ஒரே நேரத்தில்.. ஒரே நாளில்.. ஒரே இடத்தில் "அந்த சம்பவம்".. நல்ல நேரம் ஆரம்பம்.. அட எடப்பாடி பழனிசாமி
சென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமான தேர்தல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.. இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் குறித்த தகவல் ஒன்று பரபரத்து காணப்படுகிறது.
மத நம்பிக்கை உள்ளவர்கள் பொதுவாக ராகு கால நேரத்தில் நல்ல காரியங்களைத் தொடங்க மாட்டார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும், கட்சிகளின் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கு இல்லைதான். எனவே, அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்வது வழக்கம்.

தொகுதிகள்: குறிப்பாக ஜெயலலிதா, எந்தச் செயலையும் நல்ல நாள், நேரம் பார்த்து செய்வார். தொகுதி ஒதுக்கீடு, கூட்டணி அறிவிப்பு, வேட்பு மனு தாக்கல் என எதுவாக இருந்தாலும் அது குறிக்கப்பட்ட நல்ல நேரத்தில்தான் நடக்கும்.
அவர் மட்டுமில்லை, கட்சியில் உள்ள அதிமுக வேட்பாளர்களாகட்டும், அல்லது இரட்டை இலைச் சின்னத்தில் நிற்கும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் ஆகட்டும், எல்லோருக்கும் இந்த நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்றே உத்தரவுதான் பிறப்பிப்பார்.அதுமட்டுமல்ல, அவரது ராசிக்கு ஏற்ப நல்ல நாளில் அனைத்து வேட்பாளர்களையும் வேட்பு மனு தாக்கல் செய்யும்படி உத்தரவு வருமாம்.
கருணாநிதி: இதே நடைமுறை, மறைந்த கருணாநிதியில் இருந்து அன்புமணி வரை தொடர்ந்து நீடித்து வருகிறது... கடந்த 2019 தேர்தலை பொறுத்தவரை, மார்ச் 17ம் ஏகாதசி மற்றும் சுபமுகூர்த்த நாள் என்பதால் அதிமுக, திமுக, அமமுக ஆகிய 3 கட்சிகளிலுமே ஒன்றாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், எம்பி தேர்தல் நெருங்கி வரும்சூழலில், அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருமே நல்ல நாள் பார்த்து அன்றைய தினம் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்வது வழக்கம் என்பதால், திமுக வேட்பாளர்கள் 25-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது.
அருண் நேரு: இதில், பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் அருண் நேரு மட்டும் வேட்பு மனுவை நேற்றே தாக்கல் செய்துவிட்டார்.. எனினும் சில வேட்பாளர்கள் 27- ம் தேதி மனு தாக்கல் செய்ய முடிவெடுத்திருக்கிறார்களாம்.
அதேபோல, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை பொறுத்தவரை 40 தொகுதி வேட்பாளர்களும் நாளை அதாவது மார்ச் 24 திருச்சியில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ஒன்றாக அறிமுகப்படுத்தப்பட போகிறார்களாம்.. அதன் பிறகு மறுநாள் அதாவது, 25- ம் தேதி அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் ஒரேநாளில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறாராம்.
அட்வைஸ்: அன்றைய தினம் மனுதாக்கல் செய்ய முடியாதவர்கள் 27-ம் தேதி மனுதாக்கல் செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனராம்.. ஆனால், விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், 25-ம் தேதியே வேட்பு மனு தாக்கல் செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாராம்.
அதிமுக, திமுகவை தவிர, மற்ற கட்சி வேட்பாளர்களும் 25, 27 ஆகிய 2 நாட்கள் நல்ல நாள் என்பதால் அன்றைய நாட்களில் மனுதாக்கல் செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.. எனவே, அன்றைய தினம், அனைத்து கட்சியிலுமே, அதிக மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்பதால், கலெக்டர் அலுவலகங்களில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications