சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முத்துச்சாமி, ராஜ கண்ணப்பன், செந்தில் பாலாஜிக்கு வெயிட்டான போஸ்ட்.. மறைந்திருக்கும் ஸ்டாலின் மெசேஜ்!

Google Oneindia Tamil News

சென்னை: முத்துச்சாமி, ராஜ கண்ணப்பன், செந்தில் பாலாஜி ஆகிய முன்னாள் அதிமுக நிர்வாகிகளுக்கு செம வெயிட்டான துறைகளை ஒதுக்கீடு செய்துள்ளதன் மூலம் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள முக்கிய தலைகளுக்கு ஸ்டாலின் மறைமுகமாக ஒரு செய்தி கூறுவதாகவே பார்க்கப்படுகிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்று 33 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளார்கள். இதில் கடந்த சில ஆண்டுகளில் பல அதிருப்திகளால் அதிமுகவிலிருந்து விலகி திமுகவுக்கு வந்தவர்களில் முக்கியமானவர்கள் ராஜ கண்ணப்பன், முத்துச்சாமி, செந்தில் பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன்.

கோமியத்தை தண்ணீரில் மிக்ஸ் செய்து குடித்தால் கொரோனா வராது- சொல்வது உ.பி. பாஜக எம்எல்ஏ சுரேந்திரசிங் கோமியத்தை தண்ணீரில் மிக்ஸ் செய்து குடித்தால் கொரோனா வராது- சொல்வது உ.பி. பாஜக எம்எல்ஏ சுரேந்திரசிங்

இவர்களில் 4 பேருக்கும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை திமுக வழங்கியது. இதில் தங்கதமிழ்ச் செல்வன் தவிர மற்ற 3 பேரும் வென்றனர். இதையடுத்து அந்த 3 பேருக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கியுள்ளார் ஸ்டாலின்.

ராஜ கண்ணப்பன்

ராஜ கண்ணப்பன்

அதுவும் சாதாரண பதவியை அவர் தரவில்லை. ராஜ கண்ணப்பனுக்கு போக்குவரத்துத் துறை, செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை, முத்துச்சாமிக்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை வழங்கப்பட்டுள்ளது. மாற்று கட்சியிலிருந்து வந்தாலும் சொத்தை பதவி வழங்காமல் நல்ல பதவிகளை கொடுத்து அழகு பார்ப்பதால் புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதை ஸ்டாலின் நிரூபித்துள்ளார்.

மறைமுகம்

மறைமுகம்

ஆம், இது போல் மாற்றுக் கட்சியினருக்கு உரிய கவுரத்தை கொடுக்க வேண்டும் என்பது கருணாநிதியிடம் கற்ற பாடமாகும். பதவி கொடுத்ததோடு ஸ்டாலின் இன்னொரு தகவலையும் மறைமுகமாக சொல்லியுள்ளார். அதில் கட்சியை விட்டு வந்தால் திமுக உங்கள் கண்ணின் இமை போல் காக்கும்.

உழைப்பு

உழைப்பு

தாய் கழகத்தில் உழைப்புக்கு கிடைக்காத உரிய கவுரவம், மரியாதை உள்ளிட்டவை திமுகவில் தாராளமாக கிடைக்கும். நல்ல பதவிகளில் பொறுப்புகளில் அமரவைக்கப்பட்டு அழகுபார்க்கப்படுவர் என்ற மெசேஜை ஸ்டாலின் அதிமுகவினருக்கு சொல்லிக் கொள்வதாகவே பார்க்கப்படுகிறது.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

மேலும் ராஜ கண்ணப்பன், முத்துச்சாமி, செந்தில் பாலாஜி ஆகிய 3 பேரும் தங்கள் பதவிகளை வைத்து அதிமுகவில் அதிருப்தியில் உள்ளவர்களை தங்கள் வசம் இழுக்க முயற்சிக்கலாம் என்றும் அதற்கான பொறுப்பும், அதிகாரமும் இவர்களுக்கு ஸ்டாலின் வழங்கியுள்ளதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

English summary
DMK will always give suitable respect to AIADMK activist who join in DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X