மலேசிய தொழில் பாசமா.. சமுதாய பாசமா... அபுபக்கர் ரஜினியை சந்தித்த பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் சந்தித்து பேசிய விவகாரம் அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் காலை முதல் தலைப்புச் செய்தியாக இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினிக்கும் -அபுபக்கருக்கும் உள்ள தொடர்பு என்ன, அவர்கள் இருவரின் சந்திப்புக்கான பின்னணி என்ன என்பது பற்றி நாம் விசாரித்த போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் மலேசிய தொழிலதிபர் மாலிக் என்பவர் மூலம் நீண்டகாலமாகவே நட்புறவு இருந்து வருகிறது.

பிரசிடெண்ட் அபுபக்கர்

பிரசிடெண்ட் அபுபக்கர்

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் இயங்கி வரும் ஹோட்டல் கிளாரியன் என்ற 5 நட்சத்திர விடுதிக்கு சொந்தக்காரர் தான் ஹஜ் கமிட்டி தலைவரான அபுபக்கர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்ட இவர் சென்னையில் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக திகழ்கிறார். 4 நட்சத்திர அந்தஸ்துடன் இயங்கி வந்த கிளாரியன் ஹோட்டலை தனக்கிருந்த டெல்லி தொடர்புகள் மூலம் 5 நட்சத்திர ஹோட்டலாக தரம் உயர்த்தினார். வெறுமனே அபுபக்கர் என்றால் இவரை யாருக்கும் அடையாளம் தெரியாது, பிரசிடெண்ட் அபுபக்கர் என்றால் தான் இவர் அடையாளம் அறியப்படுவார்.

சகல உதவிகள்

சகல உதவிகள்

பிரசிடென்ட் அபுபக்கரை பொறுத்தவரை மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அதில் அமைச்சர்களாக இருக்கக்கூடிய சிறுபான்மை இனத்தை சார்ந்தவர்களுடன் அறிமுகம் ஏற்படுத்திக்கொள்வார். அவருக்கு குலாம் நபி ஆசாத்தும் ஒன்று தான், முக்தர் அப்பாஸ் நக்வியும் ஒன்று தான். மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் அபுபக்கர் தனக்கான லாபியை டெல்லியில் தொடர்வார். இன்றும் குலாம் நபி ஆசாத் சென்னைக்கு வந்தால் காங்கிரஸ்காரர்கள் கார் அனுப்புகிறார்களோ இல்லையோ, அபுபக்கர் தனது காரை அனுப்புவதுடன் அவரை வரவேற்று திருப்பி அனுப்புவது வரை கவனித்துக்கொள்வார்.

ஹஜ் கமிட்டி

ஹஜ் கமிட்டி

இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பதவியை கைப்பற்ற பல மாநிலங்களில் இருந்தும் பல இஸ்லாமிய செல்வந்தர்கள் முயற்சித்தும், அனைவரையும் ஓரங்கட்டி அந்தப் பதவியை லாவகமாக கைப்பற்றினார் என்றால் அதற்கு அவருக்கு இருந்த டெல்லி தொடர்புகளே காரணம். இதனிடையே தன்னிடம் தனிப்பட்ட முறையில் உதவிகோரி யாரேனும் நாடினால் தன்னால் முடிந்த உதவிகளை செய்யக்கூடியவர். ஆனால் அதேசமயம் இவர் ஒரு விளம்பர பிரியரும் கூட என அவருடன் நெருங்கி பழகும் சிலரே நம்மிடம் கூறினர்.

நட்பு

நட்பு

இந்திய அளவில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் அனைத்து ஆளுமைகளுடனும் நட்பு பாராட்டக் கூடியவர். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் நெருங்கி பழகக்கூடியவர். அபுபக்கருக்கு மலேசியாவிலும் தொழில்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அங்குள்ள மாலிக் என்பவர் தான் கபாலி திரைப்பட தயாரிப்புக்கு பின்புலமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கபாலி, காலா திரைப்படங்களின் டிக்கெட்டுகளை கொடுத்தால் கிளாரியன் ஹோட்டலில் 50% உணவுகட்டண தள்ளுபடியெல்லாம் அறிவித்திருந்தார் இந்த அபுபக்கர். ரஜினி மீது கொண்டுள்ள அன்பு காரணமாக இந்த தள்ளுபடியை கொடுப்பதாக அப்போது கூறியிருந்தார்.

அழைப்பு

அழைப்பு

இதனிடையே தமிழகத்தில் தன் மீது காவி முத்திரை பதிவதை விரும்பாத ரஜினிகாந்த், இஸ்லாமிய பிரமுகர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய நினைத்தாராம். ஆனால் அவரது முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. சி ஏ ஏ-வுக்கு எதிராக இஸ்லாமியர்கள் இத்தனை நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதனை ஆதரிக்கும் ரஜினியை சந்தித்து பேச இஸ்லாமிய அமைப்புகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் தனது நண்பரும், இந்திய ஹஜ் கமிட்டி தலைவருமான அபுபக்கரை வரவழைத்து ரஜினி ஒரு சந்திப்பை நிகழ்த்தி தாம் பொதுவான நபர் என்பதை வெளிக்காட்டியுள்ளார்.

ஆவேசம்

ஆவேசம்

குடியுரிமை சட்டத்தால் பாதிப்பில்லை என கூறும் ரஜினியை சந்தித்து சால்வை அணிவித்து போற்றி புகழும் அபுபக்கரை நினைத்தால் தங்களுக்கு கோபமும், அதிருப்தியும் தான் வெளிப்படுவதாக தெரிவிக்கின்றனர் சி ஏ ஏ எதிர்ப்பு போராட்ட குழுவினர். ரஜினியை வீடு தேடி சென்று சந்தித்து புகழும் அபுபக்கர், இத்தனை நாட்களாக மன்னடிக்கும், வண்ணாரப்பேட்டைக்கும் ஏன் வரவில்லை என அவர்கள் ஆவேச கேள்வி எழுப்புகின்றனர். ரஜினி மன நோகும் படி பேசினால் ஒருவேளை தனது அதிகார பதவிக்கு சிக்கல் ஏற்படுமோ என அவர் அஞ்சியிருக்கலாம் என விமர்சித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+