அரசு பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை.. அடடே, இத்தனை நாள் லீவா? தமிழக பள்ளிக்கல்வித்துறை சொல்வதென்ன?
சென்னை: 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலான வகுப்புகளுக்கு இன்று முதல் காலாண்டு தேர்வு ஆரம்பமாகியிருக்கிறது.. இதையடுத்து, காலாண்டு விடுமுறைக்கான தகவல் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. இது பள்ளிகளின் கவனத்தை பெற்று வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் கோடை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதேபோல, ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜுன் 1ம் தேதி அல்லது ஜுன் முதல் வாரத்தில் மறுபடியும் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

லோக்சபா தேர்தல்: ஆனால், இந்த முறை லோக் சபா தேர்தல் காரணமாக 1 முதல் 9ம் மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்கப்பட்டது... இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டும் இருந்தது.
அதாவது, 5 சனிக்கிழமைகள் முழு வேலை நாளாக பள்ளிகள் இயங்கி வந்த நிலையில் அடுத்து வரும் 7 சனிக்கிழமைகளில் அதாவது, செப்டம்பர்- 21, 28, அக்டோபர்-5, 19, 26, நவம்பர் -9, 23 ஆகிய தேதிகளில் அரை நாள் மட்டும் வகுப்புகளை நடத்தப்படும் என கல்வித்துறை திடீரென உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
கடும் வெயில்: கடந்த சில நாட்களாகவே அக்னி நட்சத்திரம் போலவே, வெயில் கொளுத்தி வருவதால், சனிக்கிழமை மட்டும் தற்போது அரைநாளாக பள்ளி நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது...இப்படிப்பட்ட சூழலில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்வியாண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது..
அந்தவகையில், முதலில் கல்வியாண்டு நாட்காட்டியில் 220 வேலை நாட்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.. ஆனால், இதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. அதனால்தான், அதனை 210 ஆக குறைத்து, திருத்தப்பட்ட அட்டவணையும் கல்வித்துறை வெளியிட்டது.
அறிவிப்பு: தற்போது, பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான தேர்வும் ஆரம்பமாகியிருக்கிறது. 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலான வகுப்புகளுக்கு இன்று காலாண்டு ஆரம்பமாகியிருக்கிறது.. மற்ற வகுப்புகளுக்கும் இனிமேல்தான் தேர்வு ஆரம்பிக்க போகிறது.
எப்படியும் வருகிற 27ந்தேதிக்குள் காலாண்டு தேர்வை முடிக்கும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறது... இந்த தேர்வுகள் அனைத்தும் முடிந்ததுமே, வருகிற சனிக்கிழமை முதல் அதாவது, 28-ந்தேதி 2-ந்தேதி 2ம் தேதி வரை என மொத்தம் 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
எனவே, காலாண்டு விடுமுறைக்கு பிறகு வருகிற 3-ந்தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது அரசு பள்ளி மாணவர்களின் கவனத்தையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications