"இவரை நம்ப முடியாது.." விடுதலை பார்த்துவிட்டு சீமான் சொன்ன வார்த்தை! அப்போ வெற்றிமாறன் தந்த ரிஆக்ஷன்
சென்னை: இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் விடுதலை படத்தைப் பார்த்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் வெற்றிமாறனை புகழ்ந்து தள்ளிவிட்டார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வந்த திரைப்படம் அசுரன். தனுஷ் நடிப்பில் வெளியான இந்தப் படம் மிகப் பெரியளவில் வெற்றி பெற்றது. இப்போது அவர் அடுத்தாக விடுதலை படத்தை இயக்கியுள்ளார்.
இதில் காமெடி நடிகர் சூரியை நாயகனாக நடித்துள்ளார். நேற்று இந்தப் படம் வெளியான நிலையில், இதற்கு மிகப் பெரியளவில் பாசிட்டிவ் விமர்சனமே கிடைத்து வருகிறது. பலரும் படத்தைப் பார்க்க தியேட்டரில் குவிந்து வருகின்றனர்.

விடுதலை
இன்றைய தினம் இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் விடுதலை படத்தைப் பார்த்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் வெற்றிமாறனை புகழ்ந்து தள்ளிவிட்டார். அவர் பேசுகையில், "விடுதலை என்பது வெறும் திரைப்படத்தின் பெயராக மட்டும் பார்க்க முடியாது. விடுதலை என்பது ஒவ்வொரு தேசிய இனத்தின் கனவாக இருக்கிறது.

சீமான்
உலகெங்கும் அடிமைப்பட்டு கிடக்கும் அனைத்து தேசிய இனங்களின் கனவு விடுதலை. சுதந்திரமும் விடுதலை உணர்வும் மனிதக் குலத்தின் பிரிக்க முடியாத உணர்வு என்கிறார் பகத்சிங். அப்படியொரு வார்த்தையை வெறும் படத் தலைப்பாக மட்டும் கருத முடியாது. இந்த தலைமுறையின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் இயக்குநர் வெற்றிமாறன். ஆங்கில படங்கள், உலக படங்களை மிஞ்சும் வகையிலான படைப்பாளிகள் நம்மிடமும் உள்ளனர் என்பதற்கான ஒரு சாட்சி தான் இந்த படம்.

சிறந்த படம்
இது படம் என்பதைத் தாண்டி, பல காலமாகத் தமிழ் மக்கள் சுமந்து வரும் கனத்த உணர்வு என்று சொல்லலாம். இப்படியொரு படத்தை எடுக்க முடியுமா என்றே படத்தைப் பார்ப்போருக்கு நிச்சயம் தோன்றும். அப்படியொரு உழைப்பு. இந்தப் படத்திற்காக அனைவரும் அந்தளவுக்கு உழைத்துள்ளனர். காடுகளில் பயணித்தோருக்குத் தான் இது எந்தளவுக்குக் கடினம் என்பது புரியும். இது ஒரு வரலாற்றுப் படம் என்றே சொல்ல வேண்டும்.

இளையராஜா
வெற்றிமாறன் ஒரு மொழியில் பேசுகிறார் என்றால்.. பின்னணியில் இசைஞானி இளையராஜா மற்றொரு மொழியில் பேசுகிறார். அந்தளவுக்குச் சிறப்பாக இருக்கிறது. இந்தப் படத்தில் தேவையில்லாத ஒன்று என்று எதையுமே சொல்ல முடியாது. அந்தளவுக்கு ஒரு நேர்த்தியான ஒரு படைப்பு. இந்தப் படத்தில் நடித்துள்ள சூரி, அடுத்த கட்டத்திற்குப் பாய்ந்துள்ளார். வேறு யாரையோ வைத்து எடுப்பதற்குப் பதிலாக நமது ஆட்களை வைத்தே எடுத்துள்ளது மற்றொரு நிறைவு.

பல நூறு அசுரனுக்கு சமம்
நகைச்சுவை நடிகரை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்லவே ஒரு துணிவு வேண்டும். இந்தப் படத்தில் சூரியை நீங்கள் வழக்கமான ஒரு நகைச்சுவை நடிகராகப் பார்க்கவே முடியாது. அந்தளவுக்குச் சிறப்பாக நடித்துள்ளார். இதற்காகக் கடினமாக உழைத்துள்ளார். வெற்றிமாறனிடம் வரும் அனைத்து நடிகர்களுக்கும் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும் எனத் தெரியும். இது பல நூறு அசுரன் திரைப்படத்திற்குச் சமம்.

நம்ப முடியாது
இப்போது அடுத்த பாகத்தை எப்போது காட்டுவார் என்பதே கேள்வியாக இருக்கிறது. இவரை நம்ப முடியாது. வட சென்னை 2ஆவது பாகம் என்று சொல்லிவிட்டு வேறு ஒரு படத்தை எடுக்கச் சென்றுவிட்டார். இதில் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதாலேயே அடுத்த பாகத்திற்கு எடுத்துள்ள வரும் காட்சிகளைச் சேர்த்துள்ளார். முதல் பாகத்திலேயே பல இடங்களில் பிரமித்துவிடுவீர்கள். இரண்டாம் பாகம் நிச்சயம் இதைவிட பிரமிக்க வைக்கும் படைப்பாகவே இருக்கும்.

ஒரே ஷாட்
படத்தைப் பாருங்கள்.. நிச்சயம் உங்களைக் கண்களை விட்டு சூரி செல்ல மாட்டார். பல முறை பார்த்தாலும் பிரமிப்பு குறையாது.. ரொம்ப சிறப்பான படைப்பு. இப்படியொரு படத்தைத் தந்த அனைவருக்கும் நன்றி. இதில் ரயில் காட்சி ஒன்று வரும்.. மொத்தம் 8 நிமிடங்கள் ஓடும் அந்த காட்சி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படிப் பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இதுபோல பல விஷயங்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம்" என்று அவர் பேசினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications