அண்ணாமலையை என்ன செய்யலாம்? ஆலோசனையில் இறங்கிய டெல்லி.. "அதுதான்" முடிவா? வெளியான சீக்ரெட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. தேசிய தலைமை சில முடிவுகளை எடுக்க உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் உள்ளார். அங்கே அவர் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்களையும், பாஜக தேசிய தலைவர் நட்டாவையும் சந்தித்துள்ளார். அவரின் பதவி குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில் மூத்த பத்திரிகையாளர் பிரியன் இது தொடர்பாக ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், 2 திராவிட கட்சிகளுடனும் கூட்டணி வைக்க மாட்டேன். வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றார். இப்போது மட்டும் ஏன் ராஜினாமா செய்யவில்லை. அதிமுக கூட்டணி பற்றி கேட்டதற்கு தேசிய தலைமை முடிவு செய்யும். அவர்கள்தான் முடிவு எடுப்பார்கள் என்று அண்ணாமலை கூறினார். இப்போது ஏன் ராஜினாமா பற்றி பேசவில்லை. இப்போது ஏன் கூட்டணி பற்றி பேசவில்லை? இப்போது ஏன் அவர் தைரியமாக கருத்து சொல்லவில்லை? நீங்களே சொல்லுங்கள்.

What will happen to the Tamil Nadu BJP chief posting of Annamalai?

அதிமுக - பாஜக கூட்டணியை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. தேசிய தலைமை சில முடிவுகளை எடுக்க உள்ளது. அதிமுகவுடன் சுமுகமாக செல்ல வேண்டிய நிலையில் பாஜக இருந்தது. அதை அண்ணாமலை கெடுத்துவிட்டார். இதை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் டெல்லி உள்ளது. இதற்கு அண்ணாமலையை நீக்க வேண்டுமா ? வைக்க வேண்டுமா என்று பாஜகதான் யோசிக்கும். அண்ணாமலையை என்ன செய்யலாம் என்று டெல்லி ஆராய்ந்து கொண்டு இருக்கிறது.

எடப்பாடியை மீண்டும் கொண்டு வருவது பெரிய விஷயம் இல்லை. பல கட்சிகளை இவர்கள் எதிர்கொண்டு உள்ளனர். சிவசேனா தொடங்கி பல கட்சிகளை எதிர்கொண்டு உள்ளனர். இவர்கள் நினைத்தால் அதிமுகவை எளிதாக எதிர்கொள்ள முடியும். அதனால் எடப்பாடியை மீண்டும் கொண்டு வருவது பெரிய விஷயம் இல்லை. அவரை கண்டிப்பாக எளிதாக எதிர்கொள்ள முடியும். இன்னொரு பக்கம் அண்ணாமலையை நீக்குவார்களா? மாற்றுவார்களா என்பது பெரிய விஷயம் இல்லை. டெல்லி அவருக்கு கண்டிப்பாக அட்வைஸ் செய்யும்.

( நான் ஜெயித்து காட்டுறேன்.. என்னை நம்புங்கள்.. டெல்லியில் சொன்ன அண்ணாமலை.. வந்து விழுந்த ஷாக் பதில் )

எடுக்க வேண்டிய நிலைமை இருந்தால் கண்டிப்பாக எடுப்பார்கள். மோடிதான் பிரதமர் என்று எடப்பாடி கூறுகிறார். அப்படி இருக்க அண்ணாமலையை தூக்கினால் எடப்பாடி மீண்டும் உள்ளே வருவார். திமுக பாஜக பிளவு சரியாக அமையவில்லை என்பதே இப்போது நடக்கும் பல்வேறு குழப்பங்களுக்கு காரணம். அண்ணாவை பற்றி அண்ணாமலை பேசியதுதான் கூட்டணி பிரிவிற்கு காரணம் என்று சொல்ல முடியாது. இவர்கள் பிளவிற்கான சரியான காரணம் சொல்லப்படுவது இல்லை. அதனால்தான் இதை பற்றி காத்திருக்க வேண்டும்.

( அண்ணாமலை இல்லாமல்.. கேசவ விநாயகம் மீட்டிங் போட்டது ஏன்? )

பாஜகவிற்கு வெற்றி முக்கியம். அவர்கள் வெற்றிபெற யாரும் விதிவிலக்கு இல்லை. யாரையும் பலிகடா ஆக்குவார்கள். அண்ணாமலைக்கு இது தெரியும். அதனால்தான் தன்னுடைய பதவி வெங்காயம் போன்றது. தலைமை பதவி வெங்காயம் போல இருக்கும் என்று கூறி உள்ளார்., இன்னொரு பக்கம் நிர்மலா சீதாராமனை கொண்டு வரலாம். அண்ணாமலைக்கு பதவியை நீக்காமல் அவரை அடக்கி வைத்துவிட்டு நிர்மலா சீதாராமனை கொண்டு வரலாம்.

What will happen to the Tamil Nadu BJP chief posting of Annamalai?

எடப்பாடி கூட வேறு எதையோ நினைத்து கூட்டணியை உடைத்துள்ளார். கூட்டணி உடைந்ததற்கான வேறு ஏதோ காரணம் உள்ளது. அமித் ஷா - எடப்பாடி பேசியது என்ன என்று தெரியவில்லை. இது அண்ணாமலையை தூக்க எடப்பாடி செய்த டிராமாவா? அல்லது பாஜகவிற்கு தொகுதிகளை குறைக்க செய்த டிராமாவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அமித் ஷா எடப்பாடி பழனிசாமியை தனியாக அழைத்து பேசி உள்ளார். அவர்கள் பேசியது என்ன? வேறு ஏதோ நடந்துள்ளது, என்ன நடக்கும் என்று பார்க்கலாம், என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+