பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக்
சென்னை: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், எடப்பாடி பழனிசாமியை பாம்புடன் ஒப்பிட்டு மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். தன்னை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவையே எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தியதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு குட்டிக்கதையின் வாயிலாக அதிமுகவின் தற்போதைய தலைமை பண்பை சாடியிருக்கிறார். ஆனால் நாஞ்சில் சம்பத்தின் இந்த பேச்சுக்கு அதிமுகவினர் பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.. அரசியல் கட்சிகள் தங்கள் வியூகங்களை வகுப்பதில் மும்முரம் காட்டி வரும் நிலையில், தவெக தனது அரசியல் பாதையை அதிரடியாகத் தொடங்கியுள்ளது.

தவெக பாஜகவுடன் கூட்டணி இல்லை
இதுவரை நிலவி வந்த பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வரும் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்பதை அக்கட்சி தலைமை உறுதிப்படுத்திவிட்டது.. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிஷமே, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை நோக்கி தவெக தனது விமர்சன கணைகளை தொடுக்க ஆரம்பித்துள்ளது.
முக்கியமாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை நேரடியாகத் தாக்குவதன் மூலம், தவெக தனது தனித்துவமான அரசியல் ஆளுமையை நிரூபிக்க முனைப்பு காட்டி வருகிறது..
திண்டுக்கல் நாஞ்சில் சம்பத்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டம், தவெகவின் இந்த அதிரடி மாற்றத்திற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.. வரும் தேர்தலில் அதிமுகவுடன் ரகசிய உடன்பாடு இருக்கலாம் என்று பரவிய வதந்திகளை சுக்குநூறாக்கும் வகையில், அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் மேடையில் அனல் பறக்கப் பேசி உள்ளார்.
"எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவதற்கு முன்வந்தவர் சசிகலா.. சிறைக்குப் போகும்போதே அவரை முதலமைச்சராக முடிசூட்டி பார்த்தவர் சசிகலா.. அவர், சிறைக்கு சென்ற பிறகு, தன்னை முதலமைச்சராக்கிய அவரையே கட்சியை விட்டு நீக்கினார்.. தற்போது, சசிகலா கதறி அழுகிறார்.. முதலமைச்சராக முடிசூடி பார்த்த அவன், என் தலை மேலேயே கை வைக்கிறான் என்று கதறும் கதறல் என் காதுக்கு கேட்கிறது.. இதைப்பற்றி ஒரு குட்டி கதை சொல்கிறேன்..
ஊர்ந்து கொண்டிருக்கிறது பாம்பு
ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு வேட்டை நாய்.. ஊர்ந்து கொண்டிருக்கிறது ஒரு பாம்பு.. அதை எப்படியாவது கடித்து குதறி விடலாம் என்று நினைத்து வேட்டை நாய் துரத்துகிறது.. பாம்பு பயந்து ஓடுகிறது.. அப்போது ஒரு வழிப்போக்கனை பார்த்து, 'வேட்டை நாய் என்னை கடித்து குதற துரத்துகிறது.. எப்படியாவது காப்பாற்றுங்கள்.. எனது உயிருக்கு உத்தரவாதம் தாருங்கள்' என்று பாம்பு கேட்டது.
அதற்கு, '"நான் மனிதன்.. நீ பாம்பு.. நான் எப்படி உனக்கு பாதுகாப்பு தருவது? உன்னை நான் எனது பாக்கெட்டில் வைத்துக் கொள்ளவா முடியும்' என்று கேட்டான்..
அதற்கு பாம்பு சொன்னது, "இல்லை இல்லை... நீ குந்தி உட்கார்ந்து கொள்.. நான் உன் பின்புற வழியாக உடலுக்குள் நுழைந்து ஒளிந்து கொள்கிறேன் என்றது.. அந்தப் பாம்பை பாதுகாக்க வேண்டும் என்று எண்ணிய வழிப்போக்கனும், உயிர் பிச்சை கொடுப்போம் என்று குந்தி உட்கார்ந்தான்.
வயிற்றுக்குள் பாம்பு
பாம்பு, வழிப்போக்கனின் பின்புறமாக நுழைந்து வயிற்றில் ஒளிந்து உட்கார்ந்து கொண்டது.. அந்த வேட்டை நாய் திரும்பி போய்விட்டது.. பாம்பிற்கு உயிர் பயம் இல்லை, ஆனால் வழிப்போக்கனுக்கு வயிறு வலிக்க ஆரம்பித்துவிட்டது..
பாம்பிடம் சொன்னான், எனக்கு வயிறு வலிக்கிறது தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு வலி.. தயவு செய்து வெளியேறு என்று! அதற்கு பாம்பு, "இந்த இடம் ரொம்ப பாதுகாப்பாக உள்ளது.. நான் இங்கேயே தங்கிக் கொள்கிறேன்" என்று சொன்னதாம்.. அந்த பாம்பிற்கும், இந்த எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது கூறுங்கள்" என்று நாஞ்சில் சம்பத் ஆவேசமாக பேசினார்.
அதிமுக பதிலடி
நாஞ்சில் சம்பத்துக்கு அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.. "அதிமுகவில் இருந்தபோது அதே எடப்பாடியாரைப் புகழ்ந்து தள்ளிவிட்டு, இப்போது பிழைப்புக்காகப் போன இடத்தில் இப்படிப் பேசுவது நாஞ்சில் சம்பத்தின் அரசியல் நாகரிகமற்ற தனத்தைக் காட்டுகிறது..
முதுகில் குத்துவது பற்றிப் பேசும் நாஞ்சில் சம்பத், தான் எத்தனை கட்சிகளுக்குத் தாவி வந்திருக்கிறார் என்பதை முதலில் யோசித்துப் பார்க்கட்டும்.. உண்மையான பாம்பு யார் என்பது ஊருக்கே தெரியும். எடப்பாடியார் ஒரு மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர், அவரைப் பற்றிப் பேச நாஞ்சிலுக்குத் தகுதியில்லை." என்றெல்லாம் அதிமுகவினர் கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி கெத்து
அதுமட்டுமல்ல, தவெக தரப்பில் இருந்து இவ்வளவு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதைப் பெரிய பொருட்டாக மதிக்கப்போவதில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
ஏற்கனவே பல அரசியல் சவால்களைக் கடந்து வந்த எடப்பாடி பழனிசாமி, புதியதாகக் களம் கண்டுள்ள ஒரு கட்சியை ஒரு பொருட்டாகக் கூடக் கருதாமல், தனது பாணியிலேயே அவர்களுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதிமுகவின் செல்வாக்கை இதுபோன்ற விமர்சனங்கள் குறைத்துவிடாது என்பதில் உறுதியாக இருக்கும் அவர், தேர்தல் களத்தில் தனது பலத்தைக் காட்டத் தயாராகி வருகிறார்..!!
-
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
சிவகார்த்திகேயனுக்கு சனி பிடித்துவிட்டது.. நாஞ்சில் சம்பத் சர்ச்சை பேச்சு.. மீண்டும் சிக்கிய தவெக












Click it and Unblock the Notifications