14 மாநிலங்கள் டார்கெட்.. 6,200 கிமீ பயணம்.. ‘பாரத் ஜோடா’வால் ராகுல் சாதித்தது என்ன?
சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்குத் தயாராகிவிட்டார் ராகுல்காந்தி. அவர் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி தனது இரண்டாவது யாத்திரையைத் தொடங்க உள்ளதாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்தப் பயணத்திற்கு அவர் 'பாரத் நியாய யாத்ரா' என்று பெயர் வைத்துள்ளார். அதாவது 'பாரத் ஜோடோ யாத்ரா 2.ஒ' என்று இதை அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

முதல் யாத்திரையை அவர் தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பயணித்தார். இப்போது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நடக்க இருக்கிறார். அதாவது மணிப்பூர் டு மும்பை வரை.
தமிழ்நாட்டைத் தேர்வு செய்த ராகுல்:
அவரது பாரத் ஜோடோ யாத்ரா 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களின் வழியே சென்றது. இந்தப் பயணத்தில் அவர் மொத்தம் 75 மாவட்டங்களைத் தொட்டு புகுந்து புகுந்து சென்றார். அப்படி என்றால் 75 மக்களவைத் தொகுதிகளின் வழியே அவரது பிரச்சாரத்தின் குரல் ஒலித்தது.
பாரத் ஜோடா யாத்ரா நடைப்பயணத்தில் அவர் 12 பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார். 100க்கும் மேலான தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றார். 13 முறை செய்தியாளர்களுடன் சந்திப்பு நடத்தினார். 275க்கும் அதிகமான நடைப்பயணம். இதில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் உட்கார்ந்து தனது உரைகளை நிகழ்த்தினார் ராகுல்.

இந்த யாத்ரா பெரிய அளவில் அரசில் அலையை நாட்டில் உருவாக்கி விடவில்லை. ஆனால், எந்த ஆதரவு இல்லாமல் வதங்கிப் போய் கிடந்த காங்கிரஸ் என்ற ஆலமரத்திற்கு அது கொஞ்சம் ஊட்டச்சத்தைக் கொடுத்தது என்பது உண்மை.
பாரத் ஜோடா யாத்ராவை அவர் கடந்த செப்டம்பர் 7 அன்று தொடங்குவதற்கு முன்னதாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அங்குத் தொடங்கிய அவரது பிரச்சாரத்தில் அவர் கையில் எடுத்த முதல் ஆயுதம் தேசியக் கொடி. ஆர்.எஸ்.எஸ். மூவர்ணக் கொடியை தங்களின் தனிப்பட்ட சொத்தாகக் கருதுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், 'குறிப்பிட்ட எந்த மதத்திற்கும் அது சொந்தமல்ல' என்ற வாதத்தை முன்வைத்தார்.
அப்படியே அவர் பிரபல குக்கிங் சானல் குழுவுடன் சமையல் செய்தார். அது நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியது. இப்படி நாடு முழுவதும் அவரது பயணம் சோஷியல் மீடியாவில் தாக்கம் செலுத்துபவர்களுடன் திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

சர்ச்சைகளின் நடுவே பாரத் ஜோடோ:
இந்த பாரத் ஜோடோ யாத்ராவில் ராகுலுக்குப் பல சர்ச்சைகளும் காத்திருந்தன. அவர் தமிழ்நாட்டில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்த வீடியோ ஒன்று சர்ச்சையைக் கிளப்பியது.
பாதர் ஜார்ஜ் பொன்னையா 'ஏசுதான் கடவுள்; சக்தி அல்ல' என்று பேசுவதாக அமைந்த வீடியோவை பாஜகவினர் தங்களுக்குக் கிடைத்த பெரிய ஆயுதமாகக் கையில் எடுத்துக் கொண்டு போராட்டத்தில் குதித்தனர்.
அதைப்போலவே ராகுல் மகாராஷ்டிராவில், சர்வர்க்கரை தாக்கிப் பேசியதாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே ஒரு சர்ச்சையைக் கிளப்பினார். அங்கும் ராகுல் ஒரு பின்னடைவைச் சந்தித்தார்.

இதே யாத்திரையின் போது நர்மதா அணைக்கு எதிராகப் போராடி வரும் மேதா பட்கர் ராகுல் காந்தியுடன் கலந்து கொண்டார். அதைக் கொண்டு ராகுலைத் தாக்கி விமர்சித்தார் பிரதமர் மோடி. 'வளர்ச்சிக்கு எதிரானவர்' அவர் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
ராகுலின் பாரத் ஜோடா யாத்ரா நுழைந்த முதல் ஹிந்தி மாநிலம் மத்தியப் பிரதேசம் . அம்மாநில உஜ்ஜைனியில் உள்ள மகா காலேஷ்வர் கோவிலில் ராகுல் பிரார்த்தனை செய்தார்.
மேலும் கடுமையாக உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள், உண்மையான "தபஸ்விகள்" போன்றவர்களை பாஜக அரசு மதிக்கவில்லை என்க் கூறினார். இவர்கள் இந்துக் கடவுள்களான சிவன், ராமர் மற்றும் கிருஷ்ணர் போன்றவர்கள் என்றார். அதுவும் விவாதமானது.

நடைப்பயணம் செய்த மாற்றங்கள் என்ன?
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஐ விமர்சித்த அவர் அப்படியே கேரளாவுக்குள் புகுந்தார். அங்கே அவருக்கு சில கூடுதல் எதிரிகள் கிடைத்தனர். சிபிஐ(எம்) மற்றும் பாஜகவை விமர்சித்தார்.
செப்டம்பர் 20, 2022 அன்று அவரது நடைப்பயணம் கர்நாடகாவிற்குள் நுழைந்து. கேரளாவில் பாஜக மற்றும் சிபிஐ(எம்) அவரது எதிரிகளாக இருந்தனர்.
ஆனால், கர்நாடகாவில் நிலைமை தலைகீழானது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான சித்தராமையாவுக்கும் டி.கே.சிவக்குமாரும் இடையே பிளவு உருவாகி வருவதாகச் செய்திகள் வெளியாகின. அதை சரிக்கட்ட வேண்டிய நிலைக்கு ராகுல் ஆளாவார் என்று ஊகங்கள் வெளியாகின.

ஆனால், இரண்டு தலைவர்களும் தங்களுக்குள் இருந்த உட்கட்சி பூசலை ஒதுக்கிவைத்துவிட்டு, ராகுல் யாத்திரைக்கு முக்கியத்துவம் அளித்தனர்.
மைசூரில் மொத்தம் 22 நாள்கள் நடந்த யாத்திரையில் காங். கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொண்டார். 2017ஆம் ஆண்டு மதவாத சக்திகளால் கொல்லப்பட்ட கன்னட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் குடும்பத்தினர் யாத்திரையில் ராகுலுடன் கலந்துகொண்டனர்.
ராகுலின் பயணம் நாட்டில் பெரிய அளவு பயன்பட்டதோ இல்லையோ, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு மறு உயிர் அளித்தது. பாஜவின் ஆட்சியை அகற்றிவிட்டு, காங்கிரஸ் மீண்டும் ஆட்சி நாற்காலியில் அமர, ஒரு வாய்ப்பை உருவாக்கித் தந்தது பாரத் ஜோடோ யாத்ரா.

இதனால், தென்மாநிலங்களின் ஒரு பகுதியாக இருந்த கர்நாடக மாநில பாஜகவின் பிடியை உடைத்தார் ராகுல். இதனால் திராவிட மண்ணிலிருந்தே பாஜக துடைத்தெறியப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூட அறிக்கை விட்டார்.
இதனைத் தொடர்ந்து யாத்திரை தெலங்கானாவுக்குள் சென்றது. அதாவது கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர். 13 நாள்களை இம்மாநிலத்தில் செலவிட்டார் ராகுல். இதன் விளைச்சலைச் சமீபத்தில் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் அறுவடை செய்தது.
பாரத் ராஷ்டிர சமிதியை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த நடைப்பயணத்தில் ஒரு பெரிய பகுதி மஹ்பூப்நகர் மாவட்டத்தை உள்ளடக்கி இருந்தது.

இந்தத் தேர்தலில் இங்குள்ள 14 சட்டசபை தொகுதிகளில் 12 தொகுதிகளை பிஆர்எஸ் கட்சியிடம் இருந்து காங்கிரஸ் கைப்பற்றியது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டது ராகுல் யாத்திரை.
இந்த பாரத் ஜோடோ யாத்ராவில் ராகுலுக்குப் பல சர்ச்சைகளும் காத்திருந்தன. அவர் தமிழ்நாட்டில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்த வீடியோ ஒன்று சர்ச்சையைக் கிளப்பியது. பாதர் ஜார்ஜ் பொன்னையா 'ஏசுதான் கடவுள்; சக்தி அல்ல' என்று பேசுவதாக அமைந்த வீடியோவை பாஜகவினர் தங்களுக்குக் கிடைத்த பெரிய ஆயுதமாகக் கையில் எடுத்துக் கொண்டு போராட்டத்தில் குதித்தனர்.
வடமாநிலங்களில் எழுந்த சர்ச்சைகள்:
அதைப்போலவே ராகுல் மகாராஷ்டிராவில், சர்வர்க்கரை தாக்கிப் பேசியதாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே ஒரு சர்ச்சையைக் கிளப்பினார். அங்கும் ராகுல் ஒரு பின்னடைவைச் சந்தித்தார்.
இதே யாத்திரையின் போது நர்மதா அணைக்கு எதிராகப் போராடி வரும் மேதா பட்கர் ராகுல் காந்தியுடன் கலந்து கொண்டார். அதைக் கொண்டு ராகுலைத் தாக்கி விமர்சித்தார் பிரதமர் மோடி. 'வளர்ச்சிக்கு எதிரானவர்' அவர் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
ரகுலின் பாரத் ஜோடா யாத்ரா நுழைந்த முதல் ஹிந்தி மாநிலம் மத்தியப் பிரதேசம் . அம்மாநில உஜ்ஜைனியில் உள்ள மகா காலேஷ்வர் கோவிலில் ராகுல் பிரார்த்தனை செய்தார்.
மேலும் கடுமையாக உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள், உண்மையான "தபஸ்விகள்" போன்றவர்களை பாஜக அரசு மதிக்கவில்லை என்க் கூறினார். இவர்கள் இந்துக் கடவுள்களான சிவன், ராமர் மற்றும் கிருஷ்ணர் போன்றவர்கள் என்றார். அதுவும் விவாதமானது.
கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை ஜனவரி 30ஆம் தேதி இறுதிக் கட்டப் பேரணி கூட்டத்தில் போய் நின்றது. அங்கு பேசிய ராகுல், காஷ்மீரில் தாம் தாக்கப்படலாம் என்று எச்சரித்ததாகவும், ஆனால், "இங்குள்ள மக்கள் எனக்கு கையெறி குண்டுகளை வழங்கவில்லை. அன்பால் நிறைந்த இதயங்களைத் தருகிறார்கள்" என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல் மற்றும் ஆர்எஸ்எஸ் வன்முறையைத் தூண்டுவதாகத் தாக்கினார்.
ஒட்டு மொத்த இந்தப் பயணத்தின் போது திமுக, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சிபிஐ போன்ற பல தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மேடையை ராகுலுடன் பகிர்ந்து கொண்டனர். கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியிலும் கூட பேரணியை நடத்தினார் ராகுல்.
அதைப்போல் கட்சி சார்பற்ற ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நடிகை ஸ்வரா பாஸ்கர், இசையமைப்பாளர் டி.எம்.கிருஷ்ணா, ஏ.எஸ்.தௌலத், பூஜா பட், அமோல் பலேகர், சந்தியா கோகலே மற்றும் சுஷாந்த் சிங் எனப் பெரிய ஆதரவு அவருக்கு இருந்தது.
இந்த முதல் யாத்ராவில் அவர் 4,500 கிமீட்டர் வரை பயணம் மேற்கொண்டார். இது 12 மாநிலங்கள் வழியே நடைபெற்றது. இப்போது பாரத் நியாய யாத்ரா 14 மாநிலங்களை டார்க்கெட் செய்துள்ளது. இதில் 6,200 கிமீட்டர் பயணிக்க இருக்கிறார் ராகுல்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications