Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொப்புனு விழுந்த தங்கம் விலை.. நாளை முதல் எப்படி இருக்கும்? நகை விற்பனையாளர் சங்க தலைவர் குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று தாக்கலான மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. சவரனுக்கு 2,100 வரை தங்கம் விலை சரிந்த நிலையில் நாளை முதல் எப்படி இருக்கும்? என்பது பற்றி தமிழ்நாடு நகை விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் ஜெயந்தி லால் சலானி விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. குறிப்பாக தங்கம், வெள்ளி நகைகளுக்காக இறக்குமதி வரி (சுங்கவரி) என்பது 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் வரையும், பிளாட்டினம் நகைகள் மீதான இறக்குமதி 6.4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

Budget 2024 union budget 2024 Nirmala Sitharaman gold rate 2024 2024

இந்த வரி குறைப்பால் தங்க நகை விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று காலையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.6,810க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.260 குறைந்து ரூ.6,550க்கு விற்பனையாகிறது. மேலும் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,080 குறைந்து ரூ.52,400க்கு விற்பனையாகிறது.

இந்நிலையில் தான் பட்ஜெட் அறிவிப்பால் குறைந்த தங்க விலை நிலவரம் வரும் நாட்களில் எப்படி இருக்கும்? என்று தமிழ்நாடு தங்க நகை விற்பனையாளர் சங்க தலைவர் ஜெயந்தி லால் சலானி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ‛‛மத்திய அரசின் பட்ஜெட் காரணமாக தங்கம் விலை சவரனுக்கு 2,070 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. நேற்றைய விலையை ஒப்பிடும்போது தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.275 என்ற அளவில் குறைந்துள்ளது. ஏற்கனவே தங்கத்தின் இறக்குமதி வரி என்பது 15 சதவீதமாக இருந்தது. இதனை தற்போது 6 சதவீதமாக குறைத்துள்ளார்கள். இது சிறப்பான குறைப்பு என கூறலாம். இது சாதாரண, பாமர மக்களால் ஏற்று கொள்ள முடியும்.

மேலும் நகை வியாபாரிகளும் இதனை வரவேற்றுள்ளனர். காரணம் என்னவென்றால் நகை வியாபாரம் என்பது நன்றாக இருக்கும். தொடர்ந்து 6 மாதமாக தங்கம் விலை உயர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது ஒரு பிரேக் வந்துள்ளது. சவரனுக்கு 2,070 குறைந்துள்ளது என்பது பெரிய பிரேக்காக எடுத்து கொள்ளலாம்.

மேலும் தங்கம் கடத்தல் என்பது பெருமளவு குறையும். ஏனென்றால் சர்வதேச சந்தையில் உள்ள தங்கத்தின் விலைக்கும், இந்திய சந்தையில் உள்ள தங்கத்தின் விலைக்கும் ஒரு கிலோவுக்கு ஏறக்குறைய ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை வித்தியாசம் இருந்தது. இந்த விலை வித்தியாசம் என்பது தற்போது குறைந்துள்ளது. இதனால் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வருவோருக்கு பெரிய அளவில் எந்த ஆதாயமும் இருக்காது. இதனால் தங்கம் கடத்தல் என்பது பெருமளவு நிறுத்தப்படும்.

மேலும் தங்கம் கடத்தலால் நியாயமான முறையில் வியாபாரம் செய்யும் நகை விற்பனையாளர்களுக்கு பெரிய சவால் என்பது இருந்தது. இந்த சவால் என்பது இனி வரும் காலங்களில் இருக்காது. இதனால் தங்கத்தின் மீதான தற்போதைய இறக்குமதி குறைப்பால் நடுத்தர மக்கள், பாமர மக்களுக்கு பெரிய பலன் கிடைக்கும். காரணம் என்னவென்றால் திருமணம் உள்பட சுபநிகழ்ச்சிகளில் தங்கம் முக்கிய அங்கம் வகிக்கிறது.

சமீபத்திய விலை உயர்வால் தங்கம் வாங்க முடியாத ஒரு எட்டாக்கனியாக ஏழைகளுக்கு இருந்தது. தற்போது அது மாறி உள்ளது. மேலும் இந்த விலை குறைப்பு என்பது இன்று முதல் அமலுக்கு வந்துவிட்டது. இன்றைய விலை சரிவு என்பது 100 சதவீதம் பட்ஜெட்டில் வெளியான தங்கத்தின் மீதான இறக்குமதி வரியால் மட்டுமே நிகழ்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இந்தியாவில் மட்டும் விலை குறைந்துள்ளது. இதற்கு பட்ஜெட் அறிவிப்பு மட்டுமே காரணமாகும்.

ஒரு சவரனுக்கு 2,100 வரை விலை குறைந்துள்ளது என்பது பெரிய விலை குறைப்பாகும். உதாரணத்துக்கு 10 சவரன் நகை வாங்க வருவோருக்கு ரூ.22 ஆயிரம் வரை மிச்சம் ஏற்படும். இதனால் அவர்களால் கூடுதலாக அரை சவரன் நகையை வாங்கும் சூழல் உருவாகி உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். பலரும் தற்போது வியாபாரம் நன்றாக இருக்கிறது என்று கூறுகின்றனர். நிறைய பேர் கடைக்கு வந்து நகை வாங்கி செல்வதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் நகை தொடர்பான சிறுசேமிப்பு திட்டத்தில் நகை கட்டியவர்களுக்கு பெரிய ஆதாயம் கிடைக்க உள்ளது. தங்கம் விலை குறைந்துள்ளதால் அவர்களுக்கு கூடுதல் தங்கம் என்பது கிடைக்க வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை கூடுவது அல்லது குறைவது என்பது சர்வதேச சந்தையின் மதிப்பை பொறுத்து தான் அமையும். தற்போது இந்தியாவில் தங்கத்தின் விலை குறைந்ததற்கு மத்திய பட்ஜெட்டின் இறக்குமதி வரி குறைப்பு மட்டுமே காரணமாகும்.

நாளை முதல் தங்கத்தின் விலை என்பது சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். அதேவேளையில் இறக்குமதி வரி குறைப்பின் தாக்கம் தங்கம் விலையில் நீடிக்கும். இதனால் நேற்றைய தினத்தை ஒப்பிடும்போது நாளையும் தங்கத்தின் விலை குறைவாக தான் இருக்கும். அதேவேளையில் சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து வரும் நாட்களில் தங்கத்தின் விலை இருக்கும்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+