சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈரோடு கிழக்கில் இதுதான் நடக்கும்.. களமிறங்கும் படை.. ரிசல்ட்டே தலைகீழாகும்! அடித்து சொன்ன எக்ஸ்பர்ட்

ஈரோடு கிழக்கில் என்ன நடக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். ஈரோடு கிழக்கில் ஆளும் கட்சி சார்பாக ஒட்டுமொத்த படையே இறக்கப்படும். அது எதிர்க்கட்சி கோட்டையாக இருந்தாலும் ரிசல்ட் தலைகீழாகவே வரும், என்று மூத்த பத்திரிகையாளர் ம

Google Oneindia Tamil News

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தனது கணிப்பை தெரிவித்து உள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வருகிறது. வரும் பிப்ரவரி 27ம் தேதி இங்கே இடைத்தேர்தல் நடக்க உள்ளது. மார்ச் 3ம் தேதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. . இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே போட்டியிட உள்ளார். எதிர் தரப்பில் பாஜக போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக முடிவு செய்துள்ளது.அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தரப்பு அதிமுகவும் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து இருக்கிறது. பாஜக இந்த தேர்தலில் போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம் என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..போட்டியில் இருந்து விலகிய சமக..யாருக்கும் ஆதரவு இல்லை..சரத்குமார் அதிரடி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..போட்டியில் இருந்து விலகிய சமக..யாருக்கும் ஆதரவு இல்லை..சரத்குமார் அதிரடி

நத்தம் விசுவநாதன்

நத்தம் விசுவநாதன்

அவர் அளித்த பேட்டியில், 1999ல் நத்தம் விசுவநாதன் அதிமுக சார்பாக இடைத்தேர்தலில் நத்தம் தொகுதியில் வெற்றிபெற்றார். அதுதான் எதிர்க்கட்சி ஒரு இடைத்தேர்தலில் முறையாக வென்ற தேர்தல். அதன்பின் டிடிவி தினகரன் ஆர் கே நகரில் வென்றார். ஆனால் ஆர். கே நகரில் அவர் வென்றதை ஒரு ஸ்பெஷல் கேஸாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஜெயலலிதா மரணத்திற்கு பின் 23 தொகுதியில் 13 தொகுதியில் திமுக வென்றது என்பது மினி பொதுத்தேர்தல் போன்றது. மற்றபடி இடைத்தேர்தல்களில் ஆளும் கூட்டணிதான் வென்றுள்ளது. மற்றபடி பொதுத்தேர்தல்களில் ஆளும் கட்சி சார்பாக அமைச்சர்கள் களமிறக்கப்படுவார்கள். பெரிய டீம் இறக்கப்படும். போலீசார் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். இதுதான் இதுவரை நடந்த வரலாறு.

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

அப்படி இருக்கும் போது ஈரோடு கிழக்கில் என்ன நடக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். ஈரோடு கிழக்கில் ஆளும் கட்சி சார்பாக ஒட்டுமொத்த படையே இறக்கப்படும். அது எதிர்க்கட்சி கோட்டையாக இருந்தாலும் ரிசல்ட் தலைகீழாகவே வரும். இந்த தேர்தல் ஒரு சடங்கு அவ்வளவுதான். மற்றபடி வாக்கிற்கு 10 ஆயிரம் கொடுக்க போவதாக பேச்சுக்கள் வருகின்றன. உறுதியான செய்தி அல்ல. எனக்கு தெரிந்து பேச்சுக்கள் வருகின்றன. பணத்தை இங்கே தண்ணியாக செலவு செய்ய போகிறார். கடந்த 20 வருடமாக இடைத்தேர்தலில் ஆளும் கட்சிகள் எப்படி நடந்து கொண்டதோ அப்படித்தான் இப்போதும் நடக்கும்.

 அமைச்சர்கள்

அமைச்சர்கள்

அமைச்சர்கள் எல்லோரும் இங்கே களமிறக்கப்பட்டு உள்ளனர். அப்படி என்றால் பிரஷர் எப்படி இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஜெயலலிதா ஆட்சியின் கீழ் எப்போதெல்லாம் இடைத்தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் இதுதான் நடந்தது. எடப்பாடி ஆட்சியின் கீழும் இதுதான் நடந்தது. 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் இதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. என்னை கேட்டால் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி பிரியாக விட வேண்டும். அப்போதுதான் ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தால் அதை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள முடியும்.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

தேர்தல் முடிவை அரசுக்கான சான்றிதழாக பார்க்க வேண்டும். எல்லா அமைச்சரையும் இறக்குவதற்கு இரண்டு அமைச்சர்களை மட்டும் களமிறக்க வேண்டும். பெரிதாக பிரஷர் போடாமல் சுதந்திரமாக வேலை பார்க்க வேண்டும். அப்போதுதான் இடைத்தேர்தலில் உண்மையான முடிவு வரும். ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தால் ஆளும் கட்சிக்கு என்ன ஆகிவிடும்? அப்போதுதான் ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தால் அதை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள முடியும். நிர்வாகத்தில் மாற்றங்களை செய்ய முடியும். 2003ல் ஜெயலலிதா சாத்தான் குளத்தில் தொடங்கி வைத்ததில் இருந்து இப்படித்தான் நடந்து கொண்டு இருக்கிறது. இப்போது இடைத்தேர்தல் என்பது தமிழ்நாட்டில் கேலிக்கூத்தாக மாறி உள்ளது.

12 மந்திரிகள்

12 மந்திரிகள்

12 மந்திரிகள் ஒரு இடத்தில் கேம்ப் செய்தால் என்ன நடக்கும் என்று பாருங்கள்? தேர்தல் முடிவு எப்படி வரும் என்று பாருங்கள்? இடைத்தேர்தலில் என்ன நடக்கும் என்பதைதான் 20 வருடமாக பார்த்துக்கொண்டு இருக்கிறோமே.. இடைத்தேர்தலில் ஆளும் கூட்டணி தானே வென்றுகொண்டு இருக்கிறது. ஜெயலலிதா சார்பாக கும்முடிப்பூண்டியில் லட்டு கொடுக்கப்பட்டதே. லைட்டில் மூக்குத்தி வைத்து சப்ளை செய்தாரே? போலீசார் மேற்பார்வையிலேயே இப்படித்தான் நடந்தது. ஜெயலலிதா ஆட்சியில் இப்படித்தான் இடைத்தேர்தல் நடந்தது. திமுக ஆட்சியிலும் கூட திருமங்கலத்தில் எப்படி எல்லாம் பணம் கொடுக்கப்பட்டது.

ஏன் முக்கியம்?

ஏன் முக்கியம்?

இதனால் மத்திய அதிகாரிகள் தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகளின் வாகனங்களையே சோதனை செய்கிறார்களே. இதை பற்றி பேசாமல் தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்ற விவாதத்தை மேற்கொள்வதே தவறானது. 12 மந்திரிகள் ஒரு இடத்தில் கேம்ப் செய்தால் என்ன நடக்கும் என்று பாருங்கள்? ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தால் ஆளும் கட்சிக்கு என்ன ஆகிவிடும்? அப்போதுதான் ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தால் அதை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள முடியும். மக்கள் வாக்களித்த ஆட்சி இது. 2026 வரை அவர்கள்தான் ஆட்சியில் இருக்க போகிறார்கள். இந்த ஒரு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் என்ன ஆகிவிடும்.?

English summary
What will happen in Erode East By-Election? Journalist Mani exclusive interview to Oneindia Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X