சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன செய்யணும்னு தெரியும்! இன்று எடப்பாடி போடப்போகும் "கிடுக்கிப்பிடி"! 2 மெகா ஆப்சன்! இது வேற லெவல்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடக்க உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இரண்டு பெரிய முயற்சிகளை கூட்டத்தில் முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

    AIADMK பொதுக்குழு கூட்டம் | EPS VS OPS | Oneindia Tamil

    ஒரு ஆக்சன் படத்திற்கு உண்டான அத்தனை ட்விஸ்ட் மற்றும் டர்ன்களுடன் அதிமுக உட்கட்சி பூசல் சென்று கொண்டு இருக்கிறது. சட்ட போராட்டத்திற்கு பின் ஒருவழியாக அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் இன்று வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்க உள்ளது.

    நேற்று இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

    என்ன இப்படி ஆகிடுச்சே? அதிகாலையில் எடப்பாடி வீட்டில் நடந்தது என்ன? காரில் சென்ற 3 பேர்! பரபர பின்னணி என்ன இப்படி ஆகிடுச்சே? அதிகாலையில் எடப்பாடி வீட்டில் நடந்தது என்ன? காரில் சென்ற 3 பேர்! பரபர பின்னணி

    தடை இல்லை

    தடை இல்லை

    அதே சமயம் கூட்டத்திற்கு தடை இல்லை என்றாலும், புதிதாக தீர்மானம் எதையும் நிறைவேற்ற கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 23 தீர்மானங்களுக்கு ஓ பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தீர்மானங்களை பற்றி மட்டும் ஆலோசனை செய்ய, அதை நிறைவேற்ற உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இது இல்லாமல் புதிய தீர்மானம் எதையும் நிறைவேற்ற உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை. இதனால் ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடியாது.

    தீர்மானம்

    தீர்மானம்

    பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு முயன்று வந்தது. அதாவது பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கி, அதில் எடப்பாடி பழனிசாமியை பதவி ஏற்க சொல்லும் வகையில் தனி தீர்மானம் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தரப்பு முயன்றது. ஆனால் இதற்கு தற்போது கோர்ட் தடை விதித்து உள்ளது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை தீவிர ஆலோசனை செய்தார்.

    கோர்ட் தீர்ப்பு

    கோர்ட் தீர்ப்பு

    கோர்ட் தீர்ப்பு எதிராக வந்ததால் என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தார். சட்ட ரீதியாக என்ன ஆப்சன் இருக்கிறது என்று தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டார். இதில் அவர் சில நெருங்கிய நிர்வாகிகளிடம்.. கோர்ட் தீர்ப்பு வேண்டுமானால் நமக்கு எதிராக சென்று இருக்கலாம். பொதுக்குழுவில் நம் பலத்தை காட்டுவோம். பொதுக்குழு உறுப்பினர்கள் இன்னும் நம் பக்கம்தான் இருக்கிறார்கள். ஒற்றை தலைமை பற்றி தீர்மானம் தானே நிறைவேற்ற முடியாது.. ஆலோசிக்கலாமே என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.

    என்ன செய்யணும்

    என்ன செய்யணும்

    அதோடு எனக்கு என்ன செய்யணும் என்று தெரியும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் கூறி இருக்கிறாராம். அதன்படி 2 முக்கியமான மூவ்களை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்வார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக எடப்பாடி ஆதரவாளர்களிடம் விசாரித்ததில் அவர்கள் முக்கியமான விஷயங்களை பகிர்ந்தனர். அதன்படி, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 1-ந்தேதி அதிமுக தலைமையகத்தில் கட்சியின் செயற்குழுவை அதிமுக தலைவர்கள் கூட்டினர். அந்த செயற்குழுவில் தான், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளரான இபிஎஸ் ஆகிய இருவருக்கும் வானளாவிய அதிகாரத்தை வழங்கும் வகையில் கட்சியின் சட்டவிதிகளில் திருத்தம் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றினர்.

     சட்ட திருத்தம்

    சட்ட திருத்தம்

    அதன்படி அதிமுக சட்டவிதிகள் 20(2), 40, 45 ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வந்தனர். அப்படி திருத்தப்பட்ட விதிகளின் படி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை ஓட்டு மூலம் இணைந்தே தேர்ந்தெடுப்பர். அதேசமயம், ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர்களை அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றவோ திருத்தவோ பொதுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்றும் கட்சி விதிகளை திருத்தினர். அதாவது பொதுக்குழு மூலம் ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர் நியமனத்தில் மாற்றம் செய்ய முடியாது, என்று தீர்மானம் கொண்டு வந்தனர்.

    எடப்பாடி மூவ்

    எடப்பாடி மூவ்

    இந்த சட்ட திருத்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை. இந்த சட்ட திருத்தம் பொதுக்குழுவில்தான் அமலுக்கு வர வேண்டும். பொதுக்குழுவில் இன்று அந்த சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படி அளிக்கப்பட்டால் அது ஒற்றை தலைமைக்கு எதிராக திரும்பும். அதாவது பொதுக்குழு கூட ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்குவதில் சிக்கல் ஏற்படும். இதனால் இன்று எடப்பாடி இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கமால் தடுக்க பார்ப்பார் என்கிறார்கள்.

    தடுக்க திட்டம்

    தடுக்க திட்டம்

    அதாவது இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், இந்த சட்டத்திற்கு எடப்பாடி ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் அவர் இந்த சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டார் என்கிறார்கள். இரண்டாவது மூவ்படி.. இன்று கண்டிப்பாக ஒற்றை தலைமை குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்படும். பொதுக்குழுவில் ஒற்றை தலைமை பற்றி நேரடியாக எடப்பாடியே நிர்வாகிகள் மத்தியில் பேசுவார். இவரின் பேச்சு அனைத்தையும் மாற்றும் வகையில் இருக்கும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    English summary
    What will Edappadi Palanisamy do in the general council meeting of AIADMK today? அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடக்க உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இரண்டு பெரிய முயற்சிகளை கூட்டத்தில் முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X