சோசியல் மீடியா பிரபலம்.. இளைஞர்களின் ரோல் மாடல்.. நரம்பு வெடித்து பலியான பிரபல பாடி பில்டர்!
சென்னை: யூ டியூப் பிரபலமான பாடிபில்டர் ஜோ லிண்டர் தனது 30வது வயதில் நேற்று காலமானார். இவரின் மரணத்திற்கு அனியூரிசம் என்று நோய்தான் காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பாடிபில்டிங் கலாச்சாரம் தற்போது இளைஞர்கள், இளைஞிகள் இடையே பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. பலரும் தங்கள் உடலை மெருகேற்ற வேண்டும், பிட்டாக இருக்க வேண்டும் என்று பயிற்சிகளை செய்ய தொடங்கி உள்ளனர்.

முக்கியமாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கலாச்சாரம் காரணமாக பலரும் ஜிம்மிற்கு செல்வத்தையும், பயிற்சிகள் செய்வதையும் வழக்கமாக்கிக்கொள்ள தொடங்கி உள்ளனர். பலரும் உடலை வேகமாக ஏற்ற வேண்டும் என்று ப்ரோட்டின் பவுடர் எடுக்க தொடங்கி உள்ளனர்.
இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலே போய் சிலர் ஸ்டேராய்டு எடுக்கவும் தொடங்கி உள்ளனர். முக்கியமாக வேகமாக சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்று பலரும் ஸ்டேராய்டு எடுக்க தொடங்கி உள்ளனர். தீவிர உடற்பயிற்சி, அதீத ஸ்டேராய்டு பயன்பாடு காரணமாக பல இளைஞர்கள் மாரடைப்பு காரணமாக பலியாகும் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளன.
இந்த நிலையில்தான் யூ டியூப் பிரபலமான பாடிபில்டர் ஜோ லிண்டர் தனது 30வது வயதில் நேற்று காலமானார். இவர் ஜெர்மனியை சேர்ந்தவர். பாடிபில்டிங் பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை YouTube இல் பகிர்வதில் ஜோ லிண்டர் பிரபலமானவர். இளைஞர்கள் இடையே மிகப்பெரிய சூப்பர் ஹீரோவாக, சிக்மா ஆணாக ஜோ லிண்டர் திகழ்ந்து வந்தார். பாடிபில்டிங் தொடர்பாக தினசரி செய்யும் பயிற்சிகள் மற்றும் ஆன்லைனில் அவர் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களால் ஜோ பெரிய அளவில் கவனிக்கப்பட்டார் .
அவர் ஜோஸ்தெடிக்ஸ் பயிற்சி அமைப்பு என்று தனது சொந்த பயிற்சித் திட்டத்தை உருவாக்கி அதை இளைஞர்கள் இடையே பிரபலமாகி கொண்டு சென்றார்.அவரது காதலியான சக பாடிபில்டர் நிச்சா உடன் இணைந்து இருவரும் இன்ஸ்டாகிராமில் பாடி பில்டிங் தொடர்பாக ரீலிஸ் போட்டு வந்தார். இந்த நிலையில்தான் நேற்று மாலை அவர் நரம்பு வெடித்து பலியானார். இந்தச் செய்தியை அவரது நெருங்கிய நண்பரான நோயல் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்தார்.
இணையத்தில் ஜோ பலருக்கு ரோல் மாடலாக இருந்தார். அவரது திடீர் மறைவு பாடிபில்டிங் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிச்சாவின் இன்ஸ்டாகிராம் பதிவில், அனியூரிசம் என்று நோயின் காரணமாக ஜோ காலமானார் என்று கூறி உள்ளார்.

அனியூரிசம் என்றால் என்ன?: அனியூரிசம் என்பது இரத்த நாளத்தின் சுவர் பகுதிகளில் உள்ள பலவீனத்தால் ஏற்படும் நோயாகும். இந்த பலவீனத்தால் ஏற்படும் இரத்த நாளத்தில் வீக்கம் ஏற்படும். இதனால் ரத்த ஓட்டம் தடைபடும். இந்த பகுதிகளில் ரத்தம் செல்ல முடியாமல் தேங்குவதால் பலூன் போல அந்த பகுதிகள் வீக்கம் அடையும்.
அனியூரிசம் காரணமாக நரம்புகள் வெடித்து உட்புற இரத்தப்போக்கு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம். அதேபோல் பார்க்கின்சன் நோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நோயால் நரம்புகள் வெடிக்கும் வரை பெரும்பாலும் அறிகுறிகள் இருக்காது. சிறிய சிறிய அறிகுறிகளை உடனடியாக கண்டுகொண்டால் முன்கூட்டியே சிகிச்சை மேற்கொண்டு இதில் இருந்து விடுபட முடியும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications