சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரேஷன் கடைகள் இந்த 4 நாட்களும் இயங்காது.. அதிரடியாக வந்த அறிவிப்பு.. என்ன காரணம்..?

ரேஷன் கடை ஊழியர்கள் 4 நாள் மாபெரும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அதனால் இதனை கண்டித்து ரேஷன் கடை ஊழியர்கள் வருகிற ஜூன் 7 முதல் 10ம் தேதி வரை சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 3 வருடங்களாகவே தொற்று பீடித்து கொண்டு வருகிறது.. இதில், முதல் 2 வருடங்களில் தொற்றை சமாளிக்கவும், குறைக்கவும், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதற்கு ஏராளமான நிதியை செலவிடும் சூழலும் ஏற்பட்டது.. அதனால்தான், அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

ரேஷன் அட்டைகள் குறித்த முக்கிய அறிவிப்பு.. மாற்றம், திருத்தம் தேவையா?.. இதோ இதை படிங்கரேஷன் அட்டைகள் குறித்த முக்கிய அறிவிப்பு.. மாற்றம், திருத்தம் தேவையா?.. இதோ இதை படிங்க

 ஊழியர்கள்

ஊழியர்கள்

இதற்கு பிறகு, தொற்று பரவல் ஓரளவு குறைய ஆரம்பித்ததுமே, கடந்த 2021ல், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு வழங்கியது.. பிறகு, மறுபடியும் ஜூலையிலும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது... இதை பார்த்ததும், தமிழக அரசு ஊழியர்களும், மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.. இதற்காக போராட்டங்களையும் நடத்தினர்.

 அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்கள்

உடனே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை 17% -ல் இருந்து 31 சதவிகிதமாக அரசு உயர்த்தி உத்தரவிட்டது.. ஆனால், ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டும் இந்த அகவிலைப்படியை வழங்கவில்லை.. எனவே, தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஏற்கனவே வலியுறுத்தியும் இருந்தார்.

 நாகை கூட்டம்

நாகை கூட்டம்

நீண்ட நாட்களாக எந்த ஊதிய உயர்வையும் பெறாமல், நியாய விலைக் கடை ஊழியர்கள், பணியை மட்டும் மேற்கொண்டு வருவதாகவும், நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை, உடனடியாக விரைந்து வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நாகையில் நடந்தது.. இந்த கூட்டத்தில், அகவிலையைப்படியை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 அறிவிப்பு

அறிவிப்பு

இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க போராட்டக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சொன்னதாவது: "ஜுன் 10-ந் தேதி மாநிலம் முழுவதும் பணியாளர்களைத் திரட்டி, சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதற்கான காத்திருப்பு போராட்டம் நடத்த போகிறோம்.. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தோடு இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஜுன் மாதம் 7,8,9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போகிறோம்" என்று அறிவித்துள்ளார்.

English summary
What is the reason for the ration shop employees declaring a strike from june 7 to 10 ரேஷன் கடை ஊழியர்கள் 4 நாள் மாபெரும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X