சுப்ரீம் பவர்.. ஸ்டாலினின் மூவ்.. பிடுங்கப்படும் "பெரிய" பதவி.. திமிறியெழும் திமுக! பாஜக பார்க்குதே
சென்னை: விரைவில் திமுகவில் நிறைய மாற்றங்கள் நடக்க போவதாக சொல்கிறார்கள்.. இந்த மாற்றங்களின் பின்னணியில் அமைச்சர் உதயநிதியின் அதிரடிகள் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரச்சாரங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தபோதும்கூட, மறுபக்கம் அனைத்து தொகுதிகளிலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேர்தல் பொறுப்பாளர்களிடம் நேரடியாகவே நிலவரத்தை விசாரித்து கொண்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்..

உதயநிதி: அதேபோல, அனைத்து அமைச்சர்களையும், மா.செ.க்களையும் தொடர்புகொண்டு இறுதிக்கட்ட நிலவரத்தையும் போனில் கேட்டுக் கொண்டேயிருந்தார்.. இதுபோக, உளவுத்துறையின் ரிப்போர்ட்டையும் கேட்டு பெற்றிருக்கிறார் ஸ்டாலின்.. இதற்கு நடுவில், சபரீசனின் "பென்" அமைப்பு தந்திருந்த ஃபைனல் ரிப்போர்ட்டின் அடிப்படையிலும் சில தகவல்களை சேகரித்திருக்கிறார் ஸ்டாலின்.
இதில் யார் யாரெல்லாம் தொகுதிகளில் சரியாக பணியாற்றவில்லையோ அவர்களின் லிஸ்டையும் பெற்றிருக்கிறார்.. இவ்வளவு ரிப்போர்ட்கள் கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், "ரிசல்ட் வரட்டும்" என்று மட்டும் காத்திருக்கிறாராம்.. அந்தவகையில், திமுகவில் நிறைய பேருக்கு இப்போதே உதறல் எடுத்து வருகிறது.
தேர்தல் முடிவுகள்: இப்படிப்பட்ட சூழலில்தான், ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவுகள் வந்ததுமே அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி வலியுறுத்தியிருக்கிறாராம். இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.
முதல்வர் ஸ்டாலினைபோலவே, திமுக மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து உதயநிதியும் விலாவரியாக கேட்டறிந்திருக்கிறார்.. அப்போது திமுகவில் வட்ட செயலாளர்கள் சிலருக்கு மட்டுமே 2 தொகுதிகள் உள்ள நிலையில், மற்றவர்களுக்கு 3 முதல் 5 தொகுதி வரை கையில் வைத்திருக்கிறார்கள். இதனால், தொகுதிக்குள் நிறைய அதிருப்திகளும், சலசலப்புகளும் எழுந்து வருவதாக உதயநிதிக்கு ரிப்போர்ட் சென்றதாம்.
அதிகார பரவல்: எனவே, மாவட்ட செயலாளர்களிடம் மட்டுமே குவிந்து கிடக்கும் அதிகாரத்தை பரவலாக்கும் விதமாக, சில மாவட்ட செயலாளர்களின் பதவியை பறிக்கப்படலாம் என்கிறார்கள்.. இவர்களுக்கு பதிலாக, இளைஞரணி நிர்வாகிகள் பலருக்கு மாவட்ட செயலாளர் பதவி தரலாம் என்றும் இதனால், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவை இன்னும் வலிமைப்படுத்த முடியும் என்றும் உதயநிதி தரப்பு நம்புகிறதாம்.
இந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பேயே, இளைஞர் அணியில் சிலரை மா.செ. பதவிக்கு உயர்த்த திட்டமிடப்பட்டதாம். ஆனாலும், அது கடைசிநேரத்தில் முடியாமல் போகவும், இப்போது தேர்தல் ரிசல்ட் வந்ததுமே, திமுகவில் நிறைய மாற்றங்கள் செய்யப்படலாம் என்கிறார்கள்.
விரைவில் மாற்றம்: தேர்தலிலும் + அமைச்சர் பணியிலும் ஃபெர்மான்ஸ் குறைவாக இருந்த அமைச்சர்களிடமிருந்து மா.செ.பதவிகளும் பறிக்கப்படலாம் என்ற தகவல் ஏற்கனவே வட்டமிட்ட நிலையில், அதிகாரத்தை அதிகமாக குவித்து வைத்திருக்கும் முக்கிய தலைவர்களிடமிருந்தும் பதவி பறிக்கப்படலாம் என்கிறார்கள்.
ஆக, கட்சிக்குள் புதிய ரத்தம் பாய்ச்சுவதுபோல, உதயநிதி மேற்கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளும், திமுகவுக்கு வலிமை தந்துவருவதாக கூறுகிறார்கள் உடன்பிறப்புகள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications