குரூப் 4 முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்.. டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இளைஞர்களே கவனம்
சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட, 244 காலியிடங்களை நிரப்பக் கடந்த ஜூன் மாதம் குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கிடையே இந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியான பிறகே கட் ஆப் உள்ளிட்ட தகவல்கள் தெரிய வரும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு அரசுப் பணிகள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே நிரப்பப்பட்டு வருகிறது. பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தான் நிரப்பி வருகிறது.

டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல வகை தேர்வுகள் நடத்தப்படும். தமிழ்நாட்டில் பல லட்சம் இளைஞர்கள் இந்த போட்டித் தேர்வுக்குத் தயாராவது வழக்கம். குறிப்பாக குரூப் 4 தேர்வுகளைப் பலரும் எழுதுவார்கள்.
குரூப் 4 தேர்வுகள்: கடந்த ஜனவரி 30ம் தேதி இந்தாண்டு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.. பிப். 28ம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவசாகம் அளிக்கப்பட்டது. இந்தாண்டு மொத்தம் 6,244 காலியிடங்களை நிரப்பத் தேர்வுகள் நடத்தப்பட்டன. விஏஓ, வனக் காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட காலியிடங்கள் நிரப்பத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். குரூப் 4 தேர்வுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும் என்பதால் டிகிரி, என்ஜினியரிங் படித்தவர்கள் மட்டுமின்றி பள்ளிப் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பித்தனர். கடந்த ஜூன் 9ம் தேதி குரூப் 4 தேர்வு நடந்தது. இதில் பல லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதினர்.
எப்போது: குரூப் 4 தேர்வு நடந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இதற்கிடையே இது தொடர்பான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 4 தேர்வுக்கான தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் அதாவது அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அக்டோபரில் எந்த தேதியில் தேர்வு முடிவு வெளியாகும் என்பது அறிவிக்கப்படவில்லை. எந்த தேதியில் வெளியாகும் என்பது குறித்து சில வாரங்களில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
தேர்வு முடிவு வெளியான பிறகே கட் ஆப் உள்ளிட்ட தகவல்கள் தெரிய வரும். குரூப் 4 தேர்வு எழுதிய பல லட்சம் மாணவர்கள் தேர்வு முடிவுகள் குறித்து ஆர்வமாக இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
எழுத்து தேர்வு: குரூப் 4ஐ பொறுத்தவரை இதில் நேர்முகத் தேர்வு இருக்காது.. எழுத்துத் தேர்வு மட்டுமே இருக்கும். எழுத்துத் தேர்வில் கட் ஆப் மார்க் அடிப்படையில் வேலை வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் குரூப் 4 தேர்வு எழுத இதுவே காரணமாகும். குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கூட அதற்கு முன்பு பயிற்சியாக குரூப் 4 தேர்வை எழுதுவதை வழக்கமாக கொண்டு இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications