வாட்ஸ் அப் யூஸ் பண்ணுறீங்களா.. அரசு மேஜர் வார்னிங்.. இந்த எண்களில் இருந்து கால் வந்தால் உஷார்!
சென்னை: வாட்ஸ் அப் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்ட இந்த கால கட்டத்தில், புதிய நூதன யுக்தி ஒன்றை பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகிறதாம்.. இது தொடர்பாக தகவல் தொடபுத்துறை எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மக்கள் மத்தியில் தற்போது ஸ்மார்ட் பயன்பாடு அத்தியாவசியம் என்று சொல்லும் அளவுக்கு மாறிவிட்டது. அனைவரது கையிலும் ஆறாம் விரலை போல ஸ்மார்ட் போன் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்று சொன்னால் மிகையல்ல.. அந்த அளவுக்கு எல்லோர் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் தவழுகின்றன.

பிடித்த உணவகங்களில் சாப்பாடு ஆர்டர் போடுவது முதல் பணப்பரிமாற்றம் செய்துவது வரை அனைத்து வசதிகளும் ஸ்மார்ட் போன்களில் வந்துவிட்டன. ஒரு காலத்தில் மெசேஜ் அனுப்புவதற்கு 5 ரூபாய் வரைக்கும் கட்டணம் வசூலித்த காலம் மாறிப்போய்.. தற்போது தனியாக கட்டணம் எதுவும் செலுத்தாமல் மெசேஜ்களை அனுப்பும் அளவுக்கு வசதிகள் வந்து விட்டது.
DOT எச்சரிக்கை: அதற்கு வாட்ஸ் அப் செயலியே முக்கிய காரணமாக உள்ளது. வெறும் குறுஞ்செய்தி மட்டும் இன்றி வீடியோக்கள், பிடிஎப் ஃபைல்கள், ஆடியோக்கள், ஆடியோ, வீடியோ கால் வசதி என ஏகத்திற்கும் வசதிகள் பெருகிவிட்டன. இதனால், வாட்ஸ் அப் செயலி இல்லாத ஸ்மார்ட் போன்களையே காண முடியாது என்று சொல்லும் அளவுக்கு அனைவரும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகிறார்கள்.
இதனால், சைபர் கிரைம் மோசடி கும்பலும் பல நூதன முறைகளில் மக்களிடம் இருந்து பணத்தை பறிக்க முயற்சித்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது புதிய முறையில் மோசடி நடப்பதாக எச்சரிக்கை ஒன்றை தகவல் தொடர்புத்துறை (DOT) விடுத்துள்ளது. இது தொடர்பாக விடுக்கபட்டுள்ள எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்த எண்களில் இருந்து வந்தால்: தகவல் தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக வாட்ஸ் அப்பில் சிலருக்கு அழைப்புகள் வருகின்றன. அதில், உங்கள் எண் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறி தனிப்பட்ட விவரங்கள், வங்கி விவரங்கள் போன்றவற்றை வாங்கி அதன் மூலம் மோசடி நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
+92-xxxxxxxxxx, +254, +84, +63, என்று தொடங்கும் எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வந்தால் (www.sancharsathi.gov.in) என்ற இணையம் மூலம் ரிபோர்ட் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சமீப காலமாக அதிகரிக்கும் மோசடிகள்: மக்களிடையே தற்போது பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து இருப்பதால் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளன. வங்கியில் இருந்து பேசுகிறோம்.. ஏடிஎம் கார்டு காலாவதி ஆகிவிடும் என்ற டெக்னிக்குகளை எல்லாம் விட்டு விட்டு தற்போது வேறு யுக்திகளை கையாள தொடங்கிவிட்டனர் சைபர் கிரைம் குற்றவாளிகள்.
சுங்கத்துறையில் இருந்து பேசுகிறோம்: அதாவது, உங்களுக்கு பரிசு பொருள் வந்துள்ளது.. அதை பெற குறிப்பிட்ட கட்டணம் செலுத்துங்கள் என தொடர்பு கொண்டு பேசி பணத்தை கறக்கிறார்கள். அதேபோல, உங்கள் பெயரில் போதை பொருள் போன்ற சட்ட விரோத பொருட்கள் வந்து இருக்கிறது. சுங்கத்துறையில் இருந்து பேசுகிறோம்.. சிபிஐயில் இருந்து பேசுகிறோம்.. வழக்கில் சிக்காமல் இருக்க குறிப்பிட்ட அளவு பணத்தை நாங்கள் சொல்லும் எண்ணுக்கு அனுப்புங்கள்..
என்பன போன்ற பல நூதன முறைகளில் முறைகேடுகள் அதிகரித்துவிட்டன. எனவே, இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க மக்கள் மிகவும் உஷாராக இருக்கவேண்டும் என்று ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறக் கூடாது என்று சைபர் கிரைம் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications