"மூச்சு திணறுது".. பாஜக போடும் கணக்கு.. சைலண்ட்டாக நொறுக்கும் ஸ்டாலின்.. ரவீந்திரன் துரைசாமி கணிப்பு

பாஜக எதிர்ப்பு ஓட்டுக்களை பெற்றுவிட திமுக முயன்று வருவதாக ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவை வலுவாக எதிர்த்தால், அதற்குரிய வாக்கு கிடைக்கும் என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர்ந்து இருக்கிறார் என்றாலும், எதிர்ப்பு வாக்குகள் சிதற வேண்டும் என்று பாஜகவும் விரும்புவதாக, ரவீந்திரன் துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் தொடர்ந்து பல்வேறு பரபரப்புகள் அரங்கேறியே வருகிறது. இந்தச் சூழலில் இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பிரத்தியேக பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம், "திமுக பொதுக்குழுவில், பாஜக வெல்வதற்கு எந்த கீழ்த்தரமான செயலையும் செய்யக் கூடும். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைக்காதவர்கள் தமிழக மக்கள்.. அதனால் பாஜக தமிழகத்தில் மூச்சு திணறுகிறது" என்று முதல்வர் கடுமையாக விமர்சித்திருந்தது குறித்து கேள்வி எழுப்பினோம்.. அதற்கு ரவீந்திரன் துரைசாமி அளித்த பதில்தான் இது:

"கீழ்த்தரமான"

"கீழ்த்தரமான" என்ற வார்த்தையை ஸ்டாலின் தவிர்த்திருக்கலாம்.. ஜனநாயக ரீதியில்தான் பாஜகவினரும் அரசியல் செய்து வருகிறார்கள்.. தமிழகத்தில், பாஜக வீக்காகவே உள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்த முறை குறிப்பிட்ட அளவு சீட் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் செயல்படுகிறார்கள்.. சமஸ்கிருதத்தைவிட, தொன்மையான மொழி தமிழ் என்று பலமுறை சொல்கிறார் மோடி.. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சின்ன சின்ன விஷயங்களைகூட மோடி எடுத்து பேசுகிறார்..

 பத்தமடை பாய்

பத்தமடை பாய்

பத்தமடை பாய் முதல் அத்தனை விஷயங்களையும் விலாவரியாக சொல்கிறார்.. தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளையும் எடுத்து சொல்லி விளம்பரப்படுத்தி வருவதுடன், மோடிக்கான இமேஜையும் தமிழகத்தில் பாஜகவினர் உயர்த்தி கொண்டுதான் இருக்கிறார்கள்.. எனினும் திமுகவை விட பலவீனமாக பாஜக உள்ளதால், இந்த ஒன்றரை வருடத்திற்குள் அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.. அதிமுக விவகாரத்தினால், பாஜகவுக்கான இமேஜும் சரிய தொடங்கி உள்ளது..

நெருக்கடி

நெருக்கடி

2024 தேர்தலை பற்றி கவலைப்படாமல் 2026 தேர்தலை பற்றி எடப்பாடி பழனிசாமி கவலைப்படுவதால், இதுவும் பாஜகவுக்கு நெருக்கடியை தந்துள்ளது.. இதற்கு எந்தவிதமான வியூகங்களை பாஜக எடுக்க போகிறது? எடப்பாடி மீதான நம்பிக்கை பாஜகவுக்கு அதற்குள் வந்துவிடுமா? என்றெல்லாம் இப்போதே சொல்ல முடியாது.. ஆனால், எதிர்ப்பு என்பது பாஜகவுக்கு அதிகம் உள்ள நிலையில், சற்று ஓங்கி அடித்தால், இந்த ஓட்டுக்களை திமுக பக்கம் திருப்பக்கூடும் என்ற நோக்கில்தான் ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளதாக தெரிகிறது.

 மூச்சு திணறுது

மூச்சு திணறுது

பாஜகவுடனான நேரடி போட்டி என்றால், 2004-ல் திமுக ஸ்வைப் செய்தது போல, 2019-ல் ஸ்வைப் செய்வது போல, இந்த முறையும் ஸ்வைப் செய்துவிடலாம் என்றும் ஸ்டாலின் நினைப்பது போல தெரிகிறது.. ஆனால், பாஜக என்ன வியூகம் நமக்கு இதுவரை தெரியவில்லை.. அதேசமயம், கிறிஸ்தவ, முஸ்லிம் ஓட்டுக்கள் திமுகவுக்கு ஏராளமான வந்துவிழும் என்று ஸ்டாலின் நன்றாகவே அறிந்து வைத்துள்ளார்.. காரணம், இந்த ஓட்டுக்கள்தான், கடந்த 2006-ல், கலைஞர் கருணாநிதியை முதல்வராக்கியது.. 2021-ல் ஸ்டாலின் ஆட்சியை பிடிக்கவும் இந்த கிறிஸ்தவ முஸ்லிம் ஓட்டுக்கள்தான் காரணம்.

ஸ்வைப்

ஸ்வைப்

எனவே, பாஜகவை வலுவாக எதிர்த்தால், அதற்குரிய வாக்கு கிடைக்கும் என்பதே ஸ்டாலின் உணர்ந்து இருக்கிறார். அதை வைத்தே அவர் அரசியல் செய்து வருகிறார்... அதேநேரம் பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதற வேண்டும் என்று பாஜகவும் விரும்புகிறது. இதனால் தான் 2014-ல் அந்தக் கூட்டணியால் சில இடங்களை பெற முடிந்தது... ஒருவேளை எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க முடியவில்லை என்றால் அது பாஜகவுக்கு தோல்வியில் முடியும். கடந்த காலங்களில் எடப்பாடிக்கு டெல்லி அளித்தது போல முழு ஆதரவை இப்போது அவர்கள் தருவதில்லை என்பதால், பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பதே அவர்கள் நோக்கம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+