ஆட்டத்தை காட்டும் பைபர்ஜாய் புயல்.. ரொம்ப தீவிரம் அடையுதே..தமிழ்நாடு வானிலையில் இன்று என்ன நடக்கும்?
சென்னை: அரபிக்கடலில் உருவாகி இருக்கும் பைபர்ஜாய் புயல் அடுத்த 3 நாட்களில் மேலும் தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் போது அரபிக்கடலில் புயல் உருவாவது மிக மிக அபூர்வமான விஷயம். வெப்பமண்டல மேற்கு காற்று, மேல் நிலை காற்று ஆகியவையால் புயல் உருவாவதற்கான சூழ்நிலை இருக்காது. இதனால் ஜூன் முதல் செப்டம்பர் வரை அரபிக்கடலில் பெரிதாக புயல் உருவாகாது.
ஆனால் இந்த முறை அரபிக்கடலில் புயல் உருவாகி உள்ளது. அதே சமயம் இந்த பைபர்ஜாய் புயல் இந்திய கடல் பகுதிகளுக்கு அருகே வர வாய்ப்பு இல்லை. அரபிக்கடலில் தீவிர புயலாக இருக்கும் பைபர்ஜாய் புயல் அதி தீவிர புயலாக வாய்ப்பு உள்ளது.

வலிமை அடையும் புயல்: பைபர்ஜாய் புயல் தற்போது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. பொதுவாக ஒரு தாழ்வு மண்டலம் வலிமை அடைந்து புயல் ஏற்பட கடலின் மேல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும்.
அல்லது காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையத்தில் இதை விட அதிக வெப்பநிலை இருக்க வேண்டும். அந்த வெப்பநிலை இருந்தால் மட்டுமே புயலுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். தற்போது கோடைகாலம் என்பதால் இந்த சூழ்நிலை சரியாக உள்ளது.
அதேபோல் கடலுக்கு நடுவே.. நிலத்தில் இருந்து இன்னும் நீண்ட தூரத்தில் இருந்தால் கண்டிப்பாக இது புயலாக மாறி இருக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு பூமியில் இருந்து தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் அது முழுதாக உருவாக முடியும்.
ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் பூமிக்கு அருகில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுவோம். இது முழுமையாக உருவாகும் முன் அது கரையை கடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் பல தாழ்வு மண்டலங்கள் புயலாக மாறாமல் போய் இருக்கின்றன.
அதேபோல் மூன்றாவது விஷயம் வறண்ட காற்று. இந்த வறண்ட காற்று பொதுவாக தாழ்வு மண்டலம் உருவாக விடாமல் தடுக்கும். வறண்ட காற்று காரணமாக தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை இழக்கும். குளிர்ந்த காற்று இருந்தால் தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடையும்.
வறண்ட காற்று என்பது தாழ்வு மண்டலத்தை செயல் இழக்க செய்யும், ஆக்ரோஷத்தை குறைக்கும் ஒன்றாகும். இப்போது கோடைகாலம் என்றாலும் கடந்த வாரம் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வந்த குளிர்ந்த காற்று புயலுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.
இந்த மூன்று விஷயங்கள்தான் பொதுவாக ஒரு புயல் உருவாவதற்கான சூழ்நிலையை தீர்மானிக்கும். இந்த விஷயங்கள் சாதகமாக அமைந்தால் புயல் உருவாவதற்கான ஏற்ற சூழ்நிலைகள் இருக்கும். அரபிக்கடலில் இந்த எல்லா விஷயங்களும் பைபர்ஜாய் புயலுக்கு சாதகமாக உள்ளது.
பாதிப்பு: இந்திய கடலோர மாவட்டங்களில் இந்த பைபர்ஜாய் புயல் காரணமாக நேரடியாக எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை. இதனால் நமக்கு வானிலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால் அரபிக்கடலில் மீன் பிடிக்க செல்லும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

13ம் தேதி வரை இந்த பைபர்ஜாய் புயல் அதி தீவிர புயலாக தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த புயல் காரணமாக எந்த பாதிப்பும் ஏற்படாது. நேற்று நிலவிய அதே வெப்பமான வானிலையே நிலவும்.
சில பகுதிகளில் வெயில் குறையும் வாய்ப்புகள் உள்ளன. கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 145 முதல் 155 லோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 170 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications