சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"2001 டிட்டோ".. ஸ்டாலினின் முதல் குறியே "இவர்"தான்.. ஆபரேஷன் திமுக.. தள்ளாடும் கட்சிகள்..!

எடப்பாடி பழனிசாமியின் முக்கியத்தை முதல்வர் ஸ்டாலின் குறைத்து வருகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: ஓபிஎஸ்ஸுடன் முதல்வர் ஸ்டாலின் இணக்கமான போக்கை கையாண்டு வருவது, எடப்பாடி பழனிசாமியை மேலும் டென்ஷன் அடைய வைத்திருக்கிறதாம்..!

மறைந்த கருணாநிதியின் அரசியலை "ராஜதந்திரம்" என்பார்கள்.. ஆளுமையுடன், அனுபவமும், நுணுக்கங்களையும் கையாண்டதாலேயே ராஜதந்திரியாகவே இருந்தார் கருணாநிதி. இப்போது முக ஸ்டாலின் செய்வதையெல்லாம் பார்த்தால், அச்சுஅசல் அதுபோலவே ஒரு ராஜதந்திரத்துடன் ஆட்சி நடத்துவதுபோலவே தெரிகிறது.

முதல் குறியே எடப்பாடி பழனிசாமியாக இருக்கிறார்.. எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது கிட்டத்தட்ட கேபினட் பதவி போன்றது.. அதிகாரம் மிக்கது.. ஓரளவு பலம் பொருந்திய எடப்பாடி பழனிசாமியை 2 விதமாக அட்டாக் செய்து, அதன்மூலம் அவரது செல்வாக்கை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளாராம் ஸ்டாலின்.

ஸ்டாலின் முழு முயற்சி.. செங்கல்பட்டு தடுப்பூசி மையத்திற்கு விரைந்த பாரத் பயோடெக் அதிகாரிகள்.. ஆய்வு ஸ்டாலின் முழு முயற்சி.. செங்கல்பட்டு தடுப்பூசி மையத்திற்கு விரைந்த பாரத் பயோடெக் அதிகாரிகள்.. ஆய்வு

ஸ்டாலின்

ஸ்டாலின்

பதவியேற்றதில் இருந்தே ஓபிஎஸ், முதல்வர் ஸ்டாலினிடம் இணக்கமான போக்கையே கடைப்பிடித்து வருகிறார்.. இதுவரை நான்கைந்து முறை ஸ்டாலினை மனம் திறந்து பாராட்டிவிட்டார்.. திமுக அமைச்சர்களும் இப்போதுவரை ஓபிஎஸ்ஸை, உரிய முக்கியத்துவம் தந்து, தங்கள் இருக்கைகளுக்கு பக்கத்திலேயே அவரையும் உட்கார வைத்து "துணை முதல்வர்" என்று வாய்க்கு வாய் கூப்பிட்டு, புளகாங்கிதம் அடைய வைத்து வருகின்றனர்.

பிளான்

பிளான்

அதேபோல ஸ்டாலினும், ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம் தந்துவிட்டு, எடப்பாடி பழனிசாமியை கண்டுகொள்ளாமல் இருப்பது என்ற ஒரு பிளானை போட்டு வருகிறாராம்.. எடப்பாடி பழனிசாமி இதுவரை முதல்வர் ஸ்டாலினின் செயல்பாட்டை விமர்சித்து பல அறிக்கைகள் விடுத்து வருகிறார்..

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

ஆனால், இது எதையுமே ஸ்டாலின் இதுவரை கண்டுகொள்ளவும் இல்லை.. அதற்கு முக்கியத்துவம் தரவும் இல்லை. ஆனால், ஓபிஎஸ் ஏதாவது கோரிக்கை வைத்தால் மட்டும் டக்கென ஆக்‌ஷன் எடுக்கிறார். அதேபோல, ஓபிஎஸ்ஸுக்கு அவர் குடியிருக்கும் வீட்டை தொடர்ந்து வழங்கிட முடிவு செய்தார் ஸ்டாலின்.. இதுவும் எடப்பாடிக்கு கடுப்பை கிளப்பி உள்ளது..

மோதல்

மோதல்

இதற்கெல்லாம் காரணம், அதிமுக தலைமைகளுக்குள் மேலும் மோதல் போக்கு ஏற்பட்டால், அது திமுகவை மேலும் பலப்படுத்தும் என்று கணக்கு போடுகிறாராம்.. அத்துடன், வரப்போகும் தேர்தலில் திமுகவை மாஸ் வெற்றி பெற, எடப்பாடி பழனிசாமி ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகவும், அதிமுகவின் வாக்கு வங்கியை இப்போதிருந்தே சரியச்செய்யும் முயற்சிதான் இது என்றும் கூறப்படுகிறது.

அன்பழகன்

அன்பழகன்

2001-ல் இப்படித்தான் நடந்தது.. ஜெயலலிதா முதல்வராக இருந்தார்.. எதிர்க்கட்சி தலைவராக இருந்த அன்பழகன் கேட்ட கேள்விக்கெல்லாம் டக் டக்கென பதிலளித்தார்.. அன்பழகனின் கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலித்து நடவடிக்கையும் எடுத்தார்... இதனால், கருணாநிதிக்கும் அன்பழகனுக்கும் இடையே ஈகோ மோதலை உருவாக்க ஜெயலலிதா முயல்வதாக அப்போது ஒரு பேச்சு எழுந்தது.. கிட்டத்தட்ட இதுபோல ஒரு நுட்ப அரசியலையே ஸ்டாலின் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.. இதை எடப்பாடி பழனிசாமி எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!

English summary
What is the reason for MK Stalin giving importance to OPS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X