"ஓபனா சொல்லிடுங்க.. வேற ஏதாவது பிளான் இருக்கா?".. ஸ்டாலினிடம் டிடிவி தினகரன் முக்கிய கேள்வி
நகைக்கடன் தள்ளுபடி குறித்து அறிவிக்கும்படி டிடிவி தினகரன் கோரியுள்ளார்
சென்னை: இன்றைய தினம் பட்ஜெட் கூடும் பரபரப்பான சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய கோரிக்கை ஒன்றை திமுக அரசிடம் முன்வைத்துள்ளார்.
கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தன்னுடைய தேர்தல் அறிக்கையில் திமுக கூறியிருந்தது.
அதேபோல, திமுக ஆட்சி அமைந்ததுமே, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினும் அறிவித்திருந்தார்.

தள்ளுபடி
எனினும், சொன்னதைபோல, உடனடியாக நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்படவில்லை... மாறாக, கூட்டுறவு வங்கிகளில் முறைகேடாக பலர் பணம் பெற்றிருப்பது தெரியவந்தது... இதையடுத்து, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்பட்டது.. இன்னும் கடன் தள்ளுபடியாகாமல் பலர் காத்திருக்கின்றனர்.. எதிர்க்கட்சிகள் இது தொடர்பான விமர்சனங்களை கையில் எடுத்தது..

எடப்பாடி பழனிசாமி
செல்லுமிடமெல்லாம் திமுக அரசை விமர்சித்தது. அதிலும் நகர்ப்புற தேர்தலில் தன்னுடைய பிரசாரங்களில் இதை மறக்காமல் பதிவு செய்துகொண்டே இருந்தார் எடப்பாடி பழனிசாமி.. இந்நிலையில், இன்றைய தினம் பட்ஜெட் கூட்டம் கூட உள்ளது.. அநேகமாக நகைக்கடன் தள்ளுபடி குறித்து இந்த கூட்டத்தொடரிலே அறிவிக்கப்படும் என்றும் நம்பப்பட்டு வருகிறது.. இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.. அத்துடன் முக்கிய கோரிக்கையும் விடுத்துள்ளார்.. அவர் விடுத்துள்ள அறிக்கை இதுதான்:

தள்ளுபடி
''நகைக்கடன் தள்ளுபடியில் உண்மை நிலை என்ன என்பது குறித்து திமுக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 5 பவுன் வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற கவர்ச்சியாக அறிவித்த திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதனைச் செயல்படுத்தாமல் புதுப்புது நிபந்தனைகளைப் போட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

துரோகம்
இதனால், 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி என்பதில் திமுக அரசு நம்பிக்கை துரோகத்தை அரங்கேற்ற திட்டமிட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, நகைக்கடன் தள்ளுபடியில் அரசின் நிலைபாடு என்ன என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும். மேலும், தள்ளுபடி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருப்போருக்கு 'நகையை மீட்காவிட்டால் ஏலம் விடப்படும்' என நோட்டீஸ் அனுப்புவதையும் உடனடியாக நிறுத்தவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
சட்டப்பேரவை கூட்டம்.. விஜய்க்கு காத்திருக்கும் சிக்கல்! பெரிய பிளானுடன் இறங்கும் எதிர்க்கட்சிகள்! -
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications