மாற்றி மாற்றி கூட்டணி வைத்த நிதிஷ் குமாரின் ஸ்டண்ட் பாலிடிக்ஸ்! பீகார் தேர்தலில் கணக்கு கை கூடுமா?
சென்னை: பீகார் அரசியலில் நிதிஷ் குமார் மிக முக்கியமானவர்.. ஒவ்வொரு தேர்தலின்போதும் பேசுபொருளாகவே இருந்து வருகிறார்.. 20 வருடங்களாக முதலமைச்சர் பதவியில் உள்ளவர் இந்த முறையும் ஆட்சியை தக்க வைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. நிதிஷ் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறாரோ அந்தக் கூட்டணிதான் இதுவரை வெற்றி பெற்றிருக்கிறது. இது திட்டமிட்ட ஒன்றா? யதேச்சையாக நடந்ததா? நிதிஷ் குமார் கூட்டணிக்கு தரப்படும் முக்கியத்துவம் என்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
நிதிஷ்குமாரை பொறுத்தவரை, அவரது கட்சி ஐக்கிய ஜனதா தளம் ஒருமுறைகூட தனிப்பெரும்பான்மை பெற்றதில்லை என்றாலும், 7% குர்மி, கோரி சமூகங்கள், 26% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று 33% வாக்குகளை நிதிஷ்குமார் தக்கவைத்து வருகிறார். மேலும் மகாதலித்துக்கள், பெண்களின் வாக்குகளையும் குறிப்பிட்ட வீதத்தை பெற்று வருகிறார்.

சறுக்கல்கள்
அதேசமயம், வேலைவாய்ப்பு , தொழில்மயமாக்கலில் குறைபாடுகள் போன்றவையாகும்.. பெண்களின் வாக்குகளை கணிசமாக வைத்திருக்கும் நிதிஷ் குமாருக்கு இளம் வயது வாக்காளர்களின் ஆதரவு பெருமளவு கிடைக்காமலேயே உள்ளதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
அதேபோல வக்ஃப் தொடர்பான சர்ச்சைகள் வெடித்ததால், ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து பல இஸ்லாமிய தலைவர்கள் வெளியேறியதையடுத்து, இஸ்லாமிய மக்களிடையே இருந்த ஆதரவும் நிதிஷூக்கு குறைந்து விட்டதாகவே கருதப்படுகிறது.
யார் முதலமைச்சர்?
நீங்கள் விரும்பும் முதலமைச்சர் யார் என்று கருத்து கணிப்பில், நிதிஷ் குமாருக்கான மதிப்பீடு இந்த முறை குறைந்து காணப்பட்டது. பீப்பிள்ஸ் பல்ஸ் வெளியிட்டிருந்த கணிப்பில் தேஜஸ்வி யாதவ்: 32% நிதிஷ் குமார்: 30% பெற்றிருக்கிறார்கள்.. இது அந்தவகையில் 16 விழுக்காடாக நிதிஷின் செல்வாக்கு சரிந்து விட்டதாக சொல்கிறார்கள்.
சமீப கால தேர்தல்களில் நிதிஷ் குமாரின் முக்கியத்துவம் உயர்ந்திருக்கிறதே தவிர, அவரது செல்வாக்கு குறைந்துவிட்டதாகவும் பார்க்கப்படுகிறது. நிதிஷ் குமாரின் இந்த சறுக்கலுக்கும், சரிவுக்கும் பிரதான காரணமாக சொல்லப்படுவது அவரது நிலையற்ற கூட்டணி முடிவுகள்தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
நிதிஷ்குமார் அரசியல்
2000ல் முதல்முறையாக நிதிஷ்குமார் முதல்வரானார். ஆனால், போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால் ஒரு வாரத்திலேயே ஆட்சியை பறிகொடுத்தார். 2004ல் 2 எம்பி தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் மட்டுமே நிதிஷ் வெற்றி பெற்று, வாஜ்பாயி அரசில் மத்திய அமைச்சரானார். 2005-ல் பாஜக, ஆர்ஜேடியுடன் மாறி மாறி கூட்டணி அமைத்து முதல்வர் ஆனார்..
17 வருடங்களாக என்டிஏ கூட்டணியில் இருந்தவர், கடந்த 2013ல் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக, மோடி அறிவிக்கப்பட்டதுமே, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலகினார்... பிறகு 2015ல் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸூடன் இணைந்து மகாகத்பந்தன் கூட்டணியை அமைத்து வெற்றி கண்டார்..
மாறி மாறி கூட்டணி
2017ல் தேஜஸ்வி மீது தேஜஸ்வி மீதான மோதலில் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். மறுநாளே பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார். 2022-ல் பாஜகவுடன் கூட்டணியை முறித்து, மகாகத்பந்தன் கூட்டணிக்கு வந்து முதல்வரானார்.. 2024ல் மகாகத்பந்தன் கூட்டணியிலிரந்து விலகி என்டிஏவுக்கு சென்றார்..
இப்படி அடிக்கடி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி கொண்டாலும், நிதிஷ்குமார் முதல்வராகவே பதவியை வகித்துள்ளார்.. ஆனால், இதுவே அவர் மீதான நம்பகத்தன்மையையும் குலைத்துவிட காரணமாகிறது. அரசியல் லாபத்திற்காக யாருடனும் கூட்டணி வைப்பார் என்ற இஜையும் அவர் மீது உருவாக்கிவிட்டது.
இத்தனைக்கும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அங்கீகாரத்தை நிதிஷ்குமார் எட்டவேயில்லை..
மீண்டும் முதல்வர்?
எனினும், பாஜக மூத்த தலைவர்கள் நிதிஷ் குமாரை வரவேற்க இப்போதுகூட தயாராக இருக்கிறார்கள்.. ஆனால் உள்ளூர் தலைவர்கள் விரும்பவில்லை.. மீண்டும் முதல்வர் பதவி வழங்கக் கூடாது என வலியுறுத்திகொண்டிருக்கிறார்கள். முதல்வராக இல்லாவிட்டாலும், நிதிஷ் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்கிறார்கள்.. எது எப்படியோ, பீகார் அரசியலில் தவிர்க்க முடியாத மற்றும் ஆட்சியை நிர்ணயிக்ககூடிய செல்வாக்கு பெற்றவராகவே நிதிஷ் குமார் திகழ்ந்து வருகிறார்.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications