சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சல்லிகள்".. கருவிழி லேசா அசைந்தது.. சிபிஐ எங்கே.. அம்மா இட்லி சாப்பிட்டாங்களே.. எகிறும் லட்சுமணன்

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து பத்திரிகையாளர் லட்சுமணன் ஒன் இந்தியாவுக்கு பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: ஆறுமுகசாமியின் அறிக்கை அபத்தமாகவே உள்ளது.. அதனால், அதை குப்பையில் தூக்கி போட வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் காட்டமாக கூறியுள்ளார்.

ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும், மயக்கமடைந்த பிறகு, அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்று ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பகீரை கிளப்பிவிட்டுள்ளது.

சசிகலா, சசிகலாவின் உறவினரான டாக்டர் கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

"சம்பவம்" இருக்கு.. திமுக அரசை கலைக்கிறார்களா.. உளவுத்துறைக்கு குறி? அண்ணாமலை மீது பாய்ந்த லட்சுமணன்

 குபீர் குபேந்திரன்

குபீர் குபேந்திரன்

இவர்கள் 4 பேருக்கு மட்டும் ஏன் தொடர்பு? ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி போன்றோர் பெயர் அறிக்கையில் இல்லையே? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. சில நாட்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அப்போது, அவரும் இந்த ஆணைய அறிக்கை குறித்து சில சந்தேகங்களை வெளிப்படுத்தியிருந்தார்.. "ஓபிஎஸ் குற்றவாளிதான். இந்த அறிக்கையில் அவர் பெயர் விடுபட காரணம், ஓபிஎஸ்ஸையே ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை..

 ஜூஸ் ஃபோட்டோ

ஜூஸ் ஃபோட்டோ

"முதல்வராக இருந்த என்னையும் பார்க்க விடவில்லை" என்று ஓபனாகவே ஓபிஎஸ் சொல்லியிருந்தாரே.. ஆனால், சசிகலா அப்படி இல்லை.. ஜெயலலிதா ஜூஸ் குடித்த போட்டோவை ரிலீஸ் பண்ண சசிகலா, ஒரு ஆளுநரை பார்த்தோ அல்லது வெங்கய்யா நாயுடுவை பார்த்தோ ஏன் பேசவில்லை? அவர்களுடன் பேசி ஒரு போட்டோவை ஏன் வெளியிட முடியவில்லை? 30 மணி நேரம் இறந்த நேரம் மறைக்கப்பட்டதாக ஆணையம் சொல்கிறது.. இந்த 30 மணி நேரம் எதற்காக என்றால், யார் அடுத்த முதல்வராவது? யாரை அமைச்சராக்குவது? இப்படி உள்ளடி வேலை அங்கே நிறைய நடந்திருக்கும்.. ஒருவேளை ஜெயலலிதாவை வெளிநாட்டுக்குஅழைத்து சென்றிருந்தால், பிழைக்க வாய்ப்பு இருந்திருக்கும், அதை தடுத்து விட்டாரே என்ற கோபம் சசிகலா மீது மக்களுக்கு நிச்சயம் எழும் என்று கூறியிருந்தார்.

 சிஆர் சரஸ்வதி

சிஆர் சரஸ்வதி

இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் லட்சுமணனும், நம் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவரும் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளார்.. லட்சுமணன் நம்மிடம் சொன்னதாவது, "2012-க்கு பிறகு ஜெ-சசி இடையே சுமூக உறவு இல்லை என்கிறது ஆணைய அறிக்கை.. சசிகலா மீது குற்ற நடவடிக்கையை தொடர வேண்டும் என்று சொல்லும் ஆணையம், அப்படியானால், சசிகலாவை ஏன் விசாரணைக்கு அழைக்கவில்லை? பிரமாணப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தபோதிலும், சந்தேகப்பார்வை உங்கள் மீது விழுவதால், ஆணையத்தின் இறுதி அறிக்கைக்கு முன்பு நீங்கள் ஆணையத்தில் ஆஜராவது அவசியம் என ஆணையம் சசிகலாவுக்கு ஒரே ஒரு கடிதமாவது அனுப்பியதா?

 கருவிழி அசைந்தது

கருவிழி அசைந்தது

ஏன் கூப்பிடவில்லை? ரிச்சர்ட் பீலேவையும் கூப்பிட மறுக்கிறாரே ஏன்? கேட்டால் ஃபிளைட் சார்ஜ் அதிகமாகிறது என்கிறார். அதை பற்றி இவருக்கு என்ன கவலை? மயங்கிவிழுந்த அன்று, அந்த நிமிடம் தொடங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 25 நிமிடம் வரை, வேகத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள்.. அங்கே சசிகலா உட்பட யாரும் எதையும் இயற்கைக்கு மாறாக, சந்தேகப்படும்படியாக எந்த செயல்களும் நடக்கவில்லை என்று முதல் தீர்ப்பையும் தந்துவிடுகிறார் ஆறுமுகசாமி..

 இட்லி, சட்னி

இட்லி, சட்னி

அப்படியானால் ஜெ.சசி இவர்களுக்குள் உறவு சரியில்லை என்றாலும்கூட, ஜெயலலிதாவை தாக்கினார்கள், விஷம் வைத்திருக்கவும் வாய்ப்பு உள்ளது என்று சிலர் குற்றஞ்சாட்டினாலும், அதையெல்லாம் நிராகரிப்பதாக தீர்ப்பில் சொல்லி உள்ளார் ஆறுமுகசாமி. அம்மா இட்லி சாப்பிட்டாங்க என்று சிஆர் சரஸ்வதி சொன்னது 100 சதவீதம் நிஜம்.. இட்லி மட்டுமல்ல, அவர் என்னவெல்லாம் சாப்பிட்டார் என்று ஆறுமுகசாமியே எழுதிஉள்ளார்.. அதனால் அது நகைச்சுவை கிடையாது.. மரணமடைந்ததும்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றார்கள்..

 திதி

திதி

மரணமடைவதற்கு முந்திய நாள், அதாவது டிசம்பர் 4ம் தேதி, காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள், தானே படுக்கையில் இருந்து, எழுந்து உட்கார்ந்துள்ளார்.. யார் உதவியும் இல்லாமல் 10 வினாடி எழுந்து நின்றுள்ளார் ஜெயலலிதா.. அதுக்குப்பிறகுதான் தலை சுற்றுவதாக சொல்லி உட்கார்ந்துவிட்டார்.. அப்படியானால் என்ன அர்த்தம்? இறப்பதற்கு முன்பு சுயநினைவுடன்தான் ஜெயலலிதா இருந்துள்ளார்.. வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு செல்வது முதல் போட்டோ வெளியிடுவது வரை அனைத்தையும் ஜெயலலிதா மட்டும்தான் முடிவு செய்வார்.. அவர் முடிவை அவர் மட்டுமே எடுப்பார்..

 டார்ச் + கருவிழி

டார்ச் + கருவிழி

ஆக, மரணம் குறித்த அத்தனை குற்றச்சாட்டுகளும் பொய் என்றே ஆகிவிட்டது.. ஏனென்றால் 4ம் தேதி உயிருடன் இருந்ததாக ஆறுமுகசாமியே ஒப்புக் கொள்கிறார்.. ஆனால், 4ம் தேதி நாலரை மணிக்கு இறந்துவிட்டாக, திதி கொடுத்ததை சாட்சியாக கொண்டுவந்து வைக்கிறார்.. இதுதான் அபத்தம்.. மறுநாள் காலை நியூரோ சர்ஜன் உள்ளே வந்து ஜெ.வின் கண்ணில் டார்ச் அடிக்கிறார்.. அப்போது கருவிழி அசைகிறது.. இதை அவரே பதிவு செய்துள்ளார்.. இறந்த உடலில் கண் துடிக்குமா? இப்படி அபத்தமான அறிக்கையாக இருப்பதால்தான், அதை குப்பையில் தூக்கி போட வேண்டும் என்று ஆங்கில நாளிதழ்கள் சொல்கின்றன.. அதை நானும் வழிமொழிகிறேன் என்றார்.

English summary
When did Jayalalithaa die and what does the Arumugasamy commission report say, asks Senior journalist Lakshmanan: Exclusive
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X