சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேயராக இருந்தப்பயே அதிரடி காட்டியவர்.. "இந்த" மூன்றில் மா.சு.வுக்கு எந்த துறை? சும்மா கிழிதான் போங்க

Google Oneindia Tamil News

சென்னை: மு.க.ஸ்டாலினின் விசுவாசியான மா சுப்பிரமணியனுக்கு எந்த துறை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவருக்கு திட்டங்கள் மற்றும் செயலாற்றத் துறை, சட்டத் துறை, சுகாதாரத் துறை ஆகிய மூன்றில் ஏதேனும் வழங்கப்படலாம் என தெரிகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் 155 இடங்களை பிடித்த திமுக கூட்டணி ஆட்சி அமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் உரிமை கோரியது. நேற்றைய திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஸ்டாலினை எம்எல்ஏக்கள் குழு தலைவராக நியமித்தனர்.

இதையடுத்து எம்எல்ஏக்களின் ஒப்புதல் கடிதங்களுடன் ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இவர் நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கிறார்.

உ.பி. பஞ்சாயத்து தேர்தல்:அயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி-துவம்சம் செய்தது சமாஜ்வாதி கட்சிஉ.பி. பஞ்சாயத்து தேர்தல்:அயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி-துவம்சம் செய்தது சமாஜ்வாதி கட்சி

ஆற்காடு வீராச்சாமி

ஆற்காடு வீராச்சாமி

இந்த நிலையில் கருணாநிதி, அன்பழகன், வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் உயிருடன் இல்லை. அது போல் முக்கிய பதவி ஆற்காடு வீராச்சாமிக்கு உடல்நலம் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் அரசியலில் இருந்து விலகியிருக்கிறார்.

நியமனம்

நியமனம்

இந்த நிலையில் திமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பதவி என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிலும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வந்துள்ள நிலையில் அதை கட்டுப்படுத்துவது திமுகவுக்கு பெரும் சவாலாக இருக்கும். இத்தகைய நிலையில் அந்த பதவிக்கு திறமையான ஒருவரை நியமிப்பது என்பதுதான் சாலச்சிறந்தது.

பரவலான பேச்சு

பரவலான பேச்சு

பொதுவாக அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் பதவி மருத்துவருக்கு வழங்கப்படும். ஆனால் திமுகவில் அனுபவங்களின் அடிப்படையில் அப்பதவி வழங்கப்படுகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு சுகாதாரத் துறை அமைச்சராக எம்ஆர்கே பன்னீர் செல்வம் இருந்தார். இந்த முறை அப்பதவி ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ டாக்டர் எழிலனுக்கு வழங்கப்படும் என பரவலாக பேசப்படுகிறது.

ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவர்

ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவர்

ஆனால் தற்போது அப்பதவி முன்னாள் மேயர் மா சுப்பிரமணியனுக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் திமுகவில் 1976 ஆம் ஆண்டு இணைந்து 1996இல் சென்னை மாநகராட்சியின் தலைவராக பதவி வகித்தவர். இதையடுத்து 2006 இல் மேயரானார். ஸ்டாலினின் நம்பிக்கைகுரியவர்களில் ஒருவர்.

அக்கறை

அக்கறை

வழக்கறிஞரான இவர் சுகாதாரம் குறித்து மிகுந்த அக்கறை உள்ளனர். பல்வேறு மாரத்தான்களில் பங்கேற்று தனது உடலை ஃபிட்டாக வைத்து கொள்பவர். தினந்தோறும் உடற்பயிற்சி, யோகா என செய்யக் கூடியவர். இவர் ஏழை மக்களின் நாடித் துடிப்பை நன்கு அறிந்து வைத்திருக்கிறார். இவர் வசிக்கும் சைதாப்பேட்டையில் ஏழை எளிய நடுத்தர மக்கள் வசிக்கிறார்கள்.

துயரம் தெரியும்

துயரம் தெரியும்

இதனால் சுகாதாரத்திற்காக அவர்கள் படும் துயரம் மா.சுவுக்கு நன்றாக தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அது போல் இவர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் கிராமத்தினர் படும் துயரம் கஷ்டம் என அனைத்தையும் அறிந்து வைத்திருப்பவர். தனது தொகுதி மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார்.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

சுகாதாரம், உடல்நலனில் அக்கறையுடைய சுப்பிரமணியனுக்கு தமிழக சுகாதாரத் துறை என்பது பொருத்தமானதாக இருக்கும் என கருதப்படுகிறது. அது போல் அவர் சிறந்த வழக்கறிஞர் என்பதால் சட்டத் துறையும் வழங்கப்படலாம் என தெரிகிறது. மேலும் நேற்றைய தினம் அம்மா உணவகத்தின் பெயர்ப்பலகை இரு திமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்டது.

நடவடிக்கை

நடவடிக்கை

இந்த விஷயத்தில் தாமாக முன்வந்து பேட்டி அளித்த மா சுப்பிரமணியன் அவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கட்சியிலிருந்து நீக்கவும் பரிந்துரைத்தார். இது போன்ற அதிரடிகளை சென்னை மேயராக இருந்த போதே இவரது அதிரடிகளை பார்த்துள்ளோம். இவர் திட்டங்கள் மற்றும் செயலாக்கத் துறை அமைச்சரானால் அவரது அதிரடி செயல்பாடுகளை இந்த தமிழகமே வியந்து பார்க்கும். இதனால் திமுகவிற்கும் நற்பெயர் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

English summary
What Portfolio to be given for Ex Mayor Ma Subramanian? People expecting more on Stalin cabinet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X