ஈரோடு கிழக்கில் பெரும் அதிர்ச்சி.. ஓபிஎஸ்ஸின் அடுத்த மூவ் என்ன? இபிஎஸ்ஸை அதிர வைக்கும் பிளான் ரெடி?
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகள் 106 பேர் ராஜினாமா
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகள் 106 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில் ஓபிஎஸ்ஸின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்ஸுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேஎஸ் தென்னரசு, ஓபிஎஸ் சார்பில் செந்தில் முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டனர்.

இரட்டை இலை சின்னம்
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து இரட்டை இலை சின்னம் கோரி எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் பொது வேட்பாளர் ஒருவரை அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பொதுக் குழு உறுப்பினர்கள்
அதன்படி இரு தரப்பை சேர்ந்த பொதுக் குழு உறுப்பினர்களின் கையெழுத்தை பெற்றுக் கொண்டு தென்னரசுவை வேட்பாளராக அறிவித்து அந்த பட்டியலை டெல்லி உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த தமிழ் மகன் உசேன் இரட்டை இலை சின்னத்தையும் பெற்றுக் கொண்டார். செந்தில் முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இந்த நிலையில் ஓபிஎஸ்ஸை பிரச்சாரத்திற்கு அழைக்காமல் கூட்டணி கட்சியினரை வைத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பிரச்சாரம் செய்து வருகிறது.

பிரச்சாரம்
ஓபிஎஸ்ஸை பிரச்சாரத்திற்கு அழைக்காதது குறித்து கேட்ட போது வேறு கட்சித் தலைவரை எதற்காக நாங்கள் பிரச்சாரத்திற்கு அழைக்க வேண்டும் என எடப்பாடி தரப்பினர் கேள்வி எழுப்பினர். இந்த தேர்தலில் ஓபிஎஸ்ஸின் உதவியே இல்லாமல் தனது பலத்தை காட்ட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். ஆனால் ஓபிஎஸ் எங்கே என ஈரோடு கிழக்கு தொகுதியினர் கேட்பதாக பெங்களூர் புகழேந்தி தெரிவிக்கிறார்.

ஓபிஎஸ் அணியின் மா செக்கள் கூட்டம்
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஓபிஎஸ்ஸின் பலத்தை காட்ட திருச்சி அல்லது மதுரையில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூட உச்சரிக்க விரும்பவில்லை என மிகவும் காட்டமாக தெரிவித்தார் ஓபிஎஸ். இந்நிலையில், கட்சிக்கு தொடர்பில்லாத நபரை வேட்பாளராக அறிவித்ததன் காரணமாக ஓ.பி.எஸ். அணி ஈரோடு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் 106 பேர் அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

கடிதம்
இதற்கான கடிதத்தை ஓபிஎஸ்ஸுக்கு அவர்கள் அனுப்பியுள்ளனர், கட்சிக்கு தொடர்பில்லா நபரை வேட்பாளராக அறிவித்தது இல்லாமல் அவரை திரும்ப பெற்றதால் அதிருப்தி ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் செலவிட்ட தொகையை தர மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இது தொடர்பாக முருகானந்தம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என தெரிகிறது. இதனால் ஓபிஎஸ் அடுத்து என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த கட்ட நகர்வு
இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில், இரட்டை இலை சின்னத்திற்கு எந்த வித ஆபத்தும் தோல்வியும் ஏற்பட கூடாது என்பதற்காகத்தான் ஓபிஎஸ் தனது வேட்பாளரை திரும்ப பெற்றார். இதில் என்ன தவறு இருக்கிறது. இரட்டை இலை, ஒருங்கிணைந்த அதிமுக என்பதுதான் ஓபிஎஸ்ஸின் தாரக மந்திரமாக இருக்கிறது. எனவே திருச்சி அல்லது மதுரையில் மாநாட்டை நடத்தி ஓபிஎஸ் தனது பலத்தை நிரூபிப்பார். எதுவாக இருந்தாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகத்தான் வரும். எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் அளவுக்கு ஓபிஎஸ் முடிவு எடுப்பார் என்றார்கள்.
-
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications