ஹெலிகாப்டருக்கே "ஸ்கெட்ச்".. ஜெயந்தியை வளைத்த திமுக.. சசிகலா புள்ளி வைத்தால்.. கோலம் போடும் ஸ்டாலின்
அதிமுகவை சசிகலா கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: ஜெயந்தி உட்பட ஏராளமான அமமுக விசுவாசிகளை, திமுக தன்பக்கம் வளைத்து வருவது, அதிமுகவின் பலவீனத்தை மட்டுமல்ல, சசிகலா உட்பட அமமுகவின் செயலற்ற தன்மையைதான் காட்டுகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தனி தொகுதி... 2016ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவை சேர்ந்த ஜெயந்தி பத்மநாபன் எம்எல்ஏவாக இருந்தவர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பூசலில் தினகரன் அணியில் இணைந்தார் ஜெயந்தி. இதற்காகவே இவரோடு சேர்த்து 18 எம்எல்ஏக்கள் பதவிகள் பறிக்கப்பட்டன.

ஜெயந்தி
இதற்கு பிறகு, குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் அமமுக சார்பில் போட்டியிட்டார்.. ஆனால், தொகுதியில் இவர் எதுவுமே செய்யாததால் நிறைய அதிருப்திகளை சம்பாதித்தார்.. இப்படிப்பட்ட சூழலில் லைம்லைட்டில் மறுபடியும் வந்தார் ஜெயந்தி. சசிகலா ஜெயிலில் இருந்து வரப்போகிறார் என்ற செய்தி வந்ததுமே, கடந்த பிப்ரவரி 3-ம் தேதி வேலூர் கலெக்டர் ஆபீசுக்கு சென்றார் ஜெயந்தி.

மனு
சசிகலா தமிழகம் வருவதை முன்னிட்டு, மாதனூர் அடுத்த கூத்தம்பாக்கத்தில், தனியார் வாடகை ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவி வரவேற்பு அளிக்க உள்ளேன்... அதற்காக அனுமதி வேண்டும என்று கேட்டு கலெக்டர் சண்முக சுந்தரத்திடம் ஒரு மனுவையும் தந்தார்.

திமுக
இதெல்லாம் எதற்காக என்றால், இந்த அளவுக்கு சசிகலா மீது நம்பிக்கை வைத்திருந்த ஜெயந்தி, திமுகவுக்கு பறந்துவிட்டார்.. ஜெயந்தி ஒரு உதாரணம்தான்.. ஆனால், இன்னும் சசிகலா வாயே திறக்காமல், செய்தியாளர்களையும் சந்திக்காமல் உள்ளார்.. வெறும் ஆடியோ ரிலீஸை வைத்து கொண்டு, எத்தனை நாள் அரசியல் செய்ய முடியும்.. தினமும் தொண்டர்களை சந்தித்து, களத்தில் இறங்கி போராடியவர்களாலேயே வெற்றியை எளிதாக பெற முடிவதில்லை..

செல்வாக்கு
அப்படி இருக்கும்போது, இத்தனை காலம் அரசியலில் இல்லாமல், அதுவும் ஊழல் வழக்கில் கைதாகி ஜெயிலில் இருந்து வெளிவந்த நிலையில், எப்படி அதே ஆதரவும் செல்வாக்கும் தனக்கு இருக்கும் என்று சசிகலா நினைக்கிறார் என தெரியவில்லை.. அதேசமயம், சசிகலாவை குறைத்தும் எடைபோட்டுவிட முடியாது.. இது அரசியல் செல்வாக்கு என்றால்கூட பாரவாயில்லை.. ஆனால் சாதீயத்தை வைத்து அரசியல் நடத்தும் நிலையில், அவர் செல்வாக்கு ஓரளவு இருக்கத்தான் செய்கிறது.

தினகரன்
அதற்காக எத்தனை நாள் இப்படி ஆடியோ ரிலீஸ் செய்து கொண்டிருப்பார்? எத்தனை நாள் இப்படியே உசுப்பேத்தி கொண்டிருப்பார்? உண்மையிலேயே ஜெயலலிதா போல ஆளுமை உள்ளவர் என்றால், ஏற்கனவே தினகரன் ஆரம்பித்து வைத்து இருக்கும் அமமுகவுக்கு தலைமை தாங்கி இருக்கலாம்.. அதிமுகவில் அதிருப்தியில் உள்ளவர்களை அரவணைத்து, அமமுகவை வளர்த்திருக்கலாம். அப்படி அவர்களை அழைத்து, தேர்தலையும் சந்தித்து, கோட்டைக்கும் போனால், அமுகவுக்கு ஒரு கவுரவம் தந்த மாதிரி இருக்கும்? சுசிகலாவின் ஆளுமையும் வெளிப்படும்.

குழப்பம்
அதைவிட்டுவிட்டு அதிமுகவிலேயே குறியாக இருந்து, இவரும் குழம்பி, குழப்பியும் கொண்டுடிருக்கிறார்.. அதுவும் எம்ஜிஆரை எல்லாம் இழுத்து கொண்டு வருகிறார்.. இது இவர் மீதான நம்பகத்தன்மையையும் குறைத்து காட்டிவிட்டது.. வரணும்னு நினைச்சால் வந்துடணும்.. அரசியலில் இறங்கணும்ன்னு முடிவுபண்ணிட்டா இப்படி பேசிட்டு இருக்க கூடாது.. இறங்கிடணும்.. அப்போதுதான், உண்மையிலேயே ஆதரவாளர்கள் எவ்வளவு பேர் என்று தெரியவரும்.

துரோகம்
ரஜினி போல சொல்லி கொண்டும், நம்ப வைத்தும் கொண்டிருக்க கூடாது.. இப்போது ஆடியோவில் பேசிக் கொண்டிருப்பவர்கள்கூட ஆதாய விரும்பிகள்தான்.. எடப்பாடிக்கு துரோகம் செய்துவிட்டு, இப்படி மறைமுகமாக பேசி கொண்டிருப்பவர்கள்தான்.. ஆதாயம் கிடைக்காவிட்டால், இவர்களும் சசிகலாவை எட்டி உதைக்க ரொம்ப நாள் ஆகாது..

ஜெயந்தி
இவர்களை நம்புவதற்கு பதிலாக, ஜெயந்தி, பழனியப்பன் போன்ற உண்மையான விசுவாசிகளை நம்பலாம்.. இப்படி தொடர்ந்து விசுவாசிகளை விலக விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது 30 வருஷம் லாபி செய்தவருக்கு அழகல்ல.. வெறும் ஆடியோவால் அதிமுக என்ற ஆலமரம் அசைந்துவிடாது.. எல்லோரையும் இழந்துவிட்டு என்ன செய்ய போகிறார்? ஒருவேளை நாளைக்கு அதிமுகவே சசிகலா கைக்கு வந்தாலும், அங்கே அரசியல் செய்ய சசிகலா மட்டும்தான் இருப்பார் என்பதை ஆணித்தரமாக இங்கே பதிவு செய்ய வேண்டி உள்ளது..!
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications