தெருநாய்களை லேசா நினைச்சுடாதீங்க! டேட்டா சயிண்டிஸ்ட் தரும் அதிர்ச்சியூட்டும் தகவல்!
சென்னை: தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அது குறித்த அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்களை பகிர்ந்துள்ளார் டேட்டா சயிண்டிஸ்டான தில்லை. குறிப்பாக நேற்று தென்காசியில் முதியவர் ஒருவரை தெருநாய் விரட்டி விரட்டி கடித்த நிலையில் இந்தப் பதிவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு;
''இந்தியாவில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் 2022 ஆம் ஆண்டில் 3.5 லட்சம், தமிழ்நாட்டில் 3லட்சம், ஆந்திராவில் 1லட்சம் நாய்க்கடி நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. கொரோனா ஊரடங்குக்கு பின் 6 கோடி தெரு நாய்கள் பெருகி உள்ளது. இந்தியாவில் ரேபிஸ் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 20,000 பேரைக் கொல்கிறது. இது உலகின் நாய் கடி வழக்குகளில் 36% ஆகும்.''

''ஒரு பிட்புல் நாய் தனது எஜமானியை கடித்து கொன்றது. 12 வயது சிறுமி ஒருவர் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் தெரு நாய்களால் தாக்கப்பட்டார் .உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, உலகிலேயே அதிக ரேபிஸ் இறப்புகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ரேபிஸ் இறப்புகளில் மிகவும் கவலைக்குரிய பகுதி என்னவென்றால், பதிவான இறப்புகளில் 30-60% 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளாகும்.''
''தெருநாய்கள் கும்பலால் 3 வயது குழந்தை கடித்துக் கொல்லப்பட்டது. ஜனவரி 2022 முதல் ஜூலை 2022 வரை, 14.50 லட்சத்துக்கும் அதிகமானோர் விலங்குகள் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 24 லட்சத்தைத் தாண்டியிருக்கும்.இதற்கிடையில், 2030ம் ஆண்டுக்குள் Rabies நோயை நாட்டிலிருந்து ஒழிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.''
''நாட்டில் தெருநாய்களின் எண்ணிக்கை, நாடாளுமன்றத்தில் அரசு அளித்த தகவலின்படி, 2019-ம் ஆண்டில் அவற்றின் மக்கள் தொகை சுமார் 1.2 கோடியாக இருந்தது.உத்திரப்பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தெருநாய்கள் அதிகம். கோவிட் லாக்டவுன் காலத்தில் தெருநாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.''
தெருநாய்களின் வெறி ஆட்டம் #thilli_info
— Dr.Thillli PhD 🎷🧬🎸🧬🎺🧬🎤🧬🥁🧬 (@thil_sek) February 8, 2024
இந்தியாவில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் 2022 ஆம் ஆண்டில் 3.5 லட்சம், தமிழ்நாட்டில் 3லட்சம், ஆந்திராவில் 1லட்சம் நாய்க்கடி வழக்குகளுடன் பதிவாகியுள்ளன.கொரானா ஊரடங்கு பின் 6 கோடி தெரு… pic.twitter.com/Dn2D1RPPs8
''வெறி நாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் தண்ணீர் கண்டு அஞ்சும்(Hydrophobia) நிலைக்கு தள்ளப்படுகிறார். கடைசியாக, அவர் இறந்துவிடுகிறார். இன்று பாராளுமன்ற கேள்வி நேரத்தில் கார்த்தி சிதம்பரம் அவர்கள் தெருநாய்கள் பிரச்சனை குறித்து பேசி உள்ளார். கொரானா ஊரடங்குக்கு பின் 6 கோடி தெரு நாய்கள் பெருகி உள்ளது. விரைவில் இந்த Epidemic problemkக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பாப்போம்.''
இதனிடையே தெருநாய்களுக்கு ஆதரவாக பேசி வரும் புளுகிராஸ் போன்ற தொண்டு அமைப்புகள் தாங்களே முன்வந்து தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கலாம் அல்லது அதற்கென தனி இடத்தை உருவாக்கி அங்கு கொண்டு சென்று பராமரிக்கலாம். அதைவிடுத்து அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதை அரசு ஒரு போதும் அனுமதிக்க கூடாது என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications