Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடுதலை படத்தில் வரும் மருதையாறு ரயில் பாலம் தகர்ப்பு? 1987ல் நடந்தது என்ன? பின்னணி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை பாகம் ஒன்று திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் வரும் சம்பவங்கள் முழுக்க முழுக்க கற்பனை என்று கூறினாலும், 1980களில் தமிழ்நாட்டில் நடந்த சில சம்பவங்களை ஒத்திருக்கின்றன. 1987ல் நடந்த மருதையாற்று ரயில் பாலம் தகர்ப்பு, 1992ல் நடந்த வாச்சாத்தி சம்பவம் ஆகியவற்றை தழுவி இருப்பதாகவே பலரும் சொல்கிறார்கள்.

விடுதலை முதல் பாகம் படத்தின் முதல் காட்சியில் குண்டு வைத்து ரயில் தகர்க்கப்படும் காட்சி இருக்கிறது. இது 1987ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி அரியலூருக்கு அருகில் உள்ள மருதையாற்றுப் பாலம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட நிகழ்வை ஒத்ததாக இருக்கிறதாம்.

1987 காலகட்டத்தில் தமிழ்நாடு விடுதலைப் படை என்ற அமைப்பு அரியலூர், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்டது. அந்தத் தருணத்தில் இலங்கைப் பிரச்னையைத் தீர்க்க இந்தியப் படை இலங்கைக்குச் செல்லும் எனப் பேச்சுகள் இருந்தது. ஆகவே, தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான ரயில் பாலத்தைத் தகர்ப்பதன் மூலம், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்க இந்தக் குழு முடிவு செய்திருந்ததாம்.

குண்டு வைத்து தகர்ப்பு

குண்டு வைத்து தகர்ப்பு

அரியலூர் ரயில் நிலையத்தில் இருந்து சில்லக்குடி செல்லும் வழியில் மருதையாற்றுப் பாலம் உள்ளது. இந்தப் பாலம்தான் சென்னையையும் திருச்சியையும் இணைக்கும் முக்கியமான ரயில் பாலம் ஆகும். இந்தப் பாலத்தை ரயில் வராத நேரமாகப் பார்த்து தகர்த்துவிட்டு, பொறுப்பேற்பது என்று முடிவு செய்யப்பட்டது. எதற்காகச் செய்தோம் என்பதை சுவரொட்டிகள் மூலம் பொதுமக்களுக்குச் சொல்வது என்றும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக மூன்று குழுக்கள் உருவாக்கப்பட்டதாகவும். பாலத்தைத் தகர்க்க ஒரு குழு, சுவரொட்டிகள் மூலம் இந்தச் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு குழு, குண்டு வெடித்ததும் ரயில் நிலையங்களுக்கு இந்தச் செய்தியைச் சொல்ல ஒரு குழு என மூன்று குழுக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

தகவல் வந்தது

தகவல் வந்தது

இப்போது சம்பவத்திற்கு வருவோம். கடந்த 1987-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் தேதி இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி மலைக்கோட்டை விரைவு ரயில் புறப்பட்டிருக்கிறது. அந்த ரயில் அரியலூருக்கு மறுநாள் (15-ந் தேதி) அதிகாலை 4 மணிக்கு வந்துவிடும் என்கிற நிலை இருந்தது. இது பற்றி பிபிசி வெளியிட்ட செய்திகளின்படி என்ன நடந்தது என்பதை பார்ப்போம். 1987ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி அதிகாலை 3.10க்கு மருதையாற்று பாலத்தில் ஒரு பெரிய வெடிச் சத்தம் கேட்டிருக்கிறதாம். இது தொடர்பாக அரியலூர் இருப்புப் பாதை உதவி அலுவலர் டேனியலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாம். அதில், மருதையாற்றுப் பாலம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருந்ததாம். ஆனால், டேனியல் அதை நம்பவில்லை. சிறிது நேரத்தில் சில்லக்குடி இருப்புப் பாதை அலுவலரும் தொலைபேசி மூலம் இந்தத் தகவலைச் சொன்னார். அப்போதும் டேனியல் நம்பவில்லையாம்.

26 பேர் உயிரிழப்பு

26 பேர் உயிரிழப்பு

பிறகு மீண்டும் தொலைபேசி மூலம் அழைத்த இருப்புப் பாதை அலுவலர், திருச்சிராப்பள்ளிக்கு வரும் ரயிலை இடையிலேயே நிறுத்த வேண்டுமெனச் சொன்னார். அதை டேனியல் ஏற்கவில்லையாம். சென்னையிலிருந்து திருச்சிக்கு வரும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் அதிகாலை 4.35க்கு அரியலூர் நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. 4.37க்கு புறப்பட்டது. எட்டு நிமிடத்தில் சில்லக்குடி நிலையத்தை ரயில் அடைய வேண்டும். ஆனால், 15 நிமிடமாகியும் ரயில் சில்லக்குடிக்கு வரவில்லை. இதையடுத்து ரயிலைத் தேடி புறப்பட்டார் சில்லக்குடி இருப்புப் பாதை அலுவலர். அவர் மருதையாற்றுப் பாலத்திற்குச் சென்று பார்த்தபோது, பாலம் இடிந்து போயிருந்ததால், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளாயிருந்தது. இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்தார்கள். 90 பேர் காயமடைந்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது இவ்வாறு பிபிசி அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தது.

ரயில் போய்விட்டது

ரயில் போய்விட்டது

இதனிடையே பிரபல தமிழ் செய்திதாள் ஒன்று அன்றைக்கு வெளியிட்ட செய்திகளின் படி, கடந்த 1987-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் தேதி இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி மலைக்கோட்டை விரைவு ரயில் புறப்பட்டது. அந்த ரயில் அரியலூருக்கு மறுநாள் (15-ந் தேதி) அதிகாலை 4 மணிக்கு அந்த வந்து நின்றது. ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான பயணிகள் அந்த ரயிலில் ஏறிக்கொண்டும், ரயிலில் வந்த பயணிகள் இறங்கிக்கொண்டும் இருந்தனர். சிறிது நேரத்தில் அரியலூர் ரயில் நிலையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய ஊழியர், மருதையாற்று பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இதனால் பதற்றமடைந்த ரயில்வே ஊழியர்கள், மலைக்கோட்டை விரைவு ரயிலை நிறுத்தும் நோக்கில் நடைமேடைக்கு ஓடி வந்தனர். ஆனால் அந்த ரயில் புறப்பட்டு சென்று சில நொடிகள் ஆகியிருந்தன. இதனால் அடுத்து என்ன நடக்குமோ? என்ற பதைபதைப்புடன் அவர்கள் இருந்தனர்.

36 பேர் மரணம்

36 பேர் மரணம்

அதே நேரத்தில் அந்த ரயில் அரியலூர்-சில்லக்குடி இடையே உள்ள மருதையாற்று ரயில் பாலத்தில் வந்தது. அந்த பாலத்தின் மறுமுனையை என்ஜின் தொட்டபோது, திடீரென 'டமார்' என்ற பயங்கர சத்தம் கேட்டது. அடுத்த நொடி என்ஜின் தடம்புரண்டு பாலத்தின் அடியில் விழுந்தது. அதில் இணைக்கப்பட்டிருந்த பெட்டிகள், ஒன்றுடன் ஒன்று மோதியவாறும், சில பெட்டிகள் பாலத்தின் கீழ் தொங்கியவாறும், அலங்கோலமாக நின்றன. குறிப்பாக குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் நொறுங்கியிருந்தது. எங்கெங்கும் பயணிகளின் அபய குரலும், மரண ஓலமும் ஒலித்தன. சிறிது நேரத்தில் பொழுது புலர்ந்தநிலையில், ரயில் பெட்டிகள் கவிழ்ந்து கிடந்ததை அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் அக்கம், பக்கத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இ்ந்த சம்பவத்தில் அந்த ரயிலின் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் பயணித்த 36 பேர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இவ்வாறு தமிழ் செய்திதாள் ஒன்று கூறியிருக்கிறது.

தமிழர் விடுதலைப்படை

தமிழர் விடுதலைப்படை

இதனிடையே பாலத்தைத் தகர்த்து கவனத்தை ஈர்ப்பதுதான் விடுதலைப் படையின் நோக்கம் என்றும் ரயிலைக் கவிழ்ப்பது அவர்கள் நோக்கமல்ல என்றும் அந்த அமைப்பிற்கு நெருக்கமானவர்கள் அப்போது கூறியிருக்கிறார்கள். இந்த வழக்கில் தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த தமிழரசன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி பொன்பரப்பியில் ஒரு வங்கிக் கொள்ளை முயற்சியின்போது, தமிழரசன் உள்ளிட்ட ஐந்து பேர் அடித்துக் கொல்லப்பட்டார்கள்

ரயில் விபத்து

ரயில் விபத்து

விடுதலை படத்தைப் பொறுத்தவரை, ரயில் விபத்தும் அதைத் தொடர்ந்து விடுதலைப் படையினர் தேடப்படுவது போன்றவற்றை ஒத்திருக்கும் காட்சிகள் மட்டும் இந்த முதல் பாகத்தில் இடம்பெற்று இருக்கிறது. இது தவிர, 1992ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22-23ஆம் தேதி வாச்சாத்தியில் காவல்துறை நடத்திய வன்முறைச் சம்பவத்தின் சாயலில் ஒரு நிகழ்வும் இந்தப் படத்தில் காட்டப்பட்டிருக்கிறது என்று பலரும் சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+