கன்னித்தன்மை சோதனை பண்றாங்க.. பற்ற வைத்த ஆளுநர் ரவி.. "பச்சை பொய்".. மொத்தமாக உடைத்த மணி
சென்னை: சிதம்பரம் கோவிலில் குழந்தை திருமணம் நடக்கவில்லை என்று ஆளுநர் கூறுவது பச்சை பொய். இது மிகவும் சீரியஸான விஷயம், என்று மூத்த பத்திரிக்கையாளர் மணி தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் எதையும் செய்யவில்லை, தமிழ்நாடு அரசு அவர்கள் மீது பழிவாங்கும் விதமாக நடவடிக்கை எடுக்கிறது என்று ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்திற்கு தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர். என் ரவி அளித்த பேட்டியில், கோவில்களை சிறப்பாக நிர்வகிப்பதற்காக நான் இந்த தமிழ்நாடு பாராட்ட வேண்டும் என்று அரசாங்கம் விரும்பியது. அதற்கு அவர்கள் கூறிய காரணம், 3,000க்கும் மேற்பட்ட ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டெடுத்ததுதான். அதை ஏற்றுக்கொள்கிறேன்.
அவ்வளவு நிலங்களை மீட்டது நல்ல விஷயம்தான். ஆனால் இன்னும் 50,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதை எல்லாம் மீட்கவில்லை. இதுவரை செய்யப்பட்ட மீட்பு மிகவும் சிறியதாக உள்ளது என்பதை எல்லோரும் அறிவோம். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2022ல் என்ன நடந்தது என்று பாருங்கள்.
பழிவாங்கும் வகையில், சமூக நலத் துறையின் அரசு அதிகாரிகள், பொது தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். அங்கே குழந்தைத் திருமணங்கள் நடப்பதாக எட்டு பேர் மீது புகார்களை அளித்தனர். தீட்சிதர்கள் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று புகார் வைத்தனர்.
ஆனால் அங்கே அத்தகைய திருமணங்கள் நடக்கவில்லை. அது உண்மை இல்லை. பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், ஆறாம், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை, வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, 'இரண்டு விரல் பரிசோதனை' என்னும் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த கொடுமைகளால் அந்த சிறுமிகள் சிலர் தற்கொலைக்கு முயன்றனர். இது என்ன என்று கேட்டு முதல்வருக்கு கூட நான் விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன். இப்போது, நடக்கும் அனைத்திற்கும் பின்னணியில் இருப்பது அரசுதான். நான் இந்த அரசாங்கத்தைப் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? என்று ஆளுநர் ஆர். என் ரவி கேட்டு உள்ளார்.

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், சிதம்பரம் கோவிலில் குழந்தை திருமணம் நடக்கவில்லை என்று ஆளுநர் கூறுவது பச்சை பொய். இது மிகவும் சீரியஸான விஷயம். ஆளுநர் பொய்யாக பேசுகிறார் . அங்கே இரட்டை விரல் சோதனை நடக்கவே இல்லை.
ஆனால் உறுதியாக சொல்வேன் குழந்தை திருமணம் அங்கே நடந்து இருக்கிறது. அதில் மாற்றமே இல்லை. சொத்துக்காக அவர்கள் இப்படி குழந்தை திருமணம் செய்கிறார்கள். சொத்து வெளியே செல்ல கூடாது என்று இவர்கள் இப்படி குழந்தை திருமணம் செய்கிறார்கள்.
இதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே கூடாது. அங்கே 10 - 12 வயது குழந்தைகளுக்கு கூட திருமணம் செய்து வைக்கிறார்கள். 10 வயது சிறுமியை 12 வயது சிறுவனுக்கு மணமுடித்து கொடுக்கிறார்கள்.
இல்லை 25 வயது நபருக்கு கூட மணமுடித்து கொடுக்கிறார்கள். இந்த கொடுமை எல்லாம் அங்கே நடந்து கொண்டு இருக்கிறது. இது எல்லாம் நடக்கவில்லை என்று பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார் ஆளுநர்.
ஆளுநர் பச்சை பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார். நான் யுனிசெப்பில் சேர்ந்து குழந்தை திருமணத்தை தடுப்பது பற்றி பணியாற்றி வருகிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். ஆளுநர் சொல்வது பச்சை பொய். அண்டை புளுகு. ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
பொது தீட்சிதர்கள் குடும்பத்தில் இது இயல்பாக நடக்கிறது. ரொம்ப ரொம்ப சர்வ சாதாரணமாக அங்கே குழந்தை திருமணம் நடக்கிறது. கொரோனா காலத்தில் அங்கே குழந்தைகள் திருமணம் நடக்கிறது. அங்கே இருக்கும் வைதீக பிராமணர் ஒருவர் கொடுத்த புகாரில்தான் நடவடிக்கையே எடுத்தனர்.
அதிகாலை 4 மணிக்கு குழந்தை திருமணம் செய்து உள்ளனர். அங்கே நடந்தது உண்மை. 100 சதவிகிதம் உண்மை என்பது தெரிந்துதான் உள்ளே போய் இருக்கின்றனர். அங்கே இருக்கும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி இதை கண்டுபிடித்துதான் சென்று இருக்கிறார்கள்.
இதை தடுக்காமல் ஆளுநர் தவறாக பேசுகிறார். பச்சை பொய்யை பேசுகிறார். அங்கே பல காலமாக அங்கே குழந்தை திருமணம் நடக்கிறது, என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

பின்னணி: சிதம்பரம் தீட்சிதர்கள் 4 குழந்தை திருமணத்தை செய்து வைத்ததாக புகார் எழுந்துள்ளது. இதில் ஒரு குழந்தை திருமணத்தில்தான் தற்போது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள குழந்தை திருமணத்தில் விசாரணை நடைபெற்று கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் தனது மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் வைக்கப்பட்டது. கடந்த வருடம் தனது மகளுக்கு 13 வயது இருக்கும் போது குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளார்.
கடந்த வருடம் 15 வயது சிறுவனுடன் அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கடந்த வருடம் இந்த திருமணம் நடந்த நிலையில் இந்த வருடம்தான் அந்த விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது. சிறுமியை திருமணம் செய்த ராஜரத்தின தீட்சிதர் கைது செய்யப்பட்டார்.
அதேபோல் திருமணத்தை நடத்தி வைத்த மாப்பிள்ளையின் தந்தை வெங்கடேஸ்வரா தீட்சிதர் என்பவரும் கைது செய்யப்பட்டார். தற்போது இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரித்தால் உண்மை வெளியாகிவிடும் என்பதற்காக அந்த சிறுமியை அவர்கள் மறைத்து வைத்துள்ளனர். திருமண பதிவுகளை வைத்துதான் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.
திருமண மண்டபத்தில் 2021 ஜனவரி 25 அதிகாலையில் நடைபெற்ற திருமண பதிவை வைத்து, இந்த திருமணத்தை உறுதி செய்துள்ளனர். ஆனால் இது கூட பொய் என்று அவர்கள் சொல்ல வாய்ப்பு உள்ளதால் புகைப்பட ஆதாரங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
கொடுமை: இந்த சிறுமிக்கு திருமணம் செய்ததோடு மட்டுமின்றி போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக அந்த சிறுமியை ஒளித்து வைத்துள்ளனர். போலீசார் விசாரணைக்கு வந்த போது விசாரணை செய்ய விடாமல், சிறுமி ஊரில் இல்லை என்று கூறி, வீட்டிற்கு உள்ளேயே அறை ஒன்றில் ஒளித்து வைத்து உள்ளனர்.
இந்த வழக்கில் இவர்கள் மூவர் தவிர இன்னும் பலர் கைதாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கைதான் 3 பேரும் 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த கைதை கண்டித்து நேற்று இரவு தீட்சிதர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு போராட்டம் செய்தனர். சாலைகளில் பூசணிக்காய் உடைத்து தீட்சிதர்கள் போராட்டம் செய்தனர். ஹேமசபேச தீட்சிதரை விடுதலை செய்ய கோரி போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் அங்கே குவிக்கப்பட்டு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடலூர் மாவட்டத்தில் பதிவான 22 வழக்குகளில் 4 குழந்தை திருமண வழக்குகளில் தீட்சிதர்களுக்கு நேரடி தொடர்பு உள்ளது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேடை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஒருவரை தீட்சிதர் கனகசபை மேடைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் மற்ற தீட்சிதர்கள் அதனை தடுத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட சர்ச்சையில் அப்பெண்ணை சாதி பெயர் சொல்லி தீட்சிதர்கள் திட்டியதாக அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் தனியாக பணம் வசூலிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு விசாரணை செய்தது. பின்னர், கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் அறிவித்தது. இது குறித்து அரசாணையை கடந்த மே மாதம் வெளியிட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக பல்வேறு புகார்கள், மனுக்கள் வந்த நிலையில் அங்கு ஆய்வு மேற்கொள்ள அறநிலையத்துறை முடிவு செய்தது. பொது கோவில்களில் புகார்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளலாம் என்பதால், அறநிலையத்துறை கடந்த ஜூன் மாதம் அங்கு ஆய்வு செய்ய முடிவு எடுத்தது.
ஆனால் ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளிடம் தீட்சிதர்கள், ஆவணங்களை வழங்க மறுத்தனர். கோவில் கணக்கு வழக்கு விவரங்களை வழங்க மறுத்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் பொதுக்கோவில் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பொதுக்கோவில்களில் ஆய்வு நடத்த அறநிலையத்துறைக்கு உரிமை உள்ளது. புகார் வரும் பட்சத்தில் இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959 பிரிவு 23, 28ன் படி ஆய்வு செய்ய முடியும். ஆனாலும் தீட்சிதர்கள், ஆவணங்களை வழங்க மறுத்து அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
-
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications