ஜூன் 4 ரிசல்ட் வந்ததும்.. அதிமுகவில் இதுதான் நடக்கும்.. சீக்ரெட்டை சொல்லிட்டாங்களே.. அப்போ எடப்பாடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூன் 4க்கு பின் அதிமுக உடையாது. அதிமுகவில் எதுவும் நடக்காது. எடப்பாடி கையில்தான் இருக்கும். அது எடப்பாடி கையை விட்டு எங்கும் செல்லாது. அண்ணாமலை கட்சி உடையும் என்று கூறினார். ஆனால் அதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின் மீண்டும் உட்கட்சி மோதல் வெடிப்பதற்கான அறிகுறிகள் ஏற்பட தொடங்கி உள்ளன. அந்த கட்சியில் லோக்சபா தேர்தல் முடிந்து என்ன நடக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

What will happen to Edappadi Palanisamy and AIADMK after June 4 Lok Sabha elections results

பேட்டி: அதில், முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிமுகவில் இருந்து சென்றுவிட்டது. எடப்பாடி பழனிசாமி காரணமாக இப்படி நடந்துள்ளது. அதேபோல் கொங்கில் குறிப்பிட்ட பிரிவினர் வாக்கு வங்கியை அண்ணாமலை வாங்கி உள்ளார். முக்குலதோர் வாக்கு வங்கியை மொத்தமாக ஓபிஎஸ், டிடிவி தினகரன் உடைத்துவிட்டனர். இதனால் அந்த வாக்கு அதிமுகவை விட்டு சென்றுவிட்டது. முக்குலத்தோர் வாக்குகள் காரணமாக எடப்பாடி பழனிசாமி அப்செட்டில் இருக்கிறார். அவர் கடுமையான வருத்தத்தில் இருக்கிறார்.

உதயகுமார் இன்னொரு பக்கம் தென் மண்டலத்தில் செலவு செய்யவில்லை. அவர் சசிகலாவிற்காக வேலை பார்த்தார் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. மாறாக அதே சமயம் அவர் தேர்தல் வேலைகள் எதையும் செய்யவில்லை. ஜூன் 4க்கு பின் அதிமுக உடையாது. அதிமுகவில் எதுவும் நடக்காது. எடப்பாடி கையில்தான் இருக்கும். அது எடப்பாடி கையை விட்டு எங்கும் செல்லாது. அண்ணாமலை கட்சி உடையும் என்று கூறினார். ஆனால் அதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை.

எடப்பாடி இமேஜ் சரியாது. அவரின் இமேஜ் நீடிக்கும். எடப்பாடியால்தான் இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தை கட்சியை காக்க முடிந்தது. அவரால்தான் கட்சியை பாஜகவை எதிர்த்து காத்துக்கொள்ள முடிந்தது. பாஜகவை சமாளித்து, சசிகலாவை சமாளித்து, ஓ பன்னீர்செல்வத்தை சமாளித்து கட்சியை எடப்பாடி காத்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொங்கு பெல்ட் டீம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. இவைகள் நம்மை பிளாக் மெயில் செய்கிறார்கள் என்று எடப்பாடி நினைக்கிறார். ஈரோடு வேட்பாளர் ஆற்றல் அசோக்கிற்கு சீட் கொடுக்க கூடாது என்று தங்கமணி நினைக்கிறார். ஆனால் அதை எடப்பாடி கேட்கவில்லை. வேண்டும் என்று தங்கமணி எதிர்க்கிறார். ஆனால் எடப்பாடி கேட்காமல் இப்படி செய்கிறார்.

தங்கமணியை காலி செய்ய ஆற்றலை எடப்பாடி இறக்குகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் எடப்பாடி புதிய ஆட்களை கொண்டு வருகிறார். அப்படி ஒரு ஆள் எடப்பாடி. நல்ல அரசியல் தெரிந்தவர். சசிகலாவையே வீழ்த்தியவர் அவர். அதிமுகவையே கூவத்தூரில் ஏலத்திற்கு எடுத்தவர் அவர். இப்போது கூட இருக்கும் பழைய தலைகளை காலி செய்வதற்காக எடப்பாடி புதிய தலைகளை மாவட்டத்திற்கு மாவட்டம் இறக்க பார்க்கிறார்.

ஆனால் இதனால் கட்சி உடையாது. கட்சி எப்படி இருந்தாலும் தொடர்ந்து நீடிக்கும். அப்போது ஆட்சியை காப்பாற்றியது எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி கையில் 100 சதவிகிதம் கட்சி வந்துவிட்டது. எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லோரும் எடப்பாடி கீழ் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி செல்வார்கள், என்று பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+