ஸ்டாலினா இப்படி.. "அவங்களை" திருப்திப்படுத்த பூஜைகளா?.. எகிறிய வன்னி அரசு.. கொந்தளித்த கி.வீரமணி
திராவிடர் கழக வீரமணி, திமுகவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: பகுத்தறிவாளர்கள் மற்றும் மதச் சார்பின்மைவாதிகளின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், குறிப்பிட்ட சமூகத்தை திருப்திபடுத்துவதை திமுக தவிர்க்க வேண்டுமென தி.க. தலைவர் வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், ஒரு குறிப்பிட்ட பிரிவினைரை திருப்தி செய்வது என்பதற்காக விதிகளை மீறி பகுத்தறிவாளர்கள், மதச் சார்பற்றவர்களது மனதில் புண்ணை ஏற்படுத்தலாமா? அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினையில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர், இதில் முரணாக ஈடுபடலாமா?" என்றும் சேகர்பாபுக்கு, மூத்த தலைவர் வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றைய தினம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், சிவராத்திரியை முன்னிட்டு, சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் வகையில் அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது.
அன்றைய தினம், மார்ச் 1ம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 2-ஆம் தேதி காலை 6 மணி வரை 12 மணி நேர மகா சிவராத்திரி விழா 100-க்கும் மேற்பட்ட ஆன்மீக கலைஞர்களைக் கொண்டு, சிறப்பாக நடைபெற இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

வன்னி அரசு
அமைச்சரின் இந்த பேட்டியானது கூட்டணி கட்சிகளுக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது... முதலில் எதிர்ப்பு குரல் கொடுத்தது விசிகதான்.. இந்த நிகழ்வு ஒரு மதத்தை வளர்ப்பது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது... அக்கட்சியின் மூத்த தலைவர் வன்னி அரசு, "அரசுத் துறையானது சில குறிப்பிட்ட நம்பிக்கையின் கருத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பாடுகளை ஏற்பாடு செய்யக்கூடாது என்று கூறியதோடு, கடவுள் அல்லது தனியார் நிறுவனங்கள் பின்பற்றும் பாணியை அரசு பின்பற்றக் கூடாது. இதுதான் திராவிட மாடல்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

கி.வீரமணி
அதுபோலவே, திராவிடர் கழகமும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.. பகுத்தறிவாளர்கள் மற்றும் மதச் சார்பின்மைவாதிகளின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், குறிப்பிட்ட சமூகத்தை திருப்திப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டுமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.வீரமணியும் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:

சேகர் பாபு
"தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு அவர்கள் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். "இந்து அறநிலையத் துறை வரலாற்றில் முதல் முறையாக மகா சிவராத்திரியன்று 100-க்கு மேற்பட்ட ஆன்மிகக் கலைஞர்கள் இணைந்து மார்ச் 1 ஆம் தேதி மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் சிவராத்திரி விழாவில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பர். எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு சிவாலயங்கள் அனைத்தும் மகாசிவராத்திரியன்று வண்ண விளக்குகளால் ஜொலிக்கும்" என்று விரிவாக செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் விளக்கியிருக்கிறார். இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர் என்பது செய்தி.

நெடுஞ்செழியன்
இந்து அறநிலையத் துறை, அதன் அதிகாரிகள், அமைச்சர் போன்றவர்களின் பணி என்பது பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவதோ, செயல்படுவதோ அல்ல.கோவில் சொத்து, வரவு - செலவுகளைக் கண்காணிப்பதும், சரி பார்ப்பதும், நிர்வகிப்பதும் மட்டும் தான்.நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள், அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, இந்து அறநிலையத் துறையும் அவர் பொறுப்பில் இருந்தது.
சிதம்பரம் நடராஜன் கோவிலுக்கு நாவலர் சென்ற போது, தீட்சதர்கள் அவருக்கு அளித்த பிரசாதத்தை இந்தக் கையில் வாங்கி, அந்தக் கைவழியாக விலக்கிவிட்டார்.

நாவலர் பேச்சு
அப்பொழுது ஆன்மிகவாதிகள் பெரிய அளவில் பிரச்சினையாக்கிய பொழுது, இந்து அறநிலையத் துறை அமைச்சர் பணி என்பது - ஆறு மரக்கால் அரிசி என்றால், அதைச் சரியாக அளந்து போடுகிறார்களா என்று கண்காணிப்பதே தவிர, பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவது இல்லை என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் - அமைச்சர் நாவலர். தந்தை பெரியார் "பலே, பலே நெடுஞ்செழியன்" என்று பாராட்டி அறிக்கை வெளியிட்டார் என்பதை நினைவுபடுத்துகிறோம். (விடுதலை, 16.4.1967). இந்து அறநிலையத் துறை அதற்குரிய பணிகளை மட்டும் செய்யட்டும் என்பதே நமது வேண்டுகோள்..

அறிக்கை
பார்ப்பனர்களைத் திருப்தி செய்வது என்பதற்காக விதிகளை மீறி பகுத்தறிவாளர்கள், மதச் சார்பற்றவர்களது மனதில் புண்ணை ஏற்படுத்தலாமா? அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினையில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர், இதில் முரணாக ஈடுபடலாமா?" என்று வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் சிக்கலை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விழாவுக்கு நாளை முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளிப்பாரா அல்லது தடை விதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications