பெயருக்கு பின் ஜாதி போடுவதில் என்ன தப்பு? வள்ளுவரும் சிவனும் பறையர்! முருகன் குறவர் - சீமான் பேச்சு
" என் அப்பன் என்னை பனை ஏறிதான் படிக்க வைத்தார். என்ன பிரச்சனை உனக்கு?"
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயருக்கு பின் சாதி பெயர் சேர்ப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார். ராஜராஜ சோழனுக்கு 6 சாதிகள் உரிமை கோரி வருவதாகவும் அவர் விமர்சித்து உள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு கூட்டத்தில் ஆற்றிய உரை சர்ச்சையாகி உள்ளது. "ராதாபுரம் நாடார் தொகுதி என்று பட்டையம் போட்டு கொடுத்துள்ளார்கள். அங்கு ஒரு ஆதி தமிழ் குடி தம்பியை நிறுத்தினேன். 22 ஆயிரம் வாக்கு வாங்கி இருக்கிறார்.
ஆதி தமிழ் குடிகள் அரசியல் அதிகாரம் அற்ற அடிமைகளாக தள்ளப்பட்டு உள்ளோம் என்பதுதான் உண்மை. வேறில் இருந்து மீட்சி வரவேண்டும். ஆதிக்குடியே குறவர்தான். குறவர் குல தலைவர்தான் நம் இறைவன் முருகன். அதில் என்ன சந்தேகம் உள்ளது.

முருகன் குறவர்
சாதி பார்த்தால் அவரை கும்பிடாமல் வேண்டால் செல்லுங்கள். நாங்கள் கும்பிட்டுக்கொள்கிறோம். அதில் இருந்து அடுத்த குடி கீழே இருக்கிறோம். மலையும் மலை சார்ந்த இடத்தையும் குறிஞ்சி என்று முன்னோர்கள் வகுத்தார்கள். அங்கு குறவர் குடியாக இருக்கும்போது வேட்டையாடி சாப்பிட்டோம். கிழங்குகள், கனிகள் விவசாயம் செய்தோம்.

கோனார் என்றால் அரசர்
அதற்கு கீழ் இறங்கி வந்தோம். வேட்டையாடி உண்ட விலங்குகளை ஏன் வளர்க்கக்கூடாது என்று நினைத்து வளர்த்தோம். ஆயர் குடியானோம். ஆயர் என்றார் மேய்ப்பர் என்று அர்த்தம். அந்த குடிப்பெயர் கோன். அதன் தலைவர் கையில் ஒரு கோள் இருக்கும். எனவே கோன் என்றார்கள். கோன் என்றால் அரசன். அதை சொல்வதற்கு நமக்கு வெட்கம். அதனால் யாதவ் என்கிறார்கள்.

இந்தியாவே தேசம் இல்லை
நான் பறையன்.. ஆதித்தமிழ் என்று திமிராக பேசுவதில்லை. தலித் என்கிறார்கள். அரசன் என்பதைவிட சிறப்பு என்ன இல்லை? நாங்கள் தேசிய இனமாக திரள போகிறோம் என்கிறார்கள். இந்தியாவே ஒரு தேசம் இல்லை. என் முதல் தாய்க்குடி குறவர். 2 வது தாய்க்குடி கோனார். கெட்டவன் சாதியை பயன்படுத்திக்கொள்வார் என்று முத்துராமலிங்க தேவர் தெரிவித்தார்.

திருவள்ளுவரும் சிவனும் பறையர்
அதான் நல்லவரை பயன்படுத்திக்கொள்கிறது. என் சாதியை கண்டுபிடிக்க ரொம்ப நாளாக பெரும்பாடு பட்டார்கள். நீங்கள் என்ன ஆளுங்க என்று கேட்டால் ஒரு அடிய போட்டு அடியாள் என்று விட வேண்டும். பறையன் என்றால் தாழ்ந்தவரா? ஆதிப்பாட்டன் சிவனே பறையன் தான். வள்ளுவப் பறையனார்தான். அவனே பறையன் தான். அவனைவிடவா ஞானி இருக்கிறான் உலகத்தில். கொடுமை.

சிவநாடார் மகள்
எனக்கு அதில் ஒன்றும் இழிவு இல்லையே என்று எழுதி வைத்து உள்ளார்." பெரிய கட்டுரை இதில் என்ன இழிவு இருக்கிறது. ஆமாடா, என் அப்பன் என்னை பனை ஏறிதான் படிக்க வைத்தார். என்ன பிரச்சனை உனக்கு? நானே இழிவாக கருதவில்லை. நீ என்ன என்ரோஷினி.. சிவ நாடார் பொண்ணு. ஏன் ரோஷினி நாடார் என்று குறிப்பிட்டு உள்ளேன் என்பதற்கு ஒரு பெரிய கட்டுரை ஒன்றையே எழுதி இருக்கிறார். நான் ஏன் என் குடி அடையாளத்தை நான் போடுகிறேன்? நாங்கள் என்ன தொழில் செய்தோம்? எங்கள் பூர்வீகம் எது? எங்கள் வேர் எது? எல்லோரும் தெரிந்துகொள்ளட்டும். னை இழிவாக நினைப்பதற்கு?" என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

பெயருக்கு பின் சாதி
எனக்கு அதில் ஒன்றும் இழிவு இல்லையே என்று எழுதி வைத்து உள்ளார்." பெரிய கட்டுரை இதில் என்ன இழிவு இருக்கிறது. ஆமாடா, என் அப்பன் என்னை பனை ஏறிதான் படிக்க வைத்தார். என்ன பிரச்சனை உனக்கு? நானே இழிவாக கருதவில்லை. நீ என்ன என்னை இழிவாக நினைப்பதற்கு?" என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications