"மாநிலங்களுக்கு தனியாக கலாச்சாரம் எல்லாம் இல்லை.. அனைவரும் இந்தியர்கள்தான்.. " ஆளுநர் ரவி பேச்சு!
சென்னை: தெலங்கானா உருவான நாளை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கூறிய கருத்துகள் இப்போது விவாதமாகியுள்ளது.
தெலங்கானா மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.. அதன்படி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல்வேறு விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதற்கிடையே இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ரவி, மாநிலங்களின் கலாச்சாரங்கள் குறித்துப் பேசியிருந்தார்.

ஆளுநர் ரவி: இந்த நிகழ்வில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ரவி, "இப்போது சர்வதேச அளவில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க உலக நாடுகளை இந்தியாவை எதிர்நோக்குகின்றன. இந்தியாவால் சர்வதேச பிரச்சினைகளைத் தீர்க முடியும். இப்போது கூட நாம் அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறோம். இப்போது உலகம் பல்வேறு காரங்களால் பிரிந்து கிடக்கிறது. இந்த நேரத்தில் இந்தியாவின் பங்கு உதவியாகவே இருக்கும்.
நமது குழந்தைகளுக்குப் பாரதம் என்றால் என்ன என யாருமே சொல்லித் தருவதில்லை. நமது நாட்டில் படையெடுப்புகளுக்கு முன் பல மன்னர்கள் இருந்தனர். பாரதம் பலரது ஆட்சியின் கீழ் இருந்தது. அதேநேரம் ஒரே சமூகமாக ஒற்றுமையாக இருந்தோம். வேறு இடங்களுக்குச் செல்கிறோம் என்ற எண்ணம் யாருக்குமே இருந்தது இல்லை. ஏனென்றால் அப்போது ஒரே கலாச்சாரம் நமது அனைவரையும் இணைத்தது.
சிவன், கிருஷ்ணர், தேவி கடவுளை அனைவரும் பிரார்த்தனை செய்தனர். ஆனால், இப்போது என்ன நடக்கிறது. கலாச்சாரம் முழுமையாக மாறிவிட்டது. ஒரு மாநிலத்திற்குள்ளேயே பல கலாச்சாரங்கள் இருக்கிறது. 50, 100 கிமீ தூரத்திற்கு எல்லாம் தனித் தனி கலாச்சாரம் என்கிறார்கள்.
மாநிலங்கள்: இந்தியாவில் மாநிலங்களை நிர்வாக வசதிக்காகவே உருவாக்கினர். ஆனால், இப்போது அதை அரசியல் அடையாளங்களாக மாற்றியுள்ளனர்.. மாநிலங்களுக்குத் தனி அடையாளம் என்பது மக்களைப் பிரிக்கும் மனநிலையை உருவாக்கும். தமிழர்கள், தெலுங்கர்கள் போன்ற அடையாளங்களை உருவாகியுள்ளன. இது ஒரே பாரதம் என்பதற்கு எதிரானது. பாரதம் என்ற அடையாளத்தை இழந்துவிட்டோம். மாநிலத்திற்கு எல்லாம் தனியாகக் கலாச்சாரம் இல்லை. இந்த கற்பனை அடையாளங்கள் நமது நாட்டின் வலிமையைக் குறைக்கிறது.
மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகியவை உருவாக்கப்பட்டது. அதேபோல ஜார்கண்ட் பீகாரில் இருந்தும், உத்தரகண்ட் உத்தர பிரதேசத்தில் இருந்தும், சத்தீஸ்கர் மத்தியப் பிரதேசத்திலிருந்தும் உருவாக்கப்பட்டன. தெலங்கானாவும் ஆந்திராவில் இருந்து இப்படி தான் உருவாக்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காகவே முதலில் மாநிலத்தைப் பிரித்தார்கள். ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காக மொழி வாரியாக இது இருந்தது.
இப்போதும் தெலுங்கு பேசும் மக்கள் தமிழ்நாட்டில் வசித்து வருகிறார்கள். அவர்களை வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியும். அனைவரும் இந்தியர்கள் தான். அப்படிப் பார்ப்பதே சரியானது" என்று ஆளுநர் ரவி பேசினார். ஆளுநரின் இந்தப் பேச்சை இணையத்தில் இப்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆளுநர் கூறிய கருத்துக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் எதிராக மற்றொரு தரப்பினரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications