"செத்து போ.. யார்கூட டான்ஸ் ஆடுனே".. கடைசி நேரத்தில் ரூமில் நடந்தது என்ன.. பரபரப்பு தகவல்கள்
சித்ராவின் கணவர் தற்போது ஜெயிலில் உள்ளார்
சென்னை: சித்ராவின் நடத்தை மீது ஹேமந்த் சந்தேகப்பட்டதுதான், அவரது தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதன் அடிப்படையிலேயே ஹேமந்த் கைதாகி உள்ளார். இது தொடர்பாக ஹேமந்த் போலீசாரிடம் சொன்னதாக வேறு சில தகவல்களும் வெளியாகி வருகின்றன.
Recommended Video

சித்ரா 9-ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதில் இருந்தே, அது சம்பந்தமான பல சந்தேகங்கள், யூகங்கள், குழப்பங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
ஒரு பக்கம் விசாரணைகள் நடந்து வந்தாலும், சித்ரா இறந்தது தற்கொலைதான் என்று போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொன்னாலும், சித்ரா மரணம் தொடர்பான பல உண்மைகள் மறைந்துகிடப்பதாகவே அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

விசாரணை
அதனால்தான், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்... சித்ரா கணவர் ஹேமந்த்திடம் கடந்த 6 நாட்களாக போலீசார் விசாரித்தனர்.. அவர் சொன்ன வாக்குமூலத்தை எல்லாம் பதிவு செய்து கொண்டனர்.. இதனிடையே தன் மகள் சித்ராவின் தற்கொலைக்கு ஹேமந்த்தான் காரணம் என சித்ராவின் அம்மா விஜயா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். அவர்களிடம் ஆர்டிஓ விசாரணையும் நடந்து முடிந்த நிலையில், ஹேமந்த் பெற்றோரிடமும் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது
இந்த சமயத்தில்தான், நேற்றிரவு ஹேமந்த் கைதானார்.. சித்ராவின் நடத்தை மீது இவருக்கு சந்தேகம் இருந்துள்ளது.. ஆரம்பத்தில் காதலுக்காக உயிரையே தருவது போல, கையை அறுத்து கொண்டவர் ஹேமந்த்.. சித்ராவுக்கு ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கிலும் 4 மணி நேரம் அவருக்காக காரிலேயே காத்து கிடந்தவர்.. எனினும் நாளடைவில்தான் சித்ரா மீது சந்தேகம் இவருக்கு அதிகமானதாக கூறப்படுகிறது.

டான்ஸ்
சீரியலில் நெருக்கமான காட்சி நடித்தது முதல் இது அதிகமாகிவிட்டது.. கல்யாணம் ஆன முதல் நாள், ஒரு ரியாலிட்டி ஷோவில் சித்ரா பங்கேற்றுள்ளார்.. அங்கு சக நடிகர்களுடன் டான்ஸ் ஆடியுள்ளார்.. நடிகர்களுடன் சித்ரா டான்ஸ் ஆடினதுதான் கணவர் ஹேமந்த்திற்கு பிடிக்கவில்லையாம்.. திருமணம் நடந்த அன்றே, எந்த நடிகருடன் டான்ஸ் ஆடினாய் என்று கேட்டு டார்ச்சர் கொடுத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

செத்து போ
அதேபோல, தற்கொலை செய்த 9-ம் தேதி அன்றும், ஷூட்டிங் சென்றுவிட்டு வந்த சித்ராவிடம், மறுபடியும் யாருடன் டான்ஸ் ஆடினாய் என்று கேட்டுள்ளார்.. இதுதான் தகராறாக வெடித்துள்ளது என்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் அந்த தகராறு முற்றியதில் "செத்து போ" என ஹேமந்த் சொன்னதால், சித்ரா தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீஸ் விசாரணையில் கூறப்படுகிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications