சென்னையில் உச்சம் தொட்ட "வெட்-பல்பு" வெப்பநிலை.. போச்சு போச்சு.. வல்லுனரின் வார்னிங்.. என்ன சிக்கல்?
சென்னை: சென்னையின் "வெட்-பல்பு" வெப்பநிலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக சென்னை பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த ஜி சுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.

மாத கடைசி ஆகிவிட்டது.. வெப்பநிலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டால் குறையாமல் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
சென்னையில் வெயில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எதிர்பார்க்காத அளவிற்கு வெயில் உச்சம் அடைந்து உள்ளது. தினசரி வெப்பநிலை முதல்நாளை விட அதிகமாக உள்ளது.
வெட்-பல்பு: இந்த நிலையில் சென்னையின் "வெட்-பல்பு" வெப்பநிலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக சென்னை பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த ஜி சுந்தரராஜன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் செய்துள்ள போஸ்டில், எச்சரிக்கை தகவல்: இன்று சென்னையின் "வெட்-பல்பு" வெப்பநிலை 31,3 டிகிரியை எட்டிவிட்டது. பொதுவாக இது "வெப்ப அளவு" (Temperature) மற்றும் வீத ஈரப்பதம் (humidity) கொண்டு "வெட்-பல்பு" வெப்பநிலை கணக்கிடப்படுகிறது. "வெட்-பல்பு" வெப்பநிலை 30 டிகிரியை தாண்டினால் மிகவும் சிக்கலாகும்.
32 டிகிரிக்கு மேல் சென்றால் சிக்கல் கூடுதலாகும், 35 டிகிரியை தொட்டுவிட்டால் உடல் தன்னை குளிர்விக்கும் தன்மையை இழந்துவிடும். இந்த பின்னணியில் "வெட்-பல்பு" நிலை 2050 வாக்கில் வரும் என்றுதான் நினைத்திருந்தோம், ஆனால் இப்போதே அந்த நிலையை நெருங்குவது கவலை அளிக்கக்கூடிய அம்சம்., என்று குறிப்பிட்டு உள்ளார்.
வெட்-பல்பு என்றால் என்ன? : வெப்பநிலையை கணக்கிட இரண்டு முறை பயன்படுத்தப்படும். ஒன்று ட்ரை பல்பு முறை. இதுதான் சாதாரண முறை. அதாவது காற்றில் உள்ள ஈரப்பதத்தை கணக்கிடாமல், அதன் பாதிப்பு இல்லாமல், வெப்பநிலை மானியை வைத்து காற்றின் வெப்பநிலையை கணக்கிடுவார்கள்.
நாம் தினமும் கணக்கிடும் வெப்பநிலை ட்ரை பல்பு வெப்பநிலை ஆகும். இன்னொரு வெப்பநிலைதான் வெட் பல்பு வெப்பநிலை. இந்த வெட் பல்பு வெப்பநிலை என்பது ஈரமான சூழ்நிலை ஒன்றில் காற்று ஈரபதத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு வெப்பநிலை அளவிடப்படும்.
இந்த வெப்பநிலை ட்ரை வெப்பநிலையை விட குறைவாக இருக்கும். அதே சமயம் இந்த வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியஸை தாண்டினால் காற்றில் ஈரப்பதம் குறைந்து வெப்பம் அதிகம் உள்ளது என்பதை குறிக்கும். 35 டிகிரி செல்ஸியஸை தொட்டால் காற்றில் ஈரமே இல்லை என்பதை குறிக்கும். அந்த நிலையை அடைந்தால் மக்கள் அந்த சூழ்நிலையில் உயர் வாழ முடியாத சூழ்நிலை கூட ஏற்படும்.
டிகிரிக்கு மேல் சென்றால் சிக்கல் கூடுதலாகும், 35 டிகிரியை தொட்டுவிட்டால் உடல் தன்னை குழுவிற்கும் தன்மையை இழந்துவிடும்.
— G. Sundarrajan (@SundarrajanG) June 3, 2023
இந்த பின்னணியில் "வெட்-பல்பு" நிலை 2050 வாக்கில் வரும் என்றுதான் நினைத்திருந்தோம், ஆனால் இப்போதே அந்த நிலையை நெருங்குவது கவலை அளிக்கக்கூடிய அம்சம். @praddy06
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
குடை எடுங்க.. ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை கன்பார்ம்! தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications