Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கஸ்தூரி பேசியது தவறு! மன்னிக்கவே முடியாத பேச்சு? மதுவந்தி ஓபன் டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கு சமூக மக்கள் பற்றி கஸ்தூரி தெரிவித்த கருத்துகளை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று பாஜகவைச் சேர்ந்த மதுவந்தி தெரிவித்திருக்கிறார்.

தீண்டாமை குற்றத்திற்கு எதிராக நடைமுறையில் இருக்கும் வன்கொடுமை சட்டத்தைப்போன்று பிராமணர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பி.சி.ஆர் ஆக்ட் ஒன்று தனியே தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. அதில் கஸ்தூரி உட்படப் பலர் கலந்துகொண்டு பேசினர்.

kasturi madhuvanthi

அப்போது கஸ்தூரி தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார். கஸ்தூரியின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் கிளம்பின. அவரும் தனது பேச்சுக்கு உடனடியாக வருத்தம் தெரிவித்திருந்தார்.

எனினும், கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையினரிடம் புகாரளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர். அதைத்தொடர்ந்து கஸ்தூரி முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது. இதனிடையே ஹைதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில் தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கி இருந்த கஸ்தூரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

நடிகை கஸ்தூரியின் பேச்சை பல்வேறு தரப்பினர் கண்டித்துப் பேசி இருந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்ற மதுவந்தியும் மறுத்துப் பேசவில்லை. அது பற்றி பலரும் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், மதுவந்தி இப்போது மவுனம் கலைத்துப் பேசி இருக்கிறார். மதுவந்தி அளித்துள்ள பேட்டியில், "பிராமணர்களை யாரும் கொச்சைப் படுத்திப் பேசக் கூடாது என்பதற்காகத்தான் அந்தக் கூட்டமே நடந்தது. அதில் பங்கேற்றுப் பேசும் போது, சம்பந்தமே இல்லாமல் ஒட்டுமொத்த தெலுங்கு சமுதாயத்தையே கொச்சைப்படுத்திப் பேசுவது எந்த வகையில் சரியானது? அன்று கஸ்தூரி பேசியதில் எனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை. அவர் பேச்சை நான் ஏற்கவில்லை. அது தவறானது.

தமிழ்நாட்டில் 2வது இடத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள். என் மகனே சாவித்திரியின் கொள்ளுப்பேரன். சிரஞ்சீவியின் ஒட்டுமொத்த குடும்பமும் எங்கள் பள்ளியில் படித்தவர்கள். தெலுங்கு சினிமா ஒரு காலத்தில் மெட்ராசில்தான் இருந்தது. தமிழ்நாட்டையும் தெலுங்கு மக்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. ஒரு குடும்பத்தைத் தாக்கி பேச வேண்டும் எனக் கஸ்தூரி நினைத்தால், தைரியமாகப் பெயர் சொல்லித் தாக்கி பேசி இருக்கவேண்டும். அதைவிட்டு, தெலுங்கர்கள் அனைவரையும் அவமானப்படுத்த வேண்டிய தேவை ஏன் வந்தது? சொல்லப் போனால் கஸ்தூரியால் அன்று நடந்த கூட்டத்தின் முக்கியத்துவமே சீர்குலைந்து போய்விட்டது.

kasturi madhuvanthi

நீதிமன்றம் அவர் பேச்சைக் கண்டித்துள்ளது. அதை நான் ஏற்கிறேன். அவர் மேடையில் பேசும் போதே பலரும் சொல்ல முடியாமல் சங்கோஜத்தில் நெளிந்தார்கள். அவர் 20 நிமிடங்கள் பேசினார். ஒட்டுமொத்த பேச்சையும் நான் மறுக்கவில்லை. ஆனால், குறிப்பிட்ட தெலுங்கு மக்களை அவர் பேசிய விதம் தவறு என்று அப்போதே உணர்ந்தேன். நான் அந்தக் கூட்டத்தை ஒருங்கிணைக்கவில்லை. எனவே மேடையில் என்னால் கண்டிக்க முடியவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதைச் செய்திருக்க வேண்டும்.

நான் வீட்டுக்கு வந்த உடன் அவர் பேச்சில் உடன்பாடு இல்லை என்று ட்வீட் போட்டேன். பாஜகவிலிருந்தவர்கள் சிலர் கண்டித்தனர். அதைக்கூட நான் ரீ ட்வீட் செய்தேன். அடுத்து கஸ்தூரியே மன்னிப்பும் கேட்டார். அவர் மன்னிப்பு கேட்டுவிட்டதால் செய்த தவறு சரி என்று ஆகிவிடாது.

நான் திமுகவை விமர்சித்தால் அரசியல் ரீதியாகவே கேள்வி கேட்பேன். தனிப்பட்ட குடும்பத்தைத் தாக்கி பேச மாட்டேன். ஆனால், என்னைத் தாக்குபவர்கள் முதலில் என் சாதியைத்தான் தாக்குவார்கள். அடுத்து குடும்பத்தைத் தாக்குவார்கள். கடைசியாகத்தான் கொள்கையைத் தாக்கி பேசுவார்கள். நான் எந்தத் தனிப்பட்ட சாதியையும் குடும்பத்தையும் விமர்சித்தது இல்லை. கஸ்தூரியின் பேச்சு அந்த வரம்பை மீறிவிட்டது. அது நல்லது இல்லை" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+