சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்படி பண்றாங்களே! சென்னை வரும் மோடியிடம்.. பற்ற வைக்கபோகும் கமலாலயம்.. தப்பு தப்பு! சிக்கலில் திமுக

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு பாஜக சார்பாக முக்கியமான சில விஷயங்கள் புகார்களாக அளிக்கப்படும் என்று பாஜக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக கமலாலயம் வட்டாரத்தில் விசாரித்ததில் அவர்கள் முக்கிய விவரங்களை வெளியிட்டனர்.

பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு வருவதாக இருந்தது. பொங்கல் விழாவை மதுரையில் அவர் கொண்டாடுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் இந்த விழா பல்வேறு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது.

ஜன.7 முதல் 12-ம் தேதி வரை 1,100 இடங்களில் 'நம்ம ஊரு பொங்கல்' நிகழ்ச்சி பாஜக சார்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஜனவரி 12ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்வதாக இருந்தது. பாஜக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்தும் இந்த விழா நடக்கவில்லை.

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை: ரூ31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை: ரூ31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

Recommended Video

    Modi Chennai Visit Reasons | PM Modi Tamilnadu Visit | #TamilNadu
    மீண்டும் வருகிறார்

    மீண்டும் வருகிறார்

    அதிகரித்த கொரோனா கேஸ்களால் அவரால் தமிழ்நாடு வர முடியவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் சென்னைக்கு வருகிறார். நாளை பிரதமர் மோடி சென்னைக்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடி 26-ம் தேதி சென்னை வருகை தரும் நிலையில், நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் நேற்றுதான் ஆய்வு செய்தார். அவரின் இந்த பயணம் ஒருநாள் மட்டுமே கொண்டது.

    ஒருநாள் பயணம்

    ஒருநாள் பயணம்

    நாளை ஹெலிகாப்டர் மூலம் ஹைதராபாத்தில் இருந்து ஐஎன்எஸ் அடையாறு வருவார். பின்னர் கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கம் வந்து, அங்கு பணிகளை முடித்து மீண்டும் காரில் ஐஎன்எஸ் வருவார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை பழைய விமான நிலையம் செல்வார். அங்கிருந்து ராணுவ விமானத்தில் அவர் டெல்லி திரும்புவார். இடையில் அவர் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் 10 -15 நிமிடங்கள் சந்திப்பு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெரிய அளவில் நேரம் கிடைக்காது

    பெரிய அளவில் நேரம் கிடைக்காது

    இந்த பயணத்தில் பிரதமர் மோடி பாஜகவினருடன் பேச பெரிய அளவில் நேரம் கிடைக்காது. பெரிய அளவில் பிரதமர் மோடியால் அரசியல் ஆலோசனைகளை செய்ய முடியாது. சமீபத்தில்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்துவிட்டு போனதால், அரசியல் ஆலோசனைக்கான தேவையும் இருக்காது என்கிறார்கள். ஆனால் இரண்டு முக்கியமான விஷயங்களை பிரதமர் காதில் போட்டுவிட வேண்டும் என்ற திட்டத்தில் பாஜக நிர்வாகிகள் இருக்கிறார்களாம்.

    என்ன விஷயம்

    என்ன விஷயம்

    அதன்படி சமீபத்தில் சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் பாஜக எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவர் பாலசந்தர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரின் உயிருக்கு ஏற்கனவே அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், பாலசந்தர் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவிற்கு டீ குடிக்க சென்ற போது அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 6 மர்ம நபர்கள் இவரை வெட்டி படுகொலை செய்தனர்.

     பிரதமர்

    பிரதமர்

    பாஜக நிர்வாகி ஒருவர் இப்படி போலீஸ் பாதுகாப்பிற்கு இடையில் வெட்டிபடுகொலை செய்யப்பட்டதை பற்றி பிரதமர் மோடியின் காதுக்கு கொண்டு செல்ல பாஜக முடிவு செய்துள்ளதாம். அதோடு கடந்த 20 நாட்களில் சென்னையில் 18 கொலைகள் நடந்தது குறித்து, தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்தும் பாஜக பிரதமர் மோடியின் காதில் போட பாஜக முடிவு செய்துள்ளதாம். கேரளாவில் பாஜக நிர்வாகிகள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பலர் கொல்லப்பட்டனர்.

    கொலை

    கொலை

    அது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடக்காமல் இருந்தது. ஆனால் இப்போது நடக்க தொடங்கிவிட்டது. இதை அனுமதிக்க கூடாது. இது தப்பு. பிரதமர் இதில் கவனம் செலுத்தணும் என்று பாஜக முறையிட போகிறதாம். அதோடு சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். சிலரால் தங்களின் வாழ்விற்கு ஆபத்து உள்ளதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில்தான் தீட்சிதர்கள் விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடம் பாஜக தரப்பு பேச முயலும் என்கிறார்கள்.

    English summary
    What will BJP tell to PM Modi when he visits Tamil Nadu tomorrow?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X