ஏன் திடீரென சீறினார் நித்யானந்தா சீடர்.. ஒன்னும் புரியலையே
நித்யானந்தா மீது ஆண் சீடர் புகார் அளிக்க என்ன காரணம்?
சென்னை: நித்யானந்தா மேல் சீடர் பரபரப்பு புகார் கூறியும் இதுவரை வாய் திறந்து அதற்கு பதிலளிக்காதது புதிராகவே உள்ளது.
வைரமுத்துவின் ஆண்டாள் விவகாரத்தில் சாமியார் உடையணிந்த ஒரு சீடர் அசிங்க அசிங்கமாக பேசி வீடியோவை வெளியிட்டிருந்தார். அதேசீடர்தான் இப்போது நித்யானந்தா மீது மீடூ புகார் அளித்துள்ளார்.

இப்போதான் தைரியம் வந்ததா?
இது தொடர்பான வீடியோவில் "அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே" என்ற கருத்தை மனதில் வைத்து மக்களுக்கு ஒரு உண்மையை தெளிவுப்படுத்துகிறேன் என்று ஆரம்பித்து, "நான் நித்யானந்தா சாமியால 2014-ம் ஆண்டு மே மாதம் அனைவரின் முன்னிலையிலும் கபளீகரம் செய்யப்பட்டேன், இதை சொல்ல எனக்கு இப்போதான் தைரியம் வந்தது" என்று சொல்லி முடிக்கிறார். கபளீகரம் செய்யப்பட்டதாக கூறிய அவர் மறக்காமல் நித்தியானந்தம் என்று சொல்லி தனது பேச்சை முடிப்பதுதான் பெரிய காமெடி.
ஏன் திட்ட வேண்டும்?
இந்த வீடியோ கடந்த 4 தினங்களாகவே இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இதில் பல சந்தேகங்கள் எழுகின்றன. நித்யானந்தா மேல இருக்குற அளவு கடந்த அன்பு, பக்தியினால்தான் வைரமுத்துவை அப்படி திட்டி தீர்த்தார். ஆனால் சம்பவம் நடந்தது 2015-ல் என சீடர் சொல்கிறார். ஆண்டாள் விஷயம் இப்போது நடந்தது. 2015-ல் சீடர் கபளீகரம் செய்யப்பட்டிருந்தால் ஆண்டாள் விஷயத்தில் வாயே திறந்திருக்க மாட்டாரே? அப்படியே நித்யானந்தாவுக்கு ஆதரவாக பேசுவதானால் வேறு யாராவது பேசியிருப்பார்களே?

நித்யானந்தம்
கபளீகரம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட சீடரே எதற்காக வைரமுத்துவை திட்டியும், நித்யானந்தாவை ஆதரித்தும் வீடியோ வெளியிட வேண்டும்? அதேபோல, வைரமுத்துவை திட்டும் வீடியோவில் கடைசியாக நித்யானந்தம் என்று சொல்லி முடித்திருந்தார். அதேபோல நித்யானந்தத்தை குற்றஞ்சாட்டும் வீடியோவிலும் நித்யானந்தம் என்று சொல்லி முடிக்கிறார்?

எதற்காக இந்த வீடியோ?
மேலும் இதுவரை இந்த புகாருக்கு நித்யானந்தா எந்த பதிலும், மறுப்பும் சொல்லாதது ஏன் என்றும் தெரியவில்லை. எனவே இந்த வீடியோவை தற்போது சீடர் வெளியிட வேண்டிய அவசியம் தெரியவில்லை. பரபரப்புக்காக வீடியோ வெளியிடப்பட்டதா, அல்லது பெண்களை போல ஆண்களும் நித்யானந்தாவிடம் உறவில் இருக்கிறார்கள் என்பதை விளம்பரப்படுத்த வீடியோ வெளியிடப்பட்டதா என தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications