56 இன்ச்! பசுமை புரட்சி இந்தியாவையும் வித்துட்டாங்க! பிரதமர் மோடியை சாடிய ஆனந்த் ஸ்ரீனிவாசன்
சென்னை: ‛‛நம்ம 56 இன்ச்.. பசுமை புரட்சி செய்த இந்தியாவையும் வித்துட்டீங்களே'' என பிரதமர் மோடியை மறைமுகமாக தமிழ்நாட்டை சேர்ந்த பொருளாதார நிபுணரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ஆனந்த் ஸ்ரீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தை சேர்ந்தவர் ஆனந்த் ஸ்ரீனிவாசன். பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார்.
இவர் தொடர்ச்சியாக சேமிப்பு, முதலீடு குறித்து பேசி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதனால் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பெரும்பாலும் பரீட்சயமான நபராக இவர் உள்ளார்.

ரூ.40 ஆயிரம் சம்பள பேச்சு
சமீபத்தில் கூட இவரது பேச்சுக்கள் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. அதாவது ரூ.40 ஆயிரம் சம்பளம் இல்லலைனா ஏன் திருமணம் பண்ணிக்கிறீங்க.. சென்னையில் ரூ.40 ஆயிரம் இன்றி திருமணம் செய்தால் வாழ்க்கை சிரமமாக அமையும் எனக்கூறியவர் அதற்கான செலவு விபரங்களை பட்டியலிட்டார். இந்த வீடியோ அதிகமாக சமூக வலைதளங்களில் பரவியது.

வெளிவந்த மீம்ஸ்கள்
இந்த வீடியோ சென்னையின் வாழ்க்கை முறையை அவர் எடுத்து கூறி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக அவரை பலர் பாராட்டினாலும் கூட சிலர் அவரை எதிர்த்தனர். அதாவது 90ஸ் கிட்ஸ்களை ஆனந்த் ஸ்ரீனிவாசன் பயமுறுத்துகிறார். இவர் சொல்வது போல் வாழ்க்கையை வாழ்வது மிகவும் சிரமம் எனக்கூறினர். இதற்கிடையே தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்த் ஸ்ரீனிவாசனை கூறிய கருத்துகள் அடிப்படையில் மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன.

பிரதமர் மோடி மீது விமர்சனம்
இந்நிலையில் தான் ஆனந்த் ஸ்ரீனிவாசன் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛ நம்ம 56'' நாங்க உலகத்துக்கே கோதுமை ஏற்றுமதி ப்ணுவோம்னு சொன்னாரு. ஆனா FCI கோதுமை இறக்குமதி பணினாதான் சமாளிக்க முடியும்னு சொல்லறாங்க. கோதுமை பொருட்கள் எல்லாம் விலை ஏறப்போகுது. பசுமை புரட்சி பண்ணிய இந்தியாவையும் வித்துடீங்களே..'' என கூறியுள்ளார்.

கோதுமை தட்டுப்பாடு
அதாவது உலகில் அதிக கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடுகளாக ரஷ்யா-உக்ரைன் உள்ளன. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் இருநாடுகளில் இருந்தும் கோதுமை ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கோதுமை உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உள்ள இந்தியாவின் பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியது. இந்த வேளையில் தான் உலக நாடுகளுக்கு தேவையான கோதுமையை ஏற்றுமதி செய்வோம் என மத்திய அரசு உறுதி அளித்தது.

விமர்சனத்துக்கான காரணம் இதுதான்
ஆனால் தற்போது இந்தியாவிலேயே கோதுமை தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. வடமாநிலங்களில் இந்த ஆண்டு நிலவிய கடும் வெப்பத்தால் இந்தியாவின் கோதுமை உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது. இதனால் இந்தியாவுக்கான கோதுமை தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் பிற நாடுகளில் இருந்து கோதுமை இறக்குமதி செய்ய வேண்டும் என்று இந்திய உணவு கழகம் கூறியுள்ளது. இதனை குறிப்பிட்டு தான் ஆனந்த ஸ்ரீனிவாசன் தனது டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும் விமர்சனம்
ஆனந்த் ஸ்ரீனிவாசன் அடிக்கடி இந்தியாவின் நிதி நிலைமை, பணவீக்கம் பற்றியும் கருத்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் கூட இந்தியாவின் நிதிநிலைமை, பணவீக்கம் மோசமான நிலையில் இருப்பதாக அவர் கூறியிருந்தார். அதோடு இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை குறிப்பிட்டு அதாவது மத உணர்வுகளை தூண்டும் இலங்கை அரசின் கொள்கை தான் அந்நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தெரிவித்து இருந்தார். இதன்மூலம் அவர் இந்தியாவுக்கு அவர் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்?












Click it and Unblock the Notifications