பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்... ஜனவரி 2-வது வாரத்தில் தமிழக சட்டசபை கூட்டம்..?
சென்னை: தற்போது நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

இதற்கான முன்னேற்பாடுகளை சட்டசபை செயலகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
கடந்த முறை நடைபெற்றதை போல் கலைவாணர் அரங்கத்தில் கூட்டம் நடைபெறுமா அல்லது செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே கூட்டம் நடக்குமா என்ற விவரம் வெளியாகவில்லை.

ஜனவரி 2-வது வாரம்
2021-ம் ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும் என்பதால் சட்டசபை கூடுவதற்கான தேதி கோரி சட்டசபை செயலகம் தரப்பிலிருந்து அதற்கான கோப்புகள் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முக்கிய அறிவிப்புகள்
வரும் மே மாதம் 24-ம் தேதியுடன் சட்டசபை முடிவுக்கு வரவுள்ளதால் ஆளுநர் உரை மற்றும் அதற்கு பிறகு நடைபெறும் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஏராளமான சலுகைகளும், அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த இரண்டு கூட்டத்தொடர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடியதாக இருக்கிறது.

ஆளுநர் உரை
ஆளுநர் உரை மற்றும் அறிவிப்புகள் பற்றி விவாதிப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இந்த வாரத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எங்கே கூட்டம்?
செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே சட்டசபை கூட்டத்தை நடத்துவதா இல்லை கடந்த முறை போல் கலைவாணர் அரங்கத்தில் வைத்து கூட்டத்தை நடத்துவதா என்பது பற்றி சட்டசபை செயலகம் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதுகுறித்த முடிவை அவர்கள் இன்னும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications