உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.க்கு கல்விக்கடன் கொடுக்க மறுத்த வங்கி! சலசலப்புக்கு அஞ்சாத போர்க்குணம்!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளதால் மீண்டும் பேசு பொருளாகி உள்ளார்.
சப் கலெக்டராக பயிற்சியை தொடங்கிய காலம் தொட்டு இன்று வரை யாருக்கும் அஞ்சாத ஐ.ஏ.எஸ். ஆபிசராக வலம் வரும் இவர், சலசலப்புகளை கண்டு எதற்கும் பின் வாங்காதவர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியிலேயே கறார் பேர்வழி என்று பெயரெடுத்த உதயச்சந்திரன் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்திலிருந்து படித்து முன்னேறியவர்.

பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த இவருக்கு கல்விக்கட்டணம் செலுத்த போதிய வசதி இல்லாததால் தேசியமயமாக்கப்பட்ட வங்கியை அனுகுகிறார். ஆனால் அவருக்கு கல்விக்கடன் கொடுக்க முடியாது எனக் கூறி வங்கி மேலாளர் திருப்பி அனுப்பிவிடுகிறார்.
வங்கியில் கல்விக்கடன் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டவர் என்பதால் அதன் வேதனையும், வலியும், உதயச்சந்திரனுக்கு நன்றாகவே தெரியும். இதனால் தான் என்னவோ ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்தபோது ஒரே மாதத்தில் 8,000 பேருக்கு கல்விக்கடன் கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.
அதேபோல் தன்னை எந்தப் பதவிக்கு அரசு மாற்றினாலும் அந்தப் பணியை செவ்வனே செய்யக்கூடியவர். இப்போது கூட நிதித்துறைக்கு இவர் மாற்றப்பட்டிருக்கிறார் என்றால், ஏற்கனவே அமைச்சர் தங்கம் தென்னரசுவோடு இணைந்து பணியாற்றி இருக்கக் கூடியவர்.
தொல்லியல் துறையாக இருந்தாலும் சரி முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்தாலும் சரி தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் பார்க்கக் கூடியவர்.

தங்கம் தென்னரசுவுடன் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.க்கு நன்கு பரிச்சயம் இருப்பதால் அவர்கள் இருவருக்கும் இடையே நிர்வாக விவகாரத்தில் எந்த சிக்கலும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications