார், பாதுகாப்பு படைக்கான மத்திய போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
ரயிலிலும் சிலர் பாதுகாப்பிற்காக பயணம் செய்கிறார்கள். சைதாப்பேட்டையில் நடந்த கொலைக்கான காரணம் தெரியாத காரணத்தால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரயில்வே நிலையத்திற்குள் செல்லும் எல்லா பயணிகளும் இதனால் முறையாக சோதனை செய்யப்பட்டு அதன்பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications