Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி வீட்டுக்கு போன கார்! டிவியில் பார்த்த சசிகலா! துடித்த "இதயங்கள்"! மிட்நைட்டில் நடந்தது என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று தமிழ்நாடு சட்டசபையில் வெளியான இரண்டு அறிக்கைகள் மொத்தமாக அரசியல் உலகையே உலுக்கி உள்ளது. இந்த இரண்டு அறிக்கைகள் காரணமாக அதிமுகவில் இருக்கும் எடப்பாடி அணி.. ஓ பன்னீர்செல்வம் அணி.. சசிகலா அணி.. டிடிவி தினகரன் அணி என்று 4 அணிகளும் கலங்கி போய் உள்ளன.

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை வெளியானது. இன்னொரு பக்கம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை நேற்று சட்டசபையில் வெளியானது.

இந்த இரண்டு அறிக்கைகளும் தமிழ்நாடு அரசியல் உலகில் மிகப்பெரிய அளவிலான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி, இன்னொரு பக்கம் சசிகலா இரண்டு பேருமே இந்த இரண்டு அறிக்கைகள் காரணமாக கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

அறிக்கை 1

அறிக்கை 1

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில், சசிகலாவை குற்றம் செய்தவராக கருதி விசாரிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. சசிகலாவை குற்றம் சாற்றுவதை தவிர வேறு வழியே இல்லை. ஜெயலலிதா மயக்கம் அடைந்த பின் நடந்தது எல்லாம் ரகசியமாக உள்ளது. சசிகலா உட்பட 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும். சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அறிக்கை 2

அறிக்கை 2

இன்னொரு பக்கம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கையில், பொதுமக்களை போல துப்பாக்கிச் சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என எடப்பாடி பழனிசாமி கூறியது தவறு என்று ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடுக்கு முன் எவ்வித எச்சரிக்கையும் விடப்படவில்லை. துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹ 10 லட்சமும் வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சசிகலா அதிர்ச்சி

சசிகலா அதிர்ச்சி

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை வெளியானதும் சசிகலா கடும் அதிர்ச்சிக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கை கொஞ்சம் கூட கசியாமல் மிகவும் சீக்ரெட்டாக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கை விவரங்களை டிவியில் பார்த்துதான் சசிகலாவே தெரிந்து கொண்டார். முழு அறிக்கை கையில் கிடைத்த பின் அதை சட்ட வல்லுனர்களிடம் காட்டி விளக்கங்களை கேட்டு.உள்ளார் சென்னையை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஒருவரிடம் சசிகலா இதற்காக ஆலோசனை கேட்டு உள்ளார்.

ஆலோசனை

ஆலோசனை

ஆனால் அவர் உடனடியாக ஆலோசனை வழங்கவில்லை. அறிக்கையில் முழுமையாக என்ன இருக்கிறது என்பதை படித்த பின்பே சொல்ல முடியும் என்று கூறியதாக தெரிகிறது. நேற்று இரவு வரை இந்த ஆலோசனை நீடித்து உள்ளது. ஆனால் அதே சமயம்.. இதில் உங்களை குற்றவாளியாக கருதலாம் என்று மட்டும் கூறி உள்ளனர். அது முக்கியமானது. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்பு உள்ளது. போலீஸ் விசாரணை என்பது ஆணைய விசாரணை போல இருக்காது.

சந்தேகம்

சந்தேகம்

அவர்களுக்கு சந்தேகம் இருந்தால் போலீசார் கைது செய்யவும் முடிவு. வழக்கு பதியவும் முடிவு. அதனால் அந்த விசாரணைக்கு தயாராக இருங்கள், என்று மட்டும் வழக்கறிஞர் சசிகலாவிற்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா விசாரணை அறிக்கை காரணமாக இங்கே சசிகலா இதயம் படபடப்பில் துடித்துக்கொண்டு இருந்த நேரத்தில் இன்னொரு பக்கம் எடப்பாடி இதயமும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கையால் பதற்றத்திலேயே இருந்துள்ளது என்கிறார்கள்.

 சட்டசபை

சட்டசபை

நேற்று சட்டசபையில் இருந்து அப்படியே கிளம்பி எடப்பாடி வீட்டிற்கு சென்றுள்ளார். அவரின் வீட்டில் பல எம்எல்ஏக்கள் இருந்துள்ளனர். அப்போது தூத்துக்குடி அறிக்கை பற்றி இவர்கள் ஆலோசனை செய்துள்ளனர். எடப்பாடி மற்றும் அவரின் கட்டுப்பாட்டில் இருந்த போலீசுக்கு எதிராக நேரடியாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசனை செய்துள்ளனர். நேற்று மிட் நைட்டில் கூட எடப்பாடி வீட்டிற்கு சில கார்கள் சென்றுள்ளன. இதில் அவரின் ஆதரவாளர்கள் சென்றதாக கூறப்படுகிறது.

இரவு

இரவு

இரவில் கூட இவர்கள் இந்த இரண்டு அறிக்கை பற்றி ஆலோசனை செய்துள்ளனர் என்கிறார்கள். சசிகலாவிற்கு எதிராக வந்த அறிக்கையால் சந்தோசம்.. தனக்கு எதிராக வந்த அறிக்கையால் கோபம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கலவையான உணர்வுகளே இருந்துள்ளதாம். இன்னொரு பக்கம் சசிகலா வீட்டில் நேற்று இரவோடு இரவாக டிடிவி தினகரன் சென்று ஆலோசனை செய்தார். சில நாட்களாக பேசாத இவர்கள்.. இந்த அறிக்கை காரணமாக மீண்டும் ராசியானதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+