இது சர்கார் vs சர்கார்.. விஜயின் ''அரசியல்'' படம் பற்றி வடஇந்திய ஊடகங்கள் என்ன பேசுகிறது தெரியுமா?

சர்கார் படம் விஜயின் எதிர்கால அரசியல் வருகைக்கு மிக முக்கியமான படமாக இருக்கும் என்று வடஇந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சர்க்கார் பற்றி வடஇந்திய ஊடகங்கள் என்ன பேசுகிறது தெரியுமா?

    சென்னை: சர்கார் படம் விஜயின் எதிர்கால அரசியல் வருகைக்கு மிக முக்கியமான படமாக இருக்கும் என்று வடஇந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

    மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியாகி உள்ளது. படம் குறித்து நிறைய விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. விஜய் ரசிகர்கள், பொது மக்கள் முதல் நாளில் இருந்து படத்தை பார்த்துவிட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் சர்கார் படத்தை பற்றி வடஇந்திய ஊடகங்கள் நிறைய விமர்சனங்கள் வைத்து இருக்கிறது. படம் இப்படி இருக்கிறது, அப்படி இருக்கிறது என்று திரைப்படம் தொடர்பாக நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    அரசியல் ஆசை

    அரசியல் ஆசை

    ஆனால் இது எல்லாம் போக சர்கார் படம் குறித்து வடஇந்திய ஊடகங்கள் அதிகம் பேசுவது, அதன் அரசியலை வைத்துதான். இந்த படம் ஒரு படமாக எப்படி இருக்கிறது என்பதை விட, இது நடிகர் விஜயின் அரசியல் ஆசைக்கு பெரிய அஸ்திவாரமாக அமையும் என்று கூறியுள்ளது. முக்கியமாக அவர் யாருக்கு எதிராக அரசியல் செய்ய போகிறார், யாருக்கு மாற்றாக வர போகிறார் என்று இந்த படம் தெரிவிப்பதாக வடஇந்திய ஊடகங்கள் எழுதியுள்ளது.

    தமிழக அரசை கேள்வி

    தமிழக அரசை கேள்வி

    அதோடு தமிழக அரசை விஜயின் இந்த படம் நேரடியாக தாக்கி உள்ளது என்றும் கூறியுள்ளார். அதனால் சர்கார் vs சர்கார் என்று விவாதம் கூட இந்த படத்தை வைத்து செய்துள்ளனர். அதிமுக, திமுக என்று இரண்டு பெரிய மாநில கட்சிகள் குறித்தும் காட்சிகள் வைத்து இருந்தது மாநில அரசை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்றும் சர்கார் குறித்து எழுதியுள்ளனர். இது அரசியல் ரீதியாக எதிர்காலத்தில் விஜய்க்கு உதவும் என்றும் கூறுகிறார்கள்.

    இன்னொரு வகை

    இன்னொரு வகை

    இதெல்லாம் போக வாலண்டியராக வந்து வண்டியில் ஏறிய எச்.ராஜா குறித்தும், தமிழிசை குறித்தும் வடஇந்திய ஊடகங்கள் எழுதியுள்ளன. நடிகர் விஜய்க்கு எதிராக மீண்டும் தமிழக பாஜக பேசுகிறது என்றுள்ளனர். அதில் மெர்சல் படத்தில் இருந்தே இவர்களுக்கு விஜய் மீது கோபம் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

    என்ன விவாதம்

    என்ன விவாதம்

    முக்கியமான ஒரு வடஇந்திய ஊடகம் தலைவா - கத்தி - சர்கார் என்று தலைப்பிட்டு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. இந்த மூன்று படமும் விஜயின் அரசியல் ஆசைக்கு பெரிய ஊட்டமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. மெர்சலை தொடர்ந்து இந்த படமும் ஏதோ ஒரு வகையில் வடஇந்திய ஊடகங்களில் பெரிய விவாதத்தை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+