ஆமா.. நீங்கள் நல்லவரா? கெட்டவரா?.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் ஓபிஎஸ்.. பின்னணி என்ன?
திமுக அரசை ஓபிஎஸ் பாராட்ட என்ன காரணம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சென்னை: அதிமுக மேலிட தலைவர்களின் அணுகுமுறை நாளுக்கு நாள் மாற்றத்தையும், அதேசமயம் குழப்பத்தையும் பரவலாக ஏற்படுத்தி வருகிறது... அந்த வகையில் மிக முக்கியமானவர் ஓபிஎஸ்..!
இந்த முறை ஆட்சி அமைந்ததுமே, அதிமுக மாஜிக்களின் ஊழல் புகார்களின் மீதான விசாரணைகள் நடத்தப்படும் என்று திமுக தரப்பு அன்றே சொல்லி இருந்தது.
அதன்படியே, ஆட்சிக்கு வந்ததும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.. சில மாஜிக்கள் வீடுகளில் ரெய்டும் நடத்தப்பட்டது.. இன்னும் அடுத்தடுத்த மாஜிக்கள் லிஸ்ட்டில் உள்ள நிலையில், அதற்கான வலுவான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.

திமுக
இதில் பல மாஜிக்கள் திமுகவுக்கு தூது அனுப்பி வந்தனர்.. ஆனால், எந்தவித சமாதான நடவடிக்கைகளும் திமுகவிடம் எடுபடவில்லை.. இப்போதைக்கு ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், போன்றோர் லிஸ்ட்டில் உள்ளனர்.. இதுபோக ஓபிஎஸ் மீதும் நிறைய புகார்கள் குவிந்துள்ளன.. அதில் ஒன்றான, புளியந்தோப்பு கட்டிட விவகாரமும் கையில் எடுக்கப்பட்டுவிட்டது.

வேளாண் சட்டம்
இப்படிப்பட்ட சூழலில்தான், ஓபிஎஸ்ஸின் பேச்சு சில தினங்களாகவே மாற்றத்தை தந்து வருகிறது.. மத்திய அரசின் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்தது... அப்போது அமைச்சர் துரைமுருகன், ஓ.பன்னீர்செல்வம் குறித்து சில கருத்துகளை முன்வைத்தார்... பிறகு அதிமுகவினர் மறுபடியும் அவைக்குள்ளே வந்தபோது, தாம் தெரிவித்த கருத்துகள் ஓ.பன்னீர்செல்வத்தின் மனதை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியிருந்தால், அவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் கோரினார்.

துரைமுருகன்
அப்போது பேசிய ஓபிஎஸ், துரைமுருகன் மீது தமக்கு தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளது.. தம்முடைய தனிப்பட்ட நிலையை எண்ணும்போது ஒரு பாடல் வரி நினைவுக்கு வருவதாகவும், அது "நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் இடையே இறைவனின் சிரிப்பு இதுதான் என் நிலை. என் நிலை அவைமுன்னவரான துரைமுருகனுக்கும் தெரியும்" என்றார்.

ஓபிஎஸ்
ஏற்கனவே, சட்டசபையில் துரைமுருகனையும், கருணாநிதியையும் ஓபிஎஸ் பாராட்டியும், புகழ்ந்தும் இருந்தநிலையில், இந்த பாட்டை பாடியதும், அது மேலும் குழப்பத்தை தந்துவிட்டது.. கண்ணதாசன் பாட்டு மூலமாக அதிமுகவுக்கு அவர் என்ன சொல்ல விரும்புகிறார்? ஏன் இப்படி திமுகவினரையும் மிஞ்சும் அளவுக்கு ஓபிஎஸ் புகழ்ந்து கொண்டிருக்கிறார்? உண்மையிலேயே இந்த பாட்டை ஓபிஎஸ் யாருக்காக சொன்னார்? என்பன போன்ற குழப்பங்கள் எழுந்துள்ளன.

இயலாமை
அதுமட்டுமல்ல, ஒருவேளை மத்திய அரசினை எதிர்த்து தங்களால் எதுவுமே செய்ய முடியாத இயலாமையின் வெளிப்பாடா இந்த பாடு? அல்லது அதிமுகவில் எல்லா அதிகாரங்களையும் தானே குவித்து கொண்டு, தன் செல்வாக்கை குறைத்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இயலாமையா இந்த பாட்டு? என்றெல்லாம் சந்தேகங்களும் எழுந்துள்ளன.

செல்வாக்கு
இப்போதைக்கு ஓபிஎஸ்ஸுக்கு கட்சிக்குள் செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது.. கேபினெட் பதவிக்கு இணையான பதவியான, எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் ஓபிஎஸ் எடப்பாடியிடம் பறிகொடுத்த நிலையில், தற்சமயம் குழம்பி போயுள்ளார்.. அவருக்கான மதிப்பும் தென்மண்டலங்கள், கொங்கு மண்டலங்களில் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.. மற்றொரு பக்கம் சசிகலாவின் வருகையை ஓபிஎஸ் முழுமையாகவும் பகிரங்கமாகவும் எதிர்க்காமல் உள்ளார்.. அதேசமயம், சசிகலாவை ஆதரிக்க எந்நேரமும் தயாராகவே உள்ளதாக தெரிகிறது.

ஒருங்கிணைப்பாளர்
ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை வைத்து கொண்டு எதுவுமே தன்னிச்சையாக செய்ய முடியாத நிலைமையும் உள்ளது.. பாஜகவும் தனக்கு கை கொடுக்கவில்லை என்ற ஆதங்கமும் ஓபிஎஸ்ஸுக்கு உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், திமுகவும் தன் பங்குக்கு ரெய்டு, விசாரணை, என்று ஆரம்பித்துவிட்டால், அதில் இருந்து எப்படி தன்னை காத்து கொள்வது என்ற பெரிய நெருக்கடியும் ஓபிஎஸ்ஸுக்கு எழுந்துள்ளது.. அதனால், திமுகவை சரிக்கட்டும் முயற்சியில் ஓபிஎஸ் இறங்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
அதுமட்டுமல்ல, இப்போதைக்கு எடப்பாடி பழனிசாமிக்கே நிறைய சிக்கல் உள்ளது.. கொடநாடு விவகாரத்தில் ஒருவேளை எடப்பாடிக்கு நெருக்கடி ஏற்பட்டால், அந்த சந்தர்ப்பத்தை ஓபிஎஸ் பயன்படுத்தி கொள்ளவும் தவற மாட்டார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..அதாவது ஒரு பக்கம் கட்சியை கைப்பற்றி கொண்டு, இன்னொரு பக்கம் திமுகவை சரிக்கட்டுவதுதான் ஓபிஎஸ்ஸின் தற்போதைய பிளான் உள்ளதாம்.. ஆனால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கும் இந்த முயற்சி எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை.

புகழ்ச்சி
ஒருவேளை இந்த தகவல் உண்மையானால், அதை அதிமுக தொண்டர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள் என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.. கருணாநிதி, துரைமுருகனை புகழ்வது, திமுக அரசை புகழ்வது போன்றவைகளை எல்லாம் அரசியல் நாகரீகம் என்று எடுத்து கொண்டாலும், ஓபிஎஸ் செய்வது கொஞ்சம் ஓவர்தான் என்கிறார்கள்..

காய் நகர்த்தல்
தன்னையும் தன் பதவியையும் காப்பாற்றி கொள்ளவே, ஓபிஎஸ் எடுக்கும் சுயநல காய் நகர்த்தல்கள் என்றும், ஆனால், அதிமுக தொண்டர்கள் இதை நிச்சயம் விரும்ப மாட்டார்கள் என்றும் அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்... முதல்வர் ஸ்டாலின், மாஜிக்களின் மீதான ஊழல் வழக்குகளை கையில் எடுக்கவும், சீனியர்கள் தானாகவே போய் அந்த வழக்குகளில் சிக்கி கொண்டதுடன், திமுகவுக்கும் துதி பாடி கொண்டிருந்தால், எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சி நாளடைவில் தன்னுடைய இமேஜை தொண்டர்களிடம் இழந்துவிடும் என்றும் கணித்து சொல்கிறார்கள்..!
-
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு!












Click it and Unblock the Notifications