Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடங்காத பரபரப்பு.. அதிமுக பதவி விஷயத்தில் அடுத்து என்ன? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மேஜர் பாயிண்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரிமோட் ஓட்டுப்பதிவு தொடர்பான ஆலோசனையில் பங்கேற்க வரும்படி தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் அதிமுகவுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருந்ததால் அதனை அதிமுக திருப்பி அனுப்பியது. இதுபற்றி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விஷயத்தில் அடுத்தது என்ன? என்பது பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். இந்த வேளையில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் கடிதம் அதிமுகவுக்கு அனுப்பப்படுமா? என்பது பற்றியும் அவர் தெளிவுப்படுத்தி உள்ளார்.

ஜனவரி 1ம் தேதியை வாக்காளர் தகுதிப்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கு இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதற்கான பணிகள் நடந்தன.

கடந்த நவம்பரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பிறகு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்ப்பு, நீக்கம், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று காலை வெளியிட்டார். அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3.15 கோடி பேர் பெண்களாகவும், 3.04 கோடி பேர் ஆண்களாகவும் உள்ளனர். மேலும் 8,027 பேர் மூன்றாம் பாலினத்தவர்களாகவும் உள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்தார். மேலும் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.66 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.70 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதிமுக பற்றிய கேள்வி

அதிமுக பற்றிய கேள்வி

அதன்பிறகு பத்திரிகையாளர்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர். இதற்கு அவர் பதிலளித்தார். அப்போது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரிமோட் ஓட்டுப்பதிவு அறிமுகம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்ட அழைப்பு கடிதத்தை அதிமுக வாங்க மறுத்தது பற்றி பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

தேர்தல் அதிகாரி விளக்கம்

தேர்தல் அதிகாரி விளக்கம்

அதற்கு சத்யபிரதா சாகு, ‛‛இந்திய தேர்தல் ஆணையம் எங்களுக்கு அறிவுரைகளுடன் ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் முகவரிகளை வழங்கி இருந்தது. அதன்படி தான் 5 கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தை பெற்றார்களா? இல்லையா? என்பது பற்றி பதிலளிக்க வேண்டும் என கூறியிருந்தனர். அதன்படி தற்போது பதிலளிக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சியை பொறுத்தமட்டில் மெசேஞ்சர் மூலமாகவும், கடிதம் மூலமாகவும் அழைப்பு விடுத்து இருந்தோம்'' என்றார்.

பொதுச்செயலாளர் என கடிதம் அனுப்பப்படுமா?

பொதுச்செயலாளர் என கடிதம் அனுப்பப்படுமா?

இந்த வேளையில், ‛‛ரிமோட் ஓட்டுப்பதிவு ஆலோசனை விஷயத்தில் கடிதத்தை இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் அதிமுக எதிர்பார்க்கிறது. இப்படி வழங்க வாய்ப்பு உள்ளதா?'' என மற்றொரு கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சத்யபிரதா சாகு, ‛‛இந்த விஷயத்தில் இந்திய தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறதோ. அந்த வழிமுறை பின்பற்றப்படும். தற்போது கடிதம் திருப்பி வந்துள்ளது பற்றி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அதன்பிறகு எந்த ரிப்ளையும் வரவில்லை'' என்றார்.

முன்பு நடந்தது என்ன?

முன்பு நடந்தது என்ன?

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் கருத்து தெரிவிக்குமாறு இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி என குறிப்பிடப்பட்டு இருந்தது. இருப்பினும் கூட புலம் பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் ஆணையம் ரிமோட் ஓட்டுப்பதிவு முறையை அமல்படுத்துவது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் அதிமுக தலைமை அலுவலகத்தில் அனுப்பிய கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு விபரம்

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு விபரம்

இதற்கு பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு இங்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பொறுப்பு இல்லை என்பதை கூறும் நோக்கத்தில் கடிதத்தை திருப்பி அனுப்பினர். 2 முறை கடிதம் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் அதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது அதிமுக விஷயத்தில் பத்திரிகையாளர் கேள்விகளுக்கு அவர் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+