"ஓபிஎஸ்ஸை" தேடும் அந்த கண்கள்.. ஒருத்தருமே கூப்பிடல.. திடீர்னு எடுத்த முடிவு.. "அவர்" வாய்ஸ் கேட்குமா

ஓபிஎஸ் விரைவில் ஈரோடு தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய போவதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இத்தனை நாட்களும் சத்தமேயில்லாமல் அமைதி காத்துவந்த ஓபிஎஸ், தற்சமயம், மெகா பிளான் ஒன்றை கையில் எடுத்துள்ளார்.. நடக்க போகும் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் என்னதான் செய்ய போகிறார்? என்பதை எடப்பாடி தரப்பும் மிக நுட்பமாக கவனிக்க துவங்கி உள்ளதாம்..!!
ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, இந்த இடைத்தேர்தலில் பல கணக்குகளை போட்டு வந்தார்.. எதிர்பார்த்ததே வேறு.. ஆனால் நடந்தது வேறு ஒன்று.

பாஜக கேட்டுக் கொண்டதையடுத்து, ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை இடைத்தேர்தலில் வாபஸ் பெற்றுள்ளார்.. இரட்டை இலை எடப்பாடி தரப்புக்கு சென்றுள்ளது.. இது ஓபிஎஸ்ஸுக்கு பெருத்த பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது..!!

 பலஹீனங்கள்

பலஹீனங்கள்

மேலும், இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவாக பிரச்சாரத்துக்காகவாவது தங்களை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தவருக்கு எடப்பாடி பழனிச்சாமியும் சரி, பாஜ தரப்பும்சரி எந்தவித அழைப்பும் விடுக்காதது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் தந்து வருவதாக தெரிகிறது... இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட எல்லா வியூகங்களும், ஓபிஎஸ்ஸை பலவீனப்படுத்த எடுத்து கொண்ட முயற்சியாகவே பார்க்கப்பட்டும் வருகிறது.. "கூட்டணி" என்று பெயரை பணிமனை பேனரில் பெயர் மாற்றியதுகூட, தன்னிடம்தான் கட்சி உள்ளது என்பதை ஓபிஎஸ் தரப்புக்கு காட்டிக்காள்வதற்காகத்தான் என்றார்கள் அரசியல் விமர்சகர்கள்..

 திடீர் வாபஸ்

திடீர் வாபஸ்

விட்டுக்கொடுத்தது எங்களின் பெருந்தன்மை என்று ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து சொன்னாலும், தற்சமயம் எந்த முடிவு எடுப்பதென்று தெரியாமல் விழிப்பதாகவே தெரிகிறது.. இதுவரை, பிரச்சாரத்துக்கு வரும்படி எடப்பாடி பழனிசாமி அழைப்பும் விடுக்கவில்லை.. அவர் அழைப்பு விடுக்காதவரை, ஓபிஎஸ்ஸும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போகப்போவதில்லை என்றே சொல்லப்படுகிறது.. இது ஒருபுறம் இருக்க, வேட்பாளர் திடீர் வாபஸால் அணியில் இருந்து வெளியேற நிர்வாகிகள் எடுக்கும் முடிவால் டென்ஷனில் இருக்கிறாராம் ஓபிஎஸ்.

 2 ஆப்ஷன்கள்

2 ஆப்ஷன்கள்

வேட்பாளர் திடீர் வாபஸ் பெறப்பட்டதால் டெல்டா மாவட்டத்தில் உள்ள ஓபிஎஸ் அணியை சேர்ந்த பெரும்பாலான நிர்வாகிகளுக்கு விருப்பம் இல்லையாம்.. ஓபிஎஸின் இந்த திடீர் முடிவால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓபிஎஸ் அணியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் குழப்பத்திலும், அப்செட்டிலும் இருப்பதாக சொல்கிறார்கள். அதனால்தான், எடப்பாடி அணி வேட்பாளர் பிரசாரத்திற்கோ அல்லது வாக்கு சேகரிப்புக்கோ யாரும் செல்லக்கூடாது என்று நிர்வாகிகளுக்குள் முடிவெடுத்து இருப்பதாகவும் 2 நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது. நிர்வாகிகளின் வருத்தத்திற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.

 செங்குந்தர் வாக்கு

செங்குந்தர் வாக்கு

சின்னம் கிடைக்காமல், ஒருவேளை 2 அணிகளும் சுயேட்சையாக களத்தில் நின்றிருந்தால், அது எடப்பாடிக்கு ஒருவகையில் பின்னடைவாக இருந்திருக்குமாம்.. மேலும், தற்போது எடப்பாடி நிறுத்தியுள்ள வேட்பாளர் தென்னரசு கொங்கு சமூகத்தை சேர்ந்தவர்.. ஆனால், இந்த தொகுதியில் செங்குந்த முதலியார் சமூகத்தினரின் வாக்கு வங்கி பிரதானமாக உள்ளது.. இதை கணக்கு செய்துதான், முதலியார் சமூகத்தைச் சேர்ந்த செந்தில் முருகனை வேட்பாளராக நிறுத்தியிருந்தார் ஓபிஎஸ்.. அந்த முதலியார் வாக்குகளை, நிச்சயம் ஓபிஎஸ்ஸால் கணிசமாக பெற்றிருக்க முடியும், அதை ஓபிஎஸ் தவறவிட்டுவிட்டாரே என்று நொந்து கொள்கிறார்களாம்.

 சத்தமேயில்லையே

சத்தமேயில்லையே

தேர்தல் நெருங்கிவரும்நிலையில், தலைவர்கள் எல்லாம் ஈரோட்டில் மையம் கொண்டுள்ள நிலையில், ஓபிஎஸ் சத்தமில்லாமல் இருக்கிறார்.. பிரச்சாரத்துக்கு செல்வீர்களா? என்று ஓபிஎஸ்ஸிடம் செய்தியாளர்கள் 2 நாள் முன்பு கேட்டார்கள்.. கண்டிப்பாக எல்லோரிடமும் சொல்லிவிட்டு தான் பிரச்சாரத்திற்கு போவேன் என்று கூறியிருந்தார்.. ஒருவேளை ஓபிஎஸ் பிரச்சாரம் செய்வதானால், என்ன சொல்லி வாக்கு கேட்பார்? யாருக்காக வாக்கு சேகரிப்பார்? என்ற அடுத்த சந்தேகமும் பலருக்கும் எழாமல் இல்லை.

 ஆசை + குழப்பம்

ஆசை + குழப்பம்

இப்படிப்பட்ட குழப்பத்தை, ஓபிஎஸ் ஆதரவாளரும், மூத்த தலைவருமான மருது அழகுராஜ், தன்னுடைய ஒரு பேட்டியில் நேற்று முன்தினம்கூட வெளிப்படுத்தி இருந்தார். "இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் கடுமையான தண்டனையை கொடுப்பார்கள்... ஆனால் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.. இப்படியொரு குழப்பமான மனநிலைக்கு தொண்டர்கள் ஆளாகியுள்ளார்கள்" என்று ஓபனாகவே சொல்லியிருந்ததை இங்கு நினைவுகூரவேண்டி உள்ளது.. ஆனால், இரட்டை இலைக்காக, தேர்தலில் வேட்பாளரை வாபஸ் பெற்றநிலையில், பிரச்சாரத்துக்கும் செல்லாமல் இருந்தால், அது தொண்டர்களிடம் மேலும் அதிருப்தியை உண்டாக்கிவிடும் என்பதையும் ஓபிஎஸ் தரப்பு நன்றாக உணர்ந்துள்ளது. அதனால்தான், ஒரு முக்கிய முடிவை தற்போது எடுத்துள்ளதாக தெரிகிறது.

வாய்ஸ் யாருக்கு

வாய்ஸ் யாருக்கு

வரும் 20ம் தேதி சென்னையில் ஓபிஎஸ் தரப்பு, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு இடைத்தேர்தல் தொடர்பாக எடுக்க வேண்டிய முக்கிய முடிவு குறித்து விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.. மேலும், ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு அறிக்கை வெளியிடலாமா என்று யோசித்து வருவதாகவும், அதுகுறித்து மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை நேரில் கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இரட்டை இலைக்கு ஆதரவு கேட்டு ஏன் தொகுதிக்குள் செல்ல முடியவில்லை என்ற காரணத்தை கூறவும், ஓபிஎஸ் டீம் தயாராகி வருவதாக சொல்கிறார்கள்.

 நேம் லிஸ்ட்

நேம் லிஸ்ட்

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு அறிக்கை வெளியிட ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை நேரில் கேட்கவும், இடைத்தேர்தல் தொடர்பாக எடுக்க வேண்டிய முக்கிய முடிவு குறித்து விவாதிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.. ஸ்டார் பேச்சாளர்கள் லிஸ்ட்டில் பெயர் இல்லாததால் அறிக்கை மூலம் இரட்டை இலைக்கு வாக்கு கேட்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம்.. அதேபோல, செல்போன் வழியாக, குரல் பதிவின் மூலமும் இரட்டை இலைக்கு வாக்கு கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேரிகிறது..

 டபுள் கேம்

டபுள் கேம்

அப்படி வாக்கு கேட்கும்போது, இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் ஏன் என்பதற்கு விரிவான விளக்கம் தரவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.. பிரச்சாரத்துக்கு இதுவரை ஒருத்தரும் அழைக்காத நிலையில், இப்படி ஐடியாவை ஓபிஎஸ் டீம் எடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.. இதன்மூலம் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்பது போலாகிவிடும், தொண்டர்களின் மதிப்பையும் இழக்க தேவையில்லை என்பதே தற்சமயம் ஓபிஎஸ் டீமின் வியூகமாக தெரிகிறது.. அடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+